தேங்காய் எண்ணெய், ஜோஜோபா, ரோஸ்ஷிப், பாதாம் எண்ணெய் போன்றவற்றை முகத்திற்கு மாய்ஸ்சரைசராக பயன்படுத்தலாம். இவை நம் சருமத்தை நீரேற்றமாக வைத்துக் கொள்வதுடன் சருமத்தின் இயற்கை எண்ணெய்களை சமநிலைப்படுத்தவும் உதவும். இவை நம் சரும பராமரிப்புக்கு சிறந்த ஒன்றாகும். சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவும்.
இந்த எண்ணெய்களை இரவில் படுப்பதற்கு முன்பு சில துளிகள் எடுத்து முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து வர முகம் பளிச்சிடும்.
இது இயற்கையான சருமத்தை ஜொலிக்க வைக்கும் சிறந்த மாய்ஸ்சரைசராக பயன்படுகிறது. விட்டமின் ஈ நிறைந்த எண்ணெய் இது. இந்த எண்ணெய் முகத்தை நீரேற்றமாகவும் ஆக்ஸிஜனேற்ற பாதுகாப்பு பண்புகள் நிறைந்ததாகவும் வைத்துக்கொள்ளும். எண்ணெய் பசையுள்ள சருமம் உள்ளவர்கள் ஜோஜோபா போன்ற இலகுரக காமெடோஜெனிக் அல்லாத எண்ணைகளை பயன்படுத்தலாம். இந்த எண்ணை க்ரீஸ் இல்லாமல் ஹைட்ரேட் செய்ய உதவுகிறது.
இது சருமத்திற்கு ஆழமான ஈரப்பதத்தை வழங்கும். வறண்ட, எரிச்சலூட்டும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் சிறந்த மாய்ஸ்சரைசராக பயன்படும். நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட ஆழமான ஈரப்பதம் ஊட்டும் எண்ணெய் இது. இயற்கையான மாய்ஸ்சரைசராக பயன்படும் தேங்காய் எண்ணெய் சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து சருமத்தை உறுதியாகவும், இளமையாகவும் வைத்திருக்க உதவுகிறது. சருமத்தில் ஏற்படும் பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்றுக்களை எதிர்த்து போராடவும் உதவுகிறது.
பாதாம் எண்ணெயில் விட்டமின் ஈ மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இது வறண்ட சருமத்திற்கு ஊட்டம் அளித்து பளிச்சிட வைக்கும். சரும வறட்சி மற்றும் அரிப்பிலிருந்து பாதுகாக்கும். சருமத்தின் நிறத்தை மேம்படுத்தி பொலிவாக வைத்திருக்க உதவும். பாதாம் எண்ணெயை முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும். குளிப்பதற்கு முன்பு 20 நிமிடங்கள் வைத்திருந்து குளிக்கலாம். மற்ற பொருட்களுடன் கலந்து ஃபேஸ் பேக் போலவும் பயன்படுத்தலாம். சிலருக்கு இந்த எண்ணெய் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். எனவே சருமத்தின் சிறிய பகுதியில் சோதித்து பின்பு பயன்படுத்தவும்.
முகத்தை ஈரப்பதமாக்குவதற்கு ஏற்ற சிறந்த எண்ணை இது. இதில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் பிற சத்துக்கள் சருமத்தை ஈரப்பதமாக்கி மென்மையாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. வறண்ட சருமத்திற்கு ஆலிவ் வெண்ணெய் ஏற்றது. ஆலிவ் எண்ணெயில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் சருமத்தை பொலிவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்வதுடன் இளமையான தோற்றத்தை பெறவும் உதவுகிறது.
ரோஸ்ஷிப் எண்ணெய் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்தது. முகத்தில் வயதின் காரணமாக ஏற்படும் மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்களின் தோற்றத்தை குறைக்க உதவும். வறண்ட சருமம் உள்ளவர்கள் ரோஸ்ஷிப் போன்ற செறிவூட்டப்பட்ட எண்ணெய்களை பயன்படுத்தி பலன் பெறலாம்.
இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் பிற ஆன்டி ஆக்சிடென்ட்கள் சருமத்தை பிரகாசமாக்க உதவுகின்றது. சில துளிகள் ரோஸ்ஷிப் எண்ணையை நேரடியாக சருமத்தில் தடவி மசாஜ் செய்யலாம். மற்ற எண்ணெய்களுடன் கலந்தும் மசாஜ் செய்யலாம். வறண்ட சருமம் உள்ளவர்கள் தினமும் பயன்படுத்தலாம். எண்ணெய் சருமம் உள்ளவர்கள் வாரத்திற்கு இருமுறை பயன்படுத்தினாலே போதுமானது.
ஆர்கன் எண்ணெய் ஒரு சிறந்த மாய்ஸ்சரைசராகும். இது சருமத்தின் வறட்சியை போக்கி ஈரப்பதமாக்கி மென்மையாக வைத்துக்கொள்ள உதவுகிறது. வயதின் காரணமாக ஏற்படும் மெல்லிய கோடுகளின் தோற்றத்தை குறைக்க உதவும். இதிலுள்ள வைட்டமின் ஈ மற்றும் கொழுப்பு அமிலங்கள் சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் ஆக்குகின்றன. எண்ணெய் மற்றும் முகப்பரு பாதிப்புள்ள சருமம் உட்பட அனைத்து சருமங்களுக்கும் ஏற்றது.