பார்லர் போகாமலேயே முகம் ஜொலி ஜொலிக்க கோதுமை மாவில் ஃபேஸ் பேக்கா? என்னங்கடா?

Skin glow
Skin glow
Published on

முகப் பொலிவிற்கு இயற்கை வழிமுறை:

1. வறண்ட சருமத்திற்கு வைட்டமின் ஈ ஆயில் மற்றும் யோக்ஹர்ட்:

தேவையான பொருள்கள்:

இரண்டு டீஸ்பூன் வைட்டமின் ஈ ஆயில், இரண்டு டீஸ்பூன் யோகர்ட், ஒரு டீஸ்பூன் எலுமிச்சை ஜுஸ் மற்றும் சில துளிகள் ரோஸ் வாட்டர்.

தயாரிப்பு:

இரண்டு டீஸ்பூன் வைட்டமின் ஈ உடன் யோகர்ட், எலுமிச்சை ஜுஸ் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்துக் கலக்கவும். இதை ஒரு பாட்டிலில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கவும். முகத்தை சுத்தம் செய்து மேற்கூறிய கலவையை முகத்தில் வட்டவடிவில் பூசவும். இரவில் பூசி காலை கழுவ முகம் பொலிவாகும்

வைட்டமின் ஈ ஆயில் முகத்தை மேன்மையாக்கும். ரோஸ் வாட்டரில் வைட்டமின் ஏ, பி3, சி, ஈ மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால் முகத்தைப் பளபளக்கச் செய்யும். வைட்டமின் ஈ ஆயில் முகச்சுருக்கம் மற்றும் பிக்மென்டேஷனை தடுக்கக் கூடிய பண்பு உள்ளது. இதன் ஆன்டி ஆக்ஸிடன்ட் இரத்த ஓட்டத்தை அதிகரித்து சருமத்தின் நீரேற்றத்தை அதிகரிக்கும்.

எலுமிச்சை இயற்கையான பிளீச்சிங் பண்பு உள்ளதால் முகத்தில் கருமையை போக்கும். கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும்.

யோகார்ட்டில் உள்ள லாக்டிக் அமிலம் இறந்த செல்களை நீக்கி சுருக்கத்தை போக்கும்.

***********************

முகப் பொலிவிற்கு கோதுமை மாவு பேக்குகள்:

கோதுமை மாவில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் முகத்தின் கருமையைப் போக்கி நீரேற்றமாக வைக்கும். இதை பயன்படுத்தி ஃபேஸ் மாஸ்க்குகள் உபயோகிக்கும் போது முகத்தில் பளபளப்பு கிடைக்கும். கருமை நீங்கி பிரகாசமாகும். முகம் மென்மையாகும்.

கோதுமை மாவு, மலாய் மற்றும் ரோஸ் வாட்டர்:

சிறிது கோதுமை மாவுடன் மலாய் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து கெட்டியான பேஸ்ட் ஆக்கவும். இக்கலவையை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ முகத்தில் இறந்த செல்கள் நீங்கி பொலிவாக இருப்பதை உணர்வீர்கள்.

கோதுமை மாவு, பால், ரோஸ் வாட்டர்:

இரண்டு டேபிள்ஸ்பூன் கோதுமை மாவில் சிறிது பால் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து முகத்தில் பூசவும். காய்ந்த பிறகு வாஷ் செய்யவும். கோதுமை மாவு முகக்கருமையை நீக்கும். ரோஸ் வாட்டர் பளபளப்பான பிரகாசமான முகத்தைத் தரும்.

கோதுமை மாவு, தயிர் மற்றும் தேன்:

இரண்டு டேபிள்ஸ்பூன் கோதுமைமாவு, இரண்டு டீஸ்பூன் தயிர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து முகம், கழுத்து பகுதிகளில் பூசவும். பிறகு 15 நிமிடம் கழித்து கழுவ முகம், சுருக்கம் மற்றும் கோடுகள் இல்லாமல்  இயற்கையான பொலிவுடன் மிளிருவதைக் காண்பீர்கள்.

கோதுமை மாவு மற்றும் தண்ணீர்:

சிறிது கோதுமை மாவுடன் தண்ணீர் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்துத் கழுவவும். இது சிறந்த எக்ஸ்ஃபோலியேட்டாக செயல்பட்டு முகத்தை மிளிர வைக்கும்.

கோதுமை மாவு, மஞ்சள் பொடி மற்றும் எலுமிச்சை ஜுஸ்:

கோதுமை மாவுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி, சில சொட்டுக்கள் எலுமிச்சை ஜுஸ் சேர்த்து கலந்து முகத்தில் பூசவும். பிறகு 15 நிமிடம் கழித்து கழுவவும். எலுமிச்சையின் பிளீச்சிங் பண்பு நல்ல முகத்தை பிரகாசமாக்குவதுடன் ஹைப்பர் பிக்மென்டேஷனும் நீக்கி பொலிவாக்கும்.

மேற்கூறிய இயற்கை மாஸ்குகளால் மாசு மருவற்ற முகத்தை பெறலாம். 

இதையும் படியுங்கள்:
நரைத்த முடியை கருகருவென மாற்றும் கருப்பு சீரம் பற்றித் தெரியுமா?
Skin glow

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com