பாஸ்தா பனைவெல்ல பழ கேசரி!

பழ கேசரி!
பழ கேசரி!

-பி.ஆர்.இலட்சுமி

பாஸ்தா உணவு வகை வெளிநாடுகளில் இருந்து நம் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட உணவு. அந்த உணவு நன்றாக இருக்கிறது என்பதற்காக அனைத்து இன மக்களும் அதை விரும்பி உண்கிறார்கள்.

இந்த பாஸ்தா சங்கு வடிவில், நீளமான வடிவில் நிறைய கிடைக்கிறது. இப்படி விதவிதமாகச் செய்து சாப்பிடுவது இளம் தலைமுறைக்கு ஒரு ஃபேஷனாக இருக்கிறது. ஆனால் அதை நிறைய சாப்பிட முடியாது. (உண்ண இயலாது) மூலநோய் வரும்னு டாக்டர் சொல்றாங்க. இதுவும் கிட்டத்தட்ட நம்ம மேகி நூடுல்ஸ் சாப்பிடுகிறோம் இல்லையா! அந்த நூடுல்ஸ் வகையறாவைச் சார்ந்தது. காக்கா முட்டை படம் மாதிரியான்னு வாசகர்கள் நினைக்கக் கூடாது.

பயன்கள்

ஏற்கனவே இந்த மாதிரி உணவு வகைகள் நம்ம தமிழ்நாடு மாதிரி இருக்கிற பகுதியில் முழுமையாக எடுத்துக் கொள்ள இயலாது. இந்த பனைவெல்லம் சேர்த்துக் கொண்டால் ரத்தத்தைச் சுத்திகரித்து புற்றுநோயை வர விடாமல் தடுக்கும். பழங்கள் உடலைப் பலப்படுத்தும்.

கேசரியில் சேர்க்கப்படுகிற சர்க்கரை இனிப்புக்கு பதிலாக இந்த பனைவெல்லத்தைச் சேர்ப்பதால் உடலுக்கு மிகுந்த வலிமை தரும். இந்த பாஸ்தாவை வெந்நீரில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவேண்டும். மீதி தண்ணீரை வடித்து விடவேண்டும்.

பிறகு அதில் இளநீர் சேர்த்துக் கொள்ளவேண்டும். இளநீரில் அனைத்துவிதமான சத்துகளும் அடங்கியுள்ளன.

தேவையான பொருட்கள்:

பாஸ்தா 200 கிராம் கடையில் விற்கும். வேகவைத்த இடியாப்பம் இருக்கு இல்லையா! நூடுல்ஸ் னு சொல்லுவோம். அந்த நூடுல்ஸ் கொஞ்சம் தடியாக வைத்து, வேகவைத்து எடுக்கறதுதான் இது. கிட்டத்தட்ட அதே சுவைதான் இருக்கும்.

150 கிராம் சில்லு கருப்பட்டின்னு ஓலை கொட்டானில் இருக்கும். தனியாக பனைவெல்லம் கடையில் இருக்கும்.

நெய் முந்திரி திராட்சை பிஸ்தா சிறிதளவு,தேவைப்படும் பழங்கள் (ஆப்பிள், திராட்சை, கிவி, மாதுளம்பழம், சப்போட்டா, அன்னாசி)

இதையும் படியுங்கள்:
உடற்பிரச்னைகளின் அறிகுறிகளைக் காட்டும் நாக்கு!
பழ கேசரி!

செய்யும் முறை;

பாஸ்தாவை வேகவைத்து தண்ணீரை வடித்து விட வேண்டும். பின்னர் நெய் அல்லது வீட்டில் இருக்கும் சமையல் எண்ணெய் ஏதாவது சிறிதளவு எடுத்து பழங்களை இலேசாக வதக்கிக் கொள்ள வேண்டும். முந்திரி, திராட்சை, பிஸ்தா, வேர்க்கடலை போட்டு வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பனைவெல்லத்தை ஒரு தம்ளர் தண்ணீரில் நன்றாக கொதிக்க விட வேண்டும். (பனைவெல்லத்தை வாங்கும் பொழுது முகர்ந்து பார்த்து வாங்க வேண்டும். அதை முகர்ந்து பார்த்தால் புகை வாடை வந்தது என்றால் அந்த பனைவெல்லத்தை வாங்கக்கூடாது.)

அந்த பனைவெல்லத்தை நன்றாக கொதிக்க விட்டு பாகாக கரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு டம்ளர் நீரில் இளநீர் கலந்து கொதிக்க விட வேண்டும். அதில் பாஸ்தாவையும் நன்றாகக் கொட்டி கிளற வேண்டும். ஏற்கனவே வைத்திருந்த பாஸ்தாவையும் அதில் கொட்டிக் கிளற வேண்டும். இறுதியாக பழங்களையும், முந்திரி, திராட்சை, பிஸ்தா பருப்பு, பாதாம் பருப்பு கலந்த கலவைகளை ஏலக்காய் போன்றவற்றையும் கலந்து கிண்டி இறக்க வேண்டும். இதற்கு நெய் அவ்வளவாக தேவைப்படாது. சுவையான பாஸ்தா பனைவெல்ல பழ கேசரி தயார்!!!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com