ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் இந்த 5 ஃபேஸ் பேக்கை முயற்சி செய்யுங்கள்!

Beauty
Beauty
Published on

ஆயில் ஸ்கின் உள்ளவர்களுக்கு சென்ஸ்ட்டிவ் ஸ்கின் என்பதால், ஏராளமான பிரச்சனைகளை எதிர்க்கொள்ள நேரிடும். அவர்கள் வழக்கமாக இந்த ஐந்து ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்தலாம்.

முல்தானி மட்டி ஃபேஸ் மாஸ்க்:

ஒரு கிண்ணத்தில் முல்தானி மட்டி 2 டீஸ்பூன், ரோஸ் வாட்டர் 2 டீஸ்பூன், லெமன் ஜூஸ் 1 டீஸ்பூன் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும். முகத்தை க்ளன்சர் போட்டு நன்கு கழுவிக் கொண்டு, இந்த பேஸ்ட்டை முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் வரை நன்கு உலர விட்டு பின் கழுவிக் கொள்ளலாம்.

எலுமிச்சை தேன் ஃபேஸ் மாஸ்க்:

எலுமிச்சை சாறு  1 ஸ்பூன், ரோஸ் வாட்டர்  1 ஸ்பூன், தேன்  1 ஸ்பூன் கலந்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும். முகத்தை மென்மையான பேஸ்வாஷ் கொண்டு கழுவி விட்டு, இந்த கலவையை அப்ளை செய்து 15 நிமிடங்கள் வரை உலர விடுங்கள். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவிக் கொள்ளலாம்.

புதினா ஃபேஸ்மாஸ்க்:

தண்ணீரில் கழுவிய ஒரு கைப்பிடி புதினா இலைகளை நன்றாக மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும். அதன் சாறை தனியாக பிரித்து அதனுடன் தேன் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். முகத்தை சுத்தம் செய்தப்பின்னர் உலர வைக்க வேண்டும். பின்னர் இந்த கலவையை முகத்தில் தடவ வேண்டும். 15-20 நிமிடங்கள் வரை நன்கு உலர விட்டு பின்பு வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவிக் கொள்ளுங்கள்.

கடலை மாவு, தயிர் ஃபேஸ் மாஸ்க்:

2 டீஸ்பூன் கடலை மாவு, தயிர் 2 டீஸ்பூன் கலந்து கட்டியில்லாமல் கலக்க வேண்டும். முகத்தை க்ளன்சர் போட்டு சுத்தம் செய்த பிறகு இந்த ஃபேஸ்பேக்கை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வரை உலர விட்டு, நன்கு காய்ந்ததும் அதை குளிர்ந்த நீரால் கழுவிக் கொள்ளுங்கள்.

வெள்ளரிக்காய் ஃபேஸ் மாஸ்க்:

வெள்ளரிக்காயை மிக்ஸ்யில் அரைத்து அதன் சாறை எடுத்துக்கொள்ள வேண்டும். மூன்று டீஸ்பூன் சாறுடன் மற்றும் 1 டீஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். முகத்தை நன்கு கழுவி விட்டு 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவுங்கள். 

இந்த ஐந்து ஃபேஸ் பேக் பயன்படுத்துவதால், கரும்புள்ளிகள், பருக்கள், போன்ற அனைத்து பிரச்சனைகளும் நீங்கி முகம் பளபளக்கும்.

இதையும் படியுங்கள்:
கொழு கொழு கன்னமே, நீ எனக்கு வேணுமே!
Beauty

குறிப்புகள்:

1.   நீங்கள் Tinted மற்றும் க்ரீம் பேஸ்ட் சருமப் பராமரிப்பு பொருள்களை விட ஜெல் பேஸ்ட் சருமப் பராமரிப்பு பொருள்களைத் தேர்வு செய்வது நல்லது.

2.  அதேபோல் ஆன்டி ஏஜிங் க்ரீம்கள், ஹைட்ரேட்டிங் க்ரீம் அல்லது சீரம், ஸ்கின் Whitelizing க்ரீம் போன்றவை மிகச்சிறந்த பலன்களைத் தரும்.

3.  ரெடிமேட் பேஸ்பேக்குகளுக்கு பதிலாக இதுபோல் வீட்டில் செய்து பயன்படுத்துவது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com