முகச் சுருக்கம் மறைய இனி விலை உயர்ந்த கிரீம் தேவையில்லை! இதை ட்ரை பண்ணுங்க!

Facial wrinkles
Facial wrinkles
Published on

முகம் பொலிவுடன் காணப்பட வேண்டும் என்பதற்காக சந்தையில் கிடைக்கும் பல்வேறு வகையான கிரீம்கள் வாங்கி பயன்படுத்தி வருவோம். ஆனால் இதை நாம் தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால் நம் சருமம் ஒரு கட்டத்தில் சுருங்கி வயதான தோற்றத்தை ஏற்படுத்தும். ஒரு சிலருக்கு அவர்களின் உணவு பழக்க வழக்கங்கள் அல்லது மேலே குறிப்பிட்டுள்ளபடி அழகுக்காக பல்வேறு வகையான கிரீம்கள் பயன்படுத்துவதால் இந்த பிரச்சனை ஏற்படலாம்.

30 வயதை அடைந்தவுடன் இந்த பிரச்சனை ஆரம்பமாகிவிடும். இந்த நிலையில் சருமத்தில் சுருக்கம், நிறம் மாறுதல், கோடுகள் போல தெரிவது இவையெல்லாம் இயற்கையான ஒன்றுதான். இந்த பிரச்சனையை சில வீட்டு வைத்தியங்கள் மூலம் குறைக்கலாம். முகத்தில் ஏற்பட்டுள்ள சுருக்கங்களை எவ்வாறு நீக்குவது என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

முகம் சுருக்கம் மறைய: 

பீட்டா கரோட்டின் மிகச்சிறந்த இயற்கை நிறமி ஆகும். இது முகத்தில் உள்ள சுருக்கத்தை நீக்குவதற்கு பயன்படுகிறது. எனவே நீங்கள் வாரத்திற்கு 3 முறை கேரட் ஜூஸ் சாப்பிட்டு வந்தால் பீட்டா கரோட்டினை எளிதாக பெறலாம்.

எலுமிச்சை சாறு சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை நீக்கும் தன்மை கொண்டது. எனவே காலையில் எலுமிச்சை சாறு கலந்த தேநீர் குடிக்கலாம்.

தக்காளி பழத்தின் சாறு மற்றும் வாழைப்பழம் ஆகியவற்றை சேர்த்து முகத்தில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி வர சுருக்கங்கள் மறையும். 

கடலை மாவு மற்றும் தயிர் இரண்டையும் சேர்த்து முகத்தில் தடவி வந்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும். வாரத்திற்கு 3 முறை இவ்வாறு செய்ய வேண்டும். 

இதையும் படியுங்கள்:
கண்களை சுற்றிலும் காக்கைக்கால் சுருக்கம் ஏற்படுவது ஏன் தெரியுமா?
Facial wrinkles

தயிர், மஞ்சள் தூள், ரோஸ் வாட்டர் மற்றும் வைட்டமின் E எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து முகத்தில் தடவி வர சரும பிரச்சனைகள் வராது.

கற்றாழை ஜெல், தயிர், கடலை மாவு, முட்டையின் வெள்ளை கரு ஆகியவற்றை சேர்த்து முகத்தில் தடவி வர நல்ல பலன் கொடுக்கும்.

ஐஸ் கட்டி கொண்டு 10 நிமிடம் முகத்தில் தேய்த்து மசாஜ் செய்து வந்தால் முகத்தில் உள்ள செல்கள் குளிர்ச்சி அடைவதோடு முகத்தில் உள்ள சுருக்கம் மறையும். 

மேலும் சூரியனில் இருந்து வரும் புற ஊதா ஒளி முகத்தில் படும் போது சுருக்கங்கள் ஏற்படும். எனவே வெளியில் செல்லும் போது சருமத்தை பாதுகாப்பது அவசியம். பாதுகாப்பான சன்ஸ்கிரீன் லோஷனை பயன்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
சரும சுருக்கம் நீக்கும் அழகுக் குறிப்புகள்!
Facial wrinkles

ஊற வைத்த பாசிப்பருப்புடன் ரோஜா இதழ்களை சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும். அரைத்த கலவையுடன் தயிர், கடலை மாவு, சந்தன பொடி ஆகியவற்றை சேர்த்து முகத்தில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். அதன் பிறகு 20 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். 

மேலும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது, நாள் ஒன்றுக்கு 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். வறட்சி காரணமாக முகத்தில் சுருக்கங்கள் ஏற்படும். மேலும் நீர்ச்சத்து உள்ள காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிட வேண்டும். 

மன அழுத்தம் இருந்தால் உடலில் ஹார்மோன் மாறுபாடு ஏற்பட்டு சருமத்தில் சுருக்கம் ஏற்படும். யோகா, உடற்பயிற்சி செய்வதன் மூலம் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைந்து முகப் பொலிவு கிடைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com