முகத்தில் கரும்புள்ளிகள் நீங்க இயற்கை வழிமுறைகள்!
ரோஜா இதழ்களுடன் பாதாம் பருப்பை ஊறவைத்து அரைத்து முகத்தில் தடவி வரவேண்டும்.
வாழைப்பழம் அல்லது பப்பாளிப் பழத்துடன் தேன்கலந்து பூசலாம்.
வெள்ளரிச்சாறு, புதினா சாறு, எலுமிச்சை சாறு சமஅளவு கலந்து முகத்தில் பூசிவர அவை மறையும்
உருளைக்கிழங்கை வெட்டி தேய்த்து வரலாம்.
ஜாதிக்காய் அரைத்து தடவி கரும்புள்ளி மறையும்.
முகத்தில் வெண்ணெய் தடவி எலுமிச்சைசாறு கலந்த வெந்நீரால் ஆவிபிடித்து அழுத்தித் துடைக்க கரும்புள்ளி நீங்கும்
ஹைட்ரஜன் பெராக்ஸைடு, பன்னீர், விளக்கெண்ணெய் தலா ஒரு டீஸ்பூன் கலந்து முகத்தில் தடவி பிறகு டவலை சூடான நீரில் நினைத்துப் பிழிந்து முகத்தில் வைத்து பிறகு பஞ்சால் துடைக்கவும்.
வெள்ளரிச்சாறு, போரிக் பௌடர் தலா ஒரு டீஸ்பூன் கலந்து கரும் புள்ளிகளில் தடவி 5 நிமிடம் கழித்து மசாஜ் செய்து துடைக்க அவை நீங்கும்.
கோதுமை தவிடு, பால் தலா ஒரு டேபிள் ஸ்பூன் கலந்து கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவி வர அவை வலுவிழந்து உதிர்ந்துவிடும்.
பொலிவான உதடுகளுக்கு:
தினமும் படுக்கும் முன் கொத்தமல்லிசாறு அல்லது பீட்ரூட் சாறு தடவி வர உதடுகள் சிவப்பழகு பெறும்
முட்டையின் வெள்ளைக் கருவோடு தேன் கலந்து உதடுகளில் தடவி வர சிவப்பாகும்
தண்ணீர் நிறைய குடிக்கவேண்டும்.
தேன் தடவ உதடு வெடிக்காமல் இருக்கும்
பனிக்காலங்களில் தேங்காய் எண்ணை தடவவும்.
வெண்ணை அல்லது நெய் தடவி வர வெடிப்புகள் வராது.
10 கிராம் ரோஜா இதழ்களுடன் 10 கிராம் டீத்தூள் சேர்த்து 50 மி.லி நீருடன் கொதிக்க வைத்து வெது வெதுப்பான இருக்கும்போது உதட்டில் ஒத்தடம் கொடுக்க கருப்பு மறையும்.