பாதாம் பருப்பை ஊறவைத்து அரைத்து சம அளவு சோயாமாவை கலந்து அதில் 2 ஸ்பூன் பன்னீரைக் கலந்து முகத்தில் தடவி ஊறிய பின் கழுவ முகம் சுருக்கம் நீங்கும்.
பாலேடு இரண்டு ஸ்பூன் எடுத்து அதில் இரண்டு ஸ்பூன் பன்னீர் கலந்து முகத்தில் தடவி வெது வெதுப்பான நீரில் கழுவினால் சரும இருக்கம் நீங்கி மென்மையாகும்.
முட்டையின் வெள்ளைக் கருவில் தேன் கலந்து கழுத்து, முகம், நெற்றி ஆகிய இடங்களில் தடவி அரைமணி நேரம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவ முகச்சுருக்கம் நீங்கும்.
ஆலிவ் ஆயினால் முகத்தை மசாஜ் செய்யவும். பிறகு முகத்தைத் கழுவாமல் ஒரு காரட் சாறுடன் 2 டீஸ்பூன் கடலை மாவு சேர்த்து அரைமணி நேரம் ஊறவைத்து முகம் கழுவ நல்ல பலன் தெரியும்.
முட்டையை உடைத்து அதனுடன் சில துளி எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி உலர வைத்துப் பிறகு கழுவ முகம் பளபளக்கும்.
ஒரு வாழைப்பழத்தை அரைத்து முகத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவ முகம் பட்டு போல மின்னும்.
சிலருக்கு முகம் வறட்சியாக இருக்கும். விளக்கெண் ணையை முகத்தில் அழுத்தித் தேய்க்கவேண்டும். இரவில் இப்படித் தடவி காலையில் முகத்தைத் கழுவ முகம் பொலிவாக்கும்.
ஒரு டேபிள் ஸ்பூன் தேனுடன் கால் டீஸ்பூன் காரட்சாறு கலந்து முகத்திலும் கழுத்திலும் தடவி உலர விடவும். பஞ்சை வெதுவெதுப்பான நீரில் நனைத்த துடைக்கவும். முகச்சுருக்கம் மறையும்.
க்ளிசரினுடன் சிறிது தேன்கலந்து முகத்தில் தடவி குளிர்ந்த நீரை விட்டுக் கழுவ வேண்டும்.
வாழைப்பழத்துடன் பன்னீர் கலந்து முகத்தில் தடவி ஊறவைத்து கழுவ முகம் பொலிவாகும்.
பாதாம் எண்ணையுடன் தேனைக் கலந்து பூசி வர முகம் பிரகாசமடையும்
முதல் நாள் இரவு 4 பாதாம் பருப்பு ஊறவைத்து மறுநாள் அரைத்து பாலேடு பன்னீர் சேர்த்து முகத்தில் பேக்போட முகம் பிரகாசமாக ஆகும்.
முகத்தில் தேமல் இருந்தால் கோதுமை தவிட்டுடன் சாதம் வடித்த கஞ்சி சேர்த்து தடவ தேமல் மறையும்.