முகப்பொலிவுக்கு மாதுளையா? பலே!

Pomegranate for beauty and health
Pomegranate for beauty and health
Published on

ரு டீஸ்பூன் மாதுளை ஜுஸ், சந்தனம் இரண்டையும் கலந்து முகத்தில் பூசி, 10 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகத்தில் பளபளப்பு கூடும்.

சிலருக்கு திறக்கவே முடியாத அளவுக்கு கண் பொங்கிவிடும். இமைகளும் உதிர்ந்து விடும். இதற்கு ஒரு மாதுளம்பழத்தை நான்காக வெட்டி, அதை தண்ணீரில் போட்டு கொதிக்கவிட்டு, ஆற வைத்து கிடைக்கும் தண்ணீர் கொண்டு கண்களை கழுவினால், கண் பொங்குவது உடனே நிற்கும்.

சருமத்தின் சுருக்கத்தைப் போக்குவதிலும் மாதுளைக்கு முக்கிய பங்குண்டு. மாதுளம்பழ விழுதையும், வெண்ணையையும் தலா 1டீஸ்பூன் எடுத்து குழைக்க வேண்டும். தோலில் தொய்வு ஏற்பட்டிருக்கும் இடத்தில் இந்த பேஸ்ட்டை தடவி பத்து நிமிடம் கழித்து கழுவினால் தோல் சுருக்கம் நீங்கும்.

பருக்களை மறைய வைப்பதில் மாதுளை பெரும் பங்கு வகிக்கிறது. மாதுளம் பவுடருடன் ஒரு டீஸ்பூன் பயத்தம் மாவு, அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்க வேண்டும். குளிப்பதற்கு முன் இதை முகத்தில் பூசி, காய்ந்த பிறகு கழுவ வேண்டும். வாரம் இரண்டு, மூன்று முறை இப்படி செய்து வந்தால் பருக்கள் வந்த தடம் தெரியாது முகம் பளபளப்பாக இருக்கும்.

மாதுளை ஜுஸுடன் 1டீஸ்பூன் வெட்டிவேர் பவுடர் கலந்து முகத்தில் பூசி, காய்ந்த பிறகு கழுவி வர பருக்கள் வரவே வராது.

இதையும் படியுங்கள்:
மாதுளை தோல் டீயின் 5 அதிமுக்கியமான ஆரோக்கியப் பயன்கள்!
Pomegranate for beauty and health

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com