
முடி கொட்டுவது மற்றும் வழுக்கை பிரச்னைகள் இவற்றைத் தடுக்க மணம் நிறைந்த பெப்பர்மிண்ட் ஆயில் சிறந்த தீர்வாக கருதப்படுகிறது. இது தலையில் நல்ல இரத்த ஓட்டத்தை அதிகரித்து வேர்க்கால்களில் முடியை வலுவாக்குகிறது.
பெப்பர் மிண்ட் ஆயிலில் மென்தால் என்ற பொருள் சருமம் மற்றும் முடிக்கும் குளுமையைத் தரக்கூடியது. இதன் ஊட்டச்சத்துக்கள் ஆக்சிஜனை அதிகரிக்கச் செய்வதால் முடி பலப்படுத்தப்படுகிறது. இதில் ஆன்டி மைக்ரோபியல் பண்பு இருப்பதால் முடியில் அழுக்கு மற்றும் அதிகப்படியான எண்ணையை நீக்கி, பொடுகுப் பிரச்னையையும் போக்கி முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது.
மேலும் பெப்பர் மிண்ட் ஆயிலில் ஆலோபீசியா என்ற முடி முழுவதும் கொட்டும் நிலைமையை தடுக்கக்கூடியது. மேலும் அலோபீசியா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு புதிதாக முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் கூடியது. 2014 ம் ஆண்டு இந்த ஆயில் பற்றிய ஆய்வில் முடி அடர்த்தியாக வளர்க்கச் சிறந்தது என்று அறியப்பட்டிருக்கிறது.
இந்த ஆயிலை எப்படி பயன்படுத்துவது?
இரண்டிலிருந்து மூன்று துளி பெப்பர்மிண்ட் ஆயில். இரண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணை அல்லது ஜோஜோபா ஆயில் அல்லது ஆலிவ் ஆயில். பெப்பர் மிண்ட் ஆயிலுடன் மேல் கூறியிருக்கும் மூன்று ஆயில்களில் ஒன்றை கலந்து ஒரு பௌலில் வைக்கவும். மென்மையாக இதை தலையில் வழுக்கை மற்றும் முடி குறைந்த இடங்களில் மசாஜ் செய்யவும்.
உங்கள் விரல் நுனிகளால் பத்து பதினைந்து நிமிடங்கள் சர்குலர் மோஷனில் தடவவும். இது உங்கள் தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். பிறகு 30 நிமிடங்கள் கழித்து ஷாம்பு போட்டு அலசவும். வாரத்தில் இரண்டு முறை இப்படிச் செய்யலாம்.
பெப்பர் மிண்ட் மற்றும் விளக்கெண்ணெய்
விளக்கெண்ணையில் கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஈ மற்றும் ரிசினோலெய்க் அமிலம் உள்ளதால் முடி வளர்ச்சி அதிகமாகும்.
5லிருந்து 6துளிகள் பெப்பர் மிண்ட் ஆயில் இரண்டு டேபிள்ஸ்பூன் விளக்கெண்ணெய். பெப்பர் மிண்ட் மற்றும் விளக்கெண்ணையை கலந்து இதை தலையில் வழுக்கை உள்ள இடங்களில் தடவி பிறகு 30 நிமிடங்கள் கழித்து ஷாம்பூ போட்டு வாஷ் செய்யவும். இது முடி வளர்ச்சியைத் தூண்டும்.
பெப்பர்மிண்ட் ஆயில் மற்றும் ஆலோவேரா ஜெல்
ஆலோவேரா அரிப்பைத் போக்கி முடியை நீரேற்றமாக வைப்பதால் பெப்பர் மிண்ட் மற்றும் ஆலோவேரா சேர்த்து பயன்படுத்த முடி வளர்ச்சி அபாரமானதாக இருக்கும்.
மூன்று துளிகள் பெப்பர்மிண்ட் ஆயிலுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் ஆலோவேரா ஜெல் சேர்த்து தலையில் மென்மையாக மசாஜ் செய்யவும். 30 நிமிடங்கள் கழித்து வெது வெதுப்பான நீரில் அலசவும். வாரம் இருமுறை இப்படிச்செய்ய முடிவளர்ச்சி அதிகரிப்பதை உணர்வீர்கள்.
வழுக்கை மற்றும் முடி உதிர்தல் ப்ரச்னை உள்ளவர்கள் மேற்கூறிய வற்றை கடைபிடிக்க நல்ல ஆரோக்கியமான முடி வளர்ச்சியை பெறுவீர்கள். இவற்றைப் பொறுமையாக கடைபிடிக்க வேண்டும். முடி ஆரோக்கியமாக வளர பெப்பர் மிண்ட் அதிக அளவில் உதவுகிறது.