

பெண்களுக்கு ஒரு நற்செய்தி. அது உணர்வூக்கம் தந்து உங்களை மேலே தூக்கிவிடும் செய்தியும்கூட!
அதுதான் – உங்களை நீங்கள் அழகுபடுத்திக் கொள்ளுங்கள் என்னும் செய்தி!
ஆணாதிக்க உலகில் ஒரே வேலையில் கூட தாழ்த்தப்பட்டு ஊதியம் குறைந்த நிலையில் தரப்பட்டு அவலப்படும் பெண்கள் இனி தங்களை இன்னும் கொஞ்சம் அழகுபடுத்திக் கொண்டு மெருகேற்றி வேலைக்கும் வெளியிலும் செல்ல வேண்டும்!
என்ன நடக்கும்? செய்துதான் பாருங்களேன் என்கிறது ஆய்வு.
ஜியாடோங்டாங் பல்கலைக்கழ்கத்தைச் சேர்ந்த லிஜுவான் ஜியொ தனது சகாக்களுடன் நடத்திய ஒரு ஆய்வு சுவாரசியமான ஆய்வு!
ஆணுக்கும் பெண்ணுக்குமான ஊதியத்தில் பெண்ணுக்குக் குறைந்த ஊதியம் ஏன்?
சீனாவில் 254 கவர்ச்சிப் பாவைகள் தங்களது உடல் அழகை மேம்படுத்திக் கொண்டதன் விளைவைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களுக்கு எந்த விஷயத்திலும் உதவி உடனே கிடைத்தது. அவர்கள் மீது கவனம் அதிகமானது; அது மட்டுமல்ல; பெரிய தவறுகளிலும் கூட உடனடி மன்னிப்பு கிடைத்தது!
காதல் வயப்பட்ட காதலர்களும் அவர்களுக்குக் கிடைத்தனர். தகுந்த வேலையைத் தேர்ந்தெடுப்பதிலோ அவர்களுக்கு தேர்ந்தெடுப்பது மிகவும் சுலபமானது.
இரண்டாவது கட்டமாக இன்னொரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 182 அழகிகள் பங்கு கொண்டனர்.
இதிலும் அவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். தங்களை அழகுபடுத்திக் கொள்வதானது தங்களுக்கு நல்ல நண்பர்களை உடனடியாகத் தந்தது என்றனர்.
சிலர் மட்டுமே எதிர்மறை விளைவுகளைப் பற்றிக் கூறினர். சில மேலதிகாரிகள் அவர்கள் மீது பொறாமைப்பட்டதையும் ஒரே வேலையைக் காலம் காலமாகச் செய்யும் நபர்கள் அவர்களுக்குத் தொந்தரவு தந்ததையும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்த இரண்டு குழுக்களிலும் முக்கால்வாசி பெண்கள் தங்களது அழகு ஒரு “ப்ராக்டிகல் அஸட்” (நடைமுறை சொத்து”) என்றனர்.
சிலர் மட்டுமே இந்த அழகு மேம்பாட்டைப் பற்றி தங்கள் சந்தேகத்தை எழுப்பினர். தங்களது கல்வித்தரம், கடுமையான உழைப்பு ஆகியவை இந்த அழகுக்கும் மேலானவை என்பது அவர்கள் கூற்று.
270 பேர்களிடம் பல்வேறு நாடுகளைப் பற்றிய எல்லா விவரங்களும் அலசி ஆராயத் தரப்பட்டன. ஆய்வாளர்கள் பல நாடுகளில் அந்த நாட்டின் செல்வத்தில் 85 சதவிகிதம் ஆண்களும் 15 சதவிகிதம் மட்டுமே பெண்கள் பெற்றதையும் கண்டறிந்தனர்.
சில நாடுகளில் மட்டுமே ஆண்கள் 52 சதவிகிதமும் பெண்கள் 48 சதவிகிதமும் செல்வத்தைப் பங்கிட்டுக் கொண்டனர் என்பதும் தெரிய வந்தது.
இதற்கு அடுத்தபடியாக, கற்பனை நாடு ஒன்று உருவாக்கப்பட்டது. ஒரு ஆன்லைன் பயிற்சிக்கூடம் நிறுவப்பட்டது. அதில் ஒன்றில் தொழிலில் தரம் என்பது முன்னணியாக வைக்கப்பட்டது. இன்னொன்றில் பார்ப்பதற்கு அழகாக இருக்கும் அழகு முன்னணியில் வைக்கப்பட்டது.
ஆய்வின் முடிவில் பெண்கள் எப்படி தங்களது சொந்த நம்பிக்கைகள் தங்கள் அழகை மெருகூட்டி மேம்படுத்தின என்பதைக் கண்டனர் என்பது அறிய வந்தது. பாரம்பரிய நம்பிக்கை அதிகம் இல்லாத குழுக்களைச் சேர்ந்த பெண்கள் தங்கள் கல்வித் தரத்தை மேம்படுத்துவதையே முதலிடமாகக் கொண்டனர் என்பதும் தெரிய வந்தது. இவர்கள் கவர்ச்சியை ஒரு மூலதனமாக ஆக்குவது தவறு என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தனர்.
கவர்ச்சியை விட தங்களது வேலைத்தரத்தை மேம்படுத்துவதே சரி என்பது இவர்கள் கொள்கை.
இந்த ஆய்வை நடத்தியவர்கள் இது தனி ஆளாக இருந்த பெண்களிடம் மட்டுமே நடத்தப்பட்டது என்பதையும் இது சீனாவில் மட்டுமே நடத்தப்பட்டது என்பதையும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
உடல் அழகை மேம்படுத்துவத்து பாரம்பரிய அதிகார அமைப்பின் மீது செல்வாக்கு செலுத்தும் என்று பல உளவியல் கொள்கைகள் தெரிவிக்கின்றன.
“Beauty is currency: Laywoman’s perceptions of the Social and Instrumental Functions of Physical Attractiveness” என்ற இந்த ஆய்வானது லிஜுவான் ஜியோ, பயோலின் ஜியோ, ஃபேங் வேங் (Lijuan Xiao, Baolin Li, Fang Wang) ஆகியோரால் நடத்தப்பட்டது.
இது ‘ஆர்சிவ்ஸ் ஆஃப் செக்ஸுவல் பிஹேவியர்’ என்ற இதழில் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது.
வாசகர்கள் நவீன வேலைச் சந்தையில் தோற்றத்திற்கும் திறமைக்கும் இடையிலான நடைமுறை உண்மைகளையும் உலகளாவிய ஆய்வின் முடிவுகளையும் முழுமையாகப் பெற்றுச் செல்வார்கள்.