மாதுளை தோலில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்கள் இதயத்தை பாதுகாப்பதோடு, சருமத்தை பாதுகாக்கும் நன்மைகளை உள்ளடக்கி சருமத்தை இளமையுடன் வைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அந்த வகையில் மாதுளை தோல் டீயின் அதி முக்கியமான ஐந்து பயன்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. நாள்பட்ட நோய்களுக்கு சிறந்தது: மாதுளை தோலில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தி நாள்பட்ட நோய்கள் வருவது. அதாவது நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், இதய நோய் போன்றவை தடுக்கப்படுகிறது.
2. எலும்பு ஆரோக்கியம்: எலும்புகளை உறுதிப்படுத்த, புதிய எலும்புத் திசுக்களை வளர வைக்க மாதுளை தோலில் உள்ள மினரல்கள், பையோ ஆக்டிவ் சப்ஸ்டன்ஸ் உதவுவதோடு, எலும்புப்புரை நோய் , எலும்பு உடைதல், மூட்டு வலி போன்ற பிரச்னைகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
3. தொண்டை வலி: மாதுளை தோல் டீ இருமல் மற்றும் சளிக்கு நல்ல நிவாரணியாக இருப்பதோடு, தொண்டை வலி, இருமலுக்கு வீட்டு வைத்தியமாகவும் உள்ளது.
4. செரிமானத்தை மேம்படுத்துகிறது: மாதுளை தோல் டீ பாரம்பரிய வைத்தியத்தில் பல வகையான செரிமான கோளாறுகளை நீக்குவதாக கூறப்படுவதோடு, வயிற்றுப்போக்கு, இரப்பை குடல் நோய்க்கு மாதுளை தோல் மருந்தாக இருக்கிறது. மாதுளையில் இருக்கும் கசப்புத் தன்மையில் உள்ள டானின்கள் திசுக்களை இறுகச் செய்து குடல் அழற்சி நோயை குறைக்க உதவுகிறது.
5. சருமப் பிரச்னைகள் வராது: தினசரி மாதுளை தோல் டீ குடிப்பது சருமத்தில் தெரியும் கருமை திட்டுக்களை அகற்ற உதவுவதோடு, கருவளையம், முகப்பருக்கள் வருவதைத் தடுத்து, சருமத்தை பொலிவாக்குகிறது.
மாதுளை தோல் டீ செய்முறை: இரண்டு கப் தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைத்து அதே கப்பில் அரை கப் மாதுளை தோல் பவுடர் சேர்த்து நன்கு கலந்து, அதில் கால் ஸ்பூன் டீ தூள் அல்லது க்ரீன் டீ தூள் சேர்த்து கலந்துவிட்டு அந்த கலவையை 5 நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து வடிகட்டினால் மாதுளை தோல் டீ தயார். சுவைக்கு தேன் கலந்து குடிக்கலாம் அல்லது அப்படியேவும் பருகலாம்.