எண்ணெய் வழியும் முகமா? பள்ளங்கள் விழுந்த முகச் சருமமா? No worries..!

Oily face and Pockmarks
Oily face and Pockmarks
Published on

பதின்ம வயதை எட்டிய ஆண், பெண் இருபாலருக்கும் ஹார்மோன் மாற்றம் காரணமாக முகத்தில் பருக்கள் ஏற்படும். சிலருக்கு பருக்கள் நீங்கியதும் முகத்தில் பள்ளங்கள் தோன்றும். இது போன்று உருவாவதற்கு காரணம் நம் முகத்தில் உள்ள துளைகள் தான். பொதுவாக வியர்வை, எண்ணெய் ஆகியவற்றை வெளியேற்றுவதற்கு சரும மேற்பரப்பில் துளைகள் இருக்கும்.

இந்த துளைகள் வழியாக செபாக்ஸ் சுரப்பியானது எண்ணெயை வெளியேற்றும். இந்த துளைகளில் அழுக்குகள் படிந்து துளைகளை அடைக்கும் போது முகப்பரு ஏற்படும். மேலும் துளைகளின் அளவு பெரியதாக மாறிவிடும். இதனால் முகத்தில் பள்ளங்கள் ஏற்படுகின்றன. அதிகமாக எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு இந்த துளைகள் பெரிதாகி சருமத்தில் பள்ளங்களை உருவாக்குகிறது.

இவர்கள் அடிக்கடி முகத்தை கழுவி வந்தாலும், சருமத்தில் எண்ணெய் வெளியேறுவதை ஓரளவு கட்டுப்படுத்த முடியுமே தவிர, இந்த பள்ளங்கள் கொண்ட சருமத்தை எவ்வாறு சரி செய்ய வேண்டும் என தெரியாமல் இருப்பார்கள். நாம் இந்த பதிவில் எண்ணெய் வழியும், பள்ளங்கள் கொண்ட சருமத்தை எவ்வாறு சரிசெய்யலாம் என்று பார்க்கலாம்.

எவ்வாறு சரி செய்யலாம்?

முட்டையின் வெள்ளை கருவை முகத்தில் பயன்படுத்தும் போது,சருமம் இறுக்கமடையும். சருமத்தில் உள்ள துளைகளின் அளவை குறைக்கும். மேலும் இதில் அஸ்ட்ரிஜென்ட் பண்புகள் உள்ளதால் சருமத்திற்கு இளமையான தோற்றத்தை கொடுக்கும்.

ஆப்பிள் சைடர் வினிகர் முகத்தில் உள்ள துளைகளை சுருக்க உதவுகிறது. இதை நீரில் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்பு சருமத்தில் ஏற்படும் எரிச்சலை குறைத்து, PH அளவை சமன் செய்கிறது. மேலும் முகத்தில் எண்ணெய் வழிவதை குறைக்கிறது.

முல்தானி மிட்டி இயற்கையாகவே சரும பிரச்சனைகளை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. முல்தானி மிட்டி மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இதனால் முகத்தில் எண்ணெய் உற்பத்தியை குறைப்பதோடு, துளைகளின் அளவை குறைக்கிறது.

வாழைப்பழத் தோல் சருமத்தில் உள்ள பள்ளங்களை குறைத்து சருமம் பளபளப்பாகவும், மென்மையாகவும் மாற்றுகிறது. வாழைப்பழத் தோலின் உட்புறத்தை நம் சருமத்தில் தேய்த்து வந்தால் இதில் உள்ள அஸ்ட்ரிஜென்ட் பண்புகள் முகத்தில் ஏற்பட்டுள்ள பெரிய துளைகளை குறைக்கும்.

இதையும் படியுங்கள்:
சருமத்துளைகளை சரி செய்ய 7 டிப்ஸ்!
Oily face and Pockmarks

ஐஸ் கட்டி கொண்டு முகத்தில் மசாஜ் செய்து வந்தால் இரத்த ஓட்டம் அதிகரித்து சருமம் பொலிவாகவும், மென்மையாகவும் மாறும். மேலும்  முகத்தில் எண்ணெய் வழிவது குறையும். 

தக்காளி முகத்தில் உள்ள துளையின் அளவை விரைவில் குறைக்கும். இதில் உள்ள லைகோபீன் சிறந்த ஆக்ஸிஜனேற்றியாகும். எனவே சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக உள்ளது. தக்காளி ஜூஸ் மற்றும் தேன் இரண்டையும் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடங்கள் மசாஜ் செய்த பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

மேலும் வெளியில் செல்லும் போது பாதுகாப்பான சன்ஸ்கிரீன் லோஷனை பயன்படுத்தலாம். இதனால் சருமத்திற்கு கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com