Black serum that turns hair black
Beauty tips

நரைத்த முடியை கருகருவென மாற்றும் கருப்பு சீரம் பற்றித் தெரியுமா?

Published on

ம் சமையலறையிலேயே முடியை கருகருவென வளரச்செய்யக் கூடிய பொருட்கள் உள்ளன. அவைகளைக்கொண்டு இயற்கை முறையில் தயாரிக்கப் படும் சீரம் முடி வளர்ச்சியை அதிகமாக்கி கருகருவென வளரச் செய்யும். ஆயுர்வேதம்படி இந்த கருப்பு சீரம் முடியை நன்கு வலுவாக்கும்.

இது நரைமுடி வளருவதை தடுத்து முடியை நன்கு கருகருவென வளரச்செய்யக் கூடியதாகும். இதற்கு என்னென்ன தேவை என்பதைப் பார்ப்போம்.

மெந்தயம்

புரதம், இரும்பு மற்றும் வைட்டமின்கள் ஏ, கே மற்றும் சி சத்தும் நிறைந்த இது முடியை வேர்க்காலிலிருந்து வளர ஊக்குவிக்கும். அடர்த்தியாக வளர ஊக்குவிக்கும்.

செம்பருத்தி

ஆன்தோசயானின் நிறைந்த இது மெலானினை ஊக்குவிப்பதால் நரைப்படலத்தைத் தடுக்கும். இதன் சி சத்து அமைனோ அமிலங்கள் மற்றும் ஆன்டிஆக்சிடண்ட் நிறைந்தது.

கிராம்பு

தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வளர்ச்சியைத் தூண்டும். முடியில் தொற்றுக்களை நீக்கி நன்கு வளரச்செய்கிறது.

கருஞ்சீரகம்

அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு உள்ளதால் தலைமுடி உதிர்வைத்தடுத்து வலுவாக்குகிறது.

ரோஸ்மேரி

இது நல்ல இரத்த ஓட்டத்தை அதிகரித்து பொடுகை நீக்கி முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது.

கறிவேப்பிலை

பீடா கரோட்டின் நிறைந்த இது முடியை அடர்த்தியாக்குகிறது.

இதையும் படியுங்கள்:
த்ரெட்டிங் செய்த பிறகு கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்..!
Black serum that turns hair black

ப்ளாக் சீரம் தயாரிப்பு

தேவை;

கிராம்பு ஒரு டேபிள்ஸ்பூன்

செம்பருத்தி பூ காயவைத்தது 2

கருஞ்சீரகம் 1டேபிள் ஸ்பூன்

மெந்தயம் 1 டேபிள் ஸ்பூன்

ரோஸ்மேரி 2 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை 10

தண்ணீர் ஒரு கப்

செய்முறை;

மேற்கூறிய அனைத்தையும் ஒரு இரும்புக் கடாயில் கொதிக்க வைக்கவும்.சுமார் 7 நிமிடங்கள் கொதிக்க வேண்டும். இதை நன்கு ஆறியதும் வடிகட்டி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் சேர்க்கவும்.

நீங்கள் இரவு படுக்கப் போகும்போது முடியில் நன்கு தடவவும். மறுநாள் காலையில் ஷாம்பூ வாஷ் செய்யவும். வாரத்தில் 3 அல்லது 4 முறை செய்யலாம்.

கருப்பு சீரத்தின் பலன்கள்; செம்பருத்தி ரோஸ்மேரி மற்றும் வெந்தயக் கலவையால் அபார முடிவளர்ச்சி இருக்கும். பொடுகை தடுத்து அரிப்பையும் போக்கும்.

உங்கள் முகப்பொலிவற்கு காபி பொடி

காபி மற்றும் மஞ்சள்பொடி:

ஒரு டேபிள் ஸ்பூன் காபிபொடிடன் அரை டீஸ்பூன் மஞ்சள் பொடி மற்றும் 2 டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்து முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து கழுவ இரண்டிலும் உள்ள ஆன்டிஆக்சிடண்ட் உங்க முகத்தைப் பொலிவாக்கும்.

காபி மற்றும் ஆலோவேரா

ஒரு டேபிள் ஸ்பூன் காபிபௌடரோடு 2 டேபிள் ஸ்பூன் ஆலோவேராஜெல் சேர்த்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவ முகம் நெகிழ்ச்சியாக பளபளப்பாகும்.

காபி ஆலிவ் ஆயில்

ஒரு டீஸ்பூன் ஆயிலை ஒரு டேபிள் ஸ்பூன் காபி பௌடரோடு சேர்த்துக் கலந்து முகத்தில் பூசி பத்து நிமிடம் கழித்துத் கழுவவும் இரத்த ஓட்டம் அதிகரித்து முகம் புத்துணர்வுடன் இருக்கும்.

இதையும் படியுங்கள்:
சருமத்தை மென்மையாக்கும் மதுரை மரிக்கொழுந்து..!
Black serum that turns hair black

காபி விளக்கெண்ணெய்

1டீஸ்பூன் விளக்கெண்ணை மில் 1 டீஸ்பூன் காபி பௌடர் கலந்து முகத்தில் பூசி 25 நிமிடம் கழித்து கழுவ ஃப்ரீ ராடிகல்கல்கள் எதிர்க்கும் பட்டு மலர்ந்த ரோஜா போன்று இருக்கும்.

காபி, எலுமிச்சை பால்

ஒரு டேபிள்ஸ்பூன் காபி பொடியில் ஒரு டேபிள்ஸ்பூன் காய்ச்சாத பால் மற்றும் அரை டீஸ்பூன் எலுமிச்சை ஜுஸ் சேர்த்துக் கலந்து முகத்தில் தடவவூம்.ஷ பத்து நிமிடம் கழித்து கழுவ முகம் பொலிவாகும்.

காபி வைட்டமின் ஈ காப்ஸ்யூல்

ஒரு டீஸ்பூன் காபி பொடியில் ஒரு ஈ காப்ஸ்யூல் எண்ணை விட்டு முகத்தில் தடவிக்கழுவ கொலாஜன் ஊக்குவிக்கப்பட்டு கோடடுகள் சுருக்கங்கள் மறையும்.

காபி வாசலீன்

ஒரு டீஸ்பூன் காபிபொடியோடு அரை டீஸ்பூன் வாசலீன் சேர்த்து முகத்தில் தடவிக்கழுவ முகத்தில் பிளவுகள் நீங்கி மென்மையாகி பிரகாசமாகவும்.

logo
Kalki Online
kalkionline.com