
பொதுவாகவே பெண்கள் மாசு, மருவற்ற சருமத்தையே விரும்புவர். சிலருக்கு முகத்தில் தேவையில்லாமல் முடி வளர்ந்து முக அழகை கெடுக்கும். இதற்கு வீட்டிலேயே இயற்கை வழிகளை கடைப்பிடிக்க நல்ல பலன் கிடைக்கும்.
உலர்ந்த எலுமிச்சை தோல் அல்லது ஆரஞ்சு தோலை பொடி செய்து கொள்ளவும். பால், தேன் அல்லது எலுமிச்சை சாறுடன் கலந்து சருமத்தில், முகத்தில் தேய்த்து பத்து நிமிடம் கழித்து கழுவி வந்தால் ரோமங்கள் உதிர்ந்து சருமம் வழுவழுப்பாகும்.
பார்லி பவுடர்,பால் இதனுடன் தேன் சேர்த்து கலந்து முகத்தில் முடி உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி வந்தால் முக ரோமங்கள் நீங்கி அழகு பெறும்.
மஞ்சள்தூள், பாலோடு, சந்தனப்பொடி இவற்றை கலந்து முகத்தில் பேக் ஆக போட்டு காய்ந்ததும் ஸ்கரப்பர் கொண்டு மென்மையாக தேய்த்துக் கழுவி வர, முக ரோமங்கள் நீங்கி அழகு பெறும்.
சிறிதளவு சர்க்கரையுடன், எலுமிச்சை சாறு கலந்துகொண்டு இந்த கலவையை ரோமங்கள் மீது தடவி பின் கழுவ, முகத்தில் வளரும் ரோமங்களின் வளர்ச்சி குறையும்.
மஞ்சள்தூள், சிறிது உப்பு எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி பின் கழுவ முகத்தில் உள்ள வேண்டாத முடிகள் நீங்கி முக அழகு மேம்படும்.
கடுகு எண்ணெய், மஞ்சள் தூள் கலந்து முகத்தில் பூசி சற்று நேரம் கழித்து கழுவிவிட்டு பின் ப்யூமிக் ஸ்டோனால் மென்மையாக ஒருமுறை மட்டும் தேய்த்து கழுவிவர முடி உதிர்ந்து மென்மையாக மாறும்.
சிறிதளவு கஸ்தூரி மஞ்சளுடன், முல்தானிமட்டி பவுடர் கலந்து தயிர் சேர்த்து கலந்து பேஸ்ட் ஆக்கி அதை தடவி பின் கழுவ முடி வளர்ச்சி குறைந்து, முக கருமையும் மாறும்.
சிறிதளவு எலுமிச்சைசாறுடன் தேன் கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15-20 கழித்து குளிர்ந்த நீரால் கழுவி வர தேவையற்ற ரோமங்கள் உதிர்ந்துவிடும். முக கருமையும் மாறி நிறம் கூடும்.
குப்பைமேனி இலை, வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள் மூன்றையும் அரைத்து குளிக்கும் முன் தடவி சற்று நேரம் கழித்து கழுவி வந்தால் ரோமங்கள் நீங்கி அழகு மேம்படும்.
ஹார்மோன் மாற்றங்களால் உண்டாகும் முடி வளர்ச்சிக்கு ம் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்.
வேக்ஸிங் செய்தால் சருமத்தில் எரிச்சல், அலர்ஜி ஏற்படுவதுடன் முகம் சிவந்து போதல், தடிப்பு போன்ற பிரச்னைகளையும் கொடுத்துவிடும்.
அனுபவம் உள்ள பார்லரில் சரியான முறையில் முக ரோமத்தை நீக்கிட பிரச்னை வராது. அடிக்கடி எடுக்க முடிவளர்ச்சி அதிகமாகத் தான் ஆகும்.
இயற்கை வழிகளை பின்பற்றி ரோம வளர்ச்சியை கட்டுப்படுத்திட பிரச்னைகள் வராது.