
கோரைக்கிழங்கு, பூலான் கிழங்கு, கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் சமஅளவு எடுத்து மிஷினில் அரைத்தை வைத்துக்கொள்ளவும். குளித்து முடித்ததும் இந்த பௌடரை முகத்தில் பூசிக்கழுவுங்கள். கோரைக்கிழங்கு முகத்தின் அநாவசிய முடிகளை நீக்கும். பூலான் கிழங்கும், கஸ்தூரி மஞ்சளும் தோலை மிருதுவாக்கி வடுக்களை மறையச்செய்யும்.
சர்க்கரை ஒரு ஸ்பூன், ஜாதிக்காய் பௌடர் அரை டீஸ்பூன், லவங்கம் பௌடர் அரை டீஸ்பூன், சந்தனம் ஒரு டீஸ்பூன் மற்றும் ஏடு இல்லாத தயிரில் கலந்து பேஸ்ட் ஆக்குங்கள். இதை முகத்தில் ஒருநாள் விட்டு ஒருநாள் மசாஜ் செய்துவர முகம் குளிர்ச்சியாகி வடுக்கள் மறையும்.
மஞ்சள் கிழங்கு 1, வேப்பந்தளிர் கொஞ்சம் இரண்டையும் விழுதாக அரைத்து இரவு முகத்தைத் கழுவி இந்த விழுதைச் தடவுங்கள் பதினைந்து நிமிடங்கள் கழித்துத் கழுவவும். இதனால் வடுக்களால் ஏற்பட்ட கருமை நீங்கி சருமம் மிருதுவாகும்.
சரும வறட்சியால் வறண்டுபோகும் சருமம் மின்ன வைக்க இயற்கை வழிமுறைகள்.
சிலருக்கு வறண்டு சருமம் வெள்ளையாக ஆகும். ஒரு துண்டு விரலி மஞ்சளை நறுக்கிக் கொள்ளுங்கள். விஷ்ணு துளசி 5 இலைகள், குப்பைமேனி இலை சிறிது சேர்த்து விழுதாக அரைத்து வெள்ளை படிந்த பகுதியில் பூசி பத்து நிமிடம் கழித்துத் கழுவவும். தினமும் இதைச் செய்யலாம்.
குளிக்கும் முன் சுத்தமான நல்லெண்ணையை முகத்திலும் சருமத்திலும் தடவி கழுவுங்கள். சோப் பயன்படுத்தவேண்டாம்.
ஒருநாள் விட்டு ஒருநாள் உடம்பு முழுவதும் ஆலிவ் எண்ணை தடவி மறுநாள் மிதமான சூட்டில் குளியுங்கள்.
ஒரு பாட்டிலில் எலுமிச்சைசாறு போட்டு குலுக்கி மூடிவையுங்க. தினமும் பாதத்தில் இரவு தடவ வெடிப்புகள் மறைந்து பாதம் மிருதுவாகும்.
சிவப்பு துவரம்பருப்பு, பாசிப்பருப்பு தலா100 கிராம் இரண்டையும் நைசாக அரைத்து அதனுடன் ஒரு கப் தேங்காய் எண்ணை கலந்து மிக்சியில் அரைத்து பேஸ்ட் ஆக்குங்கள். இந்த ஸ்கின் லோஷனை உச்சி முதல் பாதம் உள்ளங்கால் வரை தடவி தலைக்குத் குளியுங்கள்
மேற்கூறியவற்றையெல்லாம் தொடர்ந்து செய்தால் சரும வறட்சி நீங்கி சருமம் பொன்னாக மின்னும்.