அழகை மெருகேற்ற உதவும் காய்ச்சாத பால்!

milk face wash...
milk face wash...

பால் ஆரோக்யத்திற்கு மட்டுமல்ல அழகுக்கு அழகு சேர்க்க பலவாறு உதவுகிறது.

பாலுடன் சிறிது ரோஸ் வாட்டரை சேர்த்து, முகத்திற்கு தடவி சிறிது மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ, சருமத் துளைகளில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி, சருமம் நன்கு பளிச்சிடும்.

ஓட்ஸ் மற்றும் பால்-  இது ஒரு ஸ்க்ரப் மற்றும் ஃபேஸ் கிளென்சராக செயல்படுகிறது. ஓட்ஸ் பவுடருடன், பாலை சேர்த்து பேஸ்ட் போல் குழைத்து முகத்தில் தடவி சிறிது காய்ந்ததும் கழுவ சருமம் நன்கு பொலிவோடு இருக்கும்.

பால் மற்றும் தேன்– இரண்டையும் கலந்து தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் சரும அழுக்குகள், கரும்புள்ளிகள் மறைந்து, முகப்பருவையும், வடுக்களை யும் போக்கும்.

பால் மற்றும் பப்பாளி – பப்பாளி சருமத்துளைகளில் ‌இருக்கும் இறந்த செல்களை வெளியேற்றும் சக்தி கொண்டது. பப்பாளி பேஸ்ட்டுடன் பால் சேர்த்து கலந்து முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவ, சருமம் பளிச்சிடுவதோடு புத்துணர்வையும் தரும்.

கேரட் மற்றும் பால்- கேரட்டை பேஸ்ட்டாகவோ அல்லது ஜுஸாகவோ எடுத்து கொண்டு அதை பாலோடு கலந்து முகத்தில் தடவி காய்ந்ததும் பின் குளிர்ந்த நீரில் கழுவ முகம் பளபளப்பாகவும் மிருதுவாகவும் மாறும்.

கேரட்டில் பீட்டா கரோட்டின் இருப்பதால், இவற்றை சருமத்திற்கு பயன்படுத்தும்போது சருமம் இறுக்கம் அடைவதுடன், ஈரப்பசையுடன் இருக்கும். அதிலும் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் இந்த முறையை செய்த பின் ஃபேஸ் வாஷை   பயன்படுத்த வேண்டும்.

இதையும் படியுங்கள்:
பாஸ்தா பனைவெல்ல பழ கேசரி!
milk face wash...

பாலுடன் கடலைமாவு கலந்து மாஸ்க் போட்டு பின்‌ கழுவ சருமம், முகம் கருமை நீங்கி பளிச்சிடும். பாதாம் மற்றும் பால் சேர்த்து அரைத்து முகம் கழுத்து கை கால்களில் தேய்த்து மசாஜ் செய்து பின் குளிர்ந்த நீரில் கழுவ மாசு மருவின்றி ஆரோக்கியமாக இருக்கும். இதே போல் முல்தானி மட்டியுடன் சேர்த்து கலந்து போட்டு கழுவலாம்.

மூலிகை பேக்காக பாலுடன் துளசியை சேர்த்து அரைத்து பூசி பின் கழுவிட சரும பிரச்சனைகளுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

காய்ச்சாத பால் சருமத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களையும் தந்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com