இன்றைய ஃபேஷன் உலகில், கல்லூரி மாணவிகள் முதல் அலுவலகம் செல்லும் பெண்கள் வரை, அனைவரும் பலவிதமான டிசைனர் சேலைகள் மற்றும் பிளவுஸ்கள் அணிவதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, சாதாரண சேலையில் கூட பிளவுஸில் செய்யப்பட்ட வித்தியாசமான டிசைன்கள் மூலம் அதனை புதிய ஃபேஷனாக மாற்றி அணிந்து வருகின்றனர். இவ்வாறு புதுமைகளை தேடிவரும் பெண்கள் மத்தியில் நான்கு புதிய நெக் பிளவுஸ் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
தற்போதைய ட்ரெண்டில் உள்ள எம்பிராய்டரி பிளவுஸ் கண்ணாடி, ஜரி, மணிகள் போன்ற கைவினை வேலைப்பாடுகள் செய்யப்பட்ட பிளவுஸ் ஆகும். இந்த ஸ்கொயர் நெக் எம்பிராய்டரி பிளவுஸ் திருமணம் மற்றும் விஷேசங்களுக்கு அணியும் போது கிராண்ட் லூக்கை தரும். பட்டு மற்றும் வெல்வெட் போன்ற சிம்பிளான சேலைகளிலும் இந்த டிசைன் அழகாக பொருந்தும்.
இந்த V நெக் டிசைன், நீண்ட கழுத்து கொண்டவர்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். காட்டன், சில்க், ஜார்ஜெட் போன்ற பலவகையான துணிகளில் இந்த டிசைனை உருவாக்க முடியும். பட்டு சேலைகள் மற்றும் சாதாரண காட்டன் சேலைகளுக்கு இது அழகான தோற்றத்தை வழங்கும்.
ஜீரோ நெக் பிளவுஸ் என்பது கழுத்துப் பகுதியை முழுமையாக மூடியிருக்கும் ஒரு வகையான டிசைனாகும். இதை கிளோஸ் நெக் டிசைன் என்றும் கூறுவர். இந்த டிசைன் பெண்களுக்கு கம்பீரமான தோற்றத்தை கொடுக்கும். அதிக வேலைப்பாடுகள் இல்லாத இந்த பிளவுஸின் லுக் சிம்பிளாகவும், நேர்த்தியாக இருக்கும். பிளவுஸின் பின்புற பகுதியில் கீஹோல், ஜிப் போன்ற சிறிய வேலைப்பாடுகளை செய்தால் இன்னும் அழகாக தெரியும்.
ஃபிரில் நெக் பிளவுஸ் என்பது கழுத்துப் பகுதியில் சிறிய அடுக்குகளாக இருக்கும் ரஃபிள் (ruffle) வடிவமைப்புடன் கூடிய பிளவுஸ் மாடல் ஆகும். இந்த ஃபிரில் வேலைப் பாடுகளை சிறியதாகவும், பெரியதாகவும் பிளவுஸ் டிசைனுக்கு ஏற்றவாறு வடிவமைத்துக் கொள்ளலாம். இந்த பிளவுஸ் லைட் வெயிட் சேலைகள், ஜார்ஜெட் சேலைகளுக்கு பக்காவாக பொருந்தும். கழுத்தை ஒட்டி இருக்கும் இந்த ஃபிரில் டிசைன் பிளவுஸுக்கு அதிக நகைகள் மற்றும் ஆபரணங்கள் தேவையில்லை.
ட்ரெண்டிங் ஃபேஷனை நோக்கி செல்லும் பெண்கள், இந்த நான்கு வகை பிளவுஸ் டிசைன்களையும் ஒருமுறை ட்ரை பண்ணிப் பாருங்க.