தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு இந்த ஆறு விதைகளும் தண்ணீரும் போதுமே!

healthy hair for grow
Hair care tips
Published on

ண் பெண் பேதமின்றி நம்மில் பலரும் கவலை கொள்ளும் விஷயங்களில் ஒன்று நம் கூந்தல் ஆரோக்கியம். இதற்காக, குறிப்பிட்ட இடைவெளிகளில் அழகு நிலையம் செல்வதையும், ஒரு கணிசமான தொகையை செலவழிப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளோம். இதைத் தவிர்த்து, இப்பதிவில் கூறப் 

பட்டிருக்கும் ஆறுவகையான விதைகளைக்கொண்டு,  வீட்டில் இருந்தவாறே நம் கூந்தல் செழிப்பாக வளர நம்மால் உதவமுடியும். அது எப்படி என்று பார்ப்போம்.

1.வெந்தயம்:  இரவில், நம் வீட்டிலுள்ள வெந்தயத்திலிருந்து இரண்டு டீஸ்பூன் எடுத்து ஒரு கிளாஸ் தண்ணீரில் போட்டு ஊறவைத்து, காலையில் அதை வெறும் வயிற்றில் உட்கொண்டு வருவது கூந்தல் வளர்ச்சிக்கும், ஸ்கேல்ப் (Scalp) பகுதி ஆரோக்கியத்திற்கும் சிறந்த முறையில் உதவும். வெந்தயத்திலுள்ள லெஸித்தின் (Lecithin) என்ற கூட்டுப் பொருள், முடி உதிர்வதையும், உடைவதையும் தடுத்து, முடியை ஈரப்பதத்துடன் வைத்துப்பாதுகாக்க சிறந்த முறையில் உதவக்கூடியது.

2.கருஞ்சீரகம்: களோஞ்சி விதை எனப்படும் கருஞ்சீரகத்தில் ஆன்டிஃபங்கல் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் குணங்கள் அதிகம் உள்ளன. இவை முடியின் வேர்ப்பகுதியில் உள்ள நுண்ணறைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி முடி உதிர்வையும், முடியின் இழைகள் மெலிதாவதையும் தடுத்து நிறுத்தும்.

மேலும் ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கும், ஸ்கேல்ப்பில் உற்பத்தியாகும் தொற்றுக்களை நீக்கவும் உதவி புரியும்.

3.சூரிய காந்தி விதைகள்: சூரிய காந்தி விதைகளில்  உள்ள அதிகளவு ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள ஃபிரீ ரேடிகல்களை எதிர்த்துப் போராட உதவும். மேலும், சுற்றுச்சூழல் பாதிப்பினால் முடியின் இழைகள் மெலிதாவதையும் தடுத்து நிறுத்தும். இவ் விதைகளில் உள்ள சிங்க் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் கூந்தலை ஆரோக்கியமாக  வளரச் செய்கின்றன. சூரிய காந்தி விதைகளை சாலட், ஸ்மூத்தி, யோகர்ட் மற்றும் ஓட்ஸ் போன்றவை களுடன் கலந்து உண்ணலாம்.

இதையும் படியுங்கள்:
சருமத்தை சுருக்கமின்றி இளமையாக வைத்திருக்க இதையெல்லாம் செய்யலாம்!
healthy hair for grow

4.பூசணி விதைகள்: பூசணி விதைகளில் சிங்க், காப்பர், செலினியம் மற்றும் வைட்டமின் A, B, C போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. இவை முடியின் இழைகள் மெலிதாவதை தடுக்கவும் கூந்தல் பள பளப்புப் பெறவும் உதவுகின்றன. தினமும் முப்பது கிராம் பூசணி விதைகள் உட்கொள்வதே ஆரோக்கியம் என அறிவுறுத்தப்படுகிறது. ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊறவைத்து உண்பதாலேயே பலனை கண் கூடாக காணமுடியும்.

5.ஃபிளாக்ஸ் விதைகள்: ஃபிளாக்ஸ் விதைகள் உடலின் இரத்த சர்க்கரை அளவையும், கொலஸ்ட்ரால் அளவையும் சமநிலையில் வைத்துப் பராமரிக்க உதவும். இதனால் முடி உதிர்வு தடுக்கப்பட்டு முடி ஆரோக்கியமாக வளர ஆரம்பிக்கும். ஃபிளாக்ஸ் விதைகளில் ப்ரோட்டீன், கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. இதை தண்ணீரில் ஊறவைத்தும், சப்பாத்தி மற்றும் ரொட்டிகளுடன் சேர்த்தும் உட்கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
பளபளப்பான முகத்திற்கு கிராம்பு ஜெல் தயாரிக்கும் முறை மற்றும் பயன்கள்!
healthy hair for grow

6.சியா விதைகள்: சியா விதைகளை தண்ணீரில் போட்டு ஊற வைத்தால் அவை நன்கு உப்பி வந்து ஜெல் போன்றதொரு உருமாற்றமடையும். அந்த ஜெல்லில், முடியின் வேர்ப் பாகத்திலிருந்து அனைத்துப் பகுதியின்  வளர்ச்சி மற்றும் வலுவுக்கும் உதவக்கூடிய, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், ப்ரோட்டீன் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன.

தினமும் சியா விதை தண்ணீர் அருந்தி வரும்போது, தலைப்பகுதி சருமத்தின் உள்ளும் புறமும் சீரான இரத்த ஓட்டம் பெறும். இதனால் அப்பகுதிகளுக்கு ஊட்டச் சத்துக்களும் அதிகம் கிடைக்கும். முடிக்கு நீரேற்றமும் தேவையான அளவு கிடைக்கும். தினமும் ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டேபிள் ஸ்பூன் சியா விதை சேர்த்து ஒரு மணி நேரம் கழித்து அதை குடித்து வந்தால் உங்கள் முடி வலுவாகவும் பள பளப்பாகவும் வளர்வது உறுதி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com