பெண்கள் பொதுவாக தங்களை அழகாக காட்டிக் கொள்வதில் அதிக அக்கறை காட்டுகிறார்கள். இதன் காரணமாக, மற்றவர்களிடத்தில் இருந்து தங்களை வேறுபடுத்தி, சிறப்பாக காட்சிப்படுத்திக் கொள்வதற்காகவே, பிளவுஸ் வகைகளை சிம்பிளா புதுப்புதுசா போட ஆசைப்படுகிறார்கள். பிளவுஸ் என்பது பெண்கள் புடவைக்கு பொருத்தமாக அணியும் மேலாடையாகும். தற்போது பிளவுஸ்கள் பல்வேறு டிசைன்கள் மற்றும் ஸ்டைல்களில் கிடைக்கின்றன.
முன்பெல்லாம் கப்பு கை, நீண்ட, குட்டை கை வைத்த பிளவுஸ்கள் தான் வரும். ஆனால் இப்போது நிறைய பிளவுஸ் மாடல்கள் வந்தாலும் சில குறிப்பிட்ட மாடல்கள் பெண்களுக்கு பிடித்த வகையில் உள்ளன. அந்த வகையில் பெண்கள் விரும்பும் சில சிம்பிளாக பிளவுஸ் மாடல்களை பார்க்கலாம்.
போட் நெக்: இந்த பிளவுஸ் மாடல் ஒரு நேர்த்தியான மற்றும் நவநாகரீக தோற்றத்திற்கு ஏற்றது, குறிப்பாக பட்டு புடவைகளுடன் இந்த மாடல் பிளவுஸ் அணியும் போது உங்களின் அழகை தூக்கிக்கொடுக்கும். குண்டானவர்களுக்கு இந்த டிசைன் பொருந்தாது.
நீண்ட கை பிளவுஸ்: நீண்ட கை பிளவுஸ் என்பது, கையின் முழங்கையின் நுனி வரை வரும் பிளவுஸ் ஆகும். இது புடவை மற்றும் லெஹங்கா போன்ற ஆடைக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். பழங்காலத்தில் பெண்கள் அணிந்த நீண்ட கை பிளவுஸ் வகைகள் தற்போது மீண்டும் இக்கால பெண்கள் மத்தியில் உலா வந்து கொண்டிருக்கிறது. இக்கால இளம் பெண்களும் இந்த நீளக்கை ரவிக்கைகளை விரும்பி அணிகிறார்கள். அதுமட்டுமின்றி கைகள் குண்டாக இருப்பவர்கள் நீண்ட கை வைத்த பிளவுஸ் போட்டால் ஒல்லியாக தெரிவார்கள். ஒரு சிறிய மற்றும் நேர்த்தியான தோற்றத்திற்கு நீண்ட பிளவுஸ் சிறந்தவை.
பப் கை பிளவுஸ்: இந்த பிளவுஸ் தாவணி, காட்டன் புடவைக்கு மிகவும் பொருத்தமான இருக்கும். ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலில் நடித்த பார்வதி கேரக்டர் இந்த பிளவுஸ் போட்டிருந்த காரணத்தால் இளம் பெண்கள் மத்தியில் இந்த பிளவுஸ் டிசைன் மிகவும் பிரபலமானது.
எல்போ ஸ்லீவ் பிளவுஸ் (Elbow Sleeve Blouse): அடக்கமான தோற்றத்தை விரும்பும் பெண்களுக்கு இந்த பிளவுஸ் டிசைன் ஏற்றது. வெளியூர்களுக்கு பயணம் செய்யும் போது இந்த பிளவுஸ் மிகவும் சௌகரியமாக இருக்கும்.
நீண்ட பார்டர் பிளவுஸ்: நீண்ட பார்டர்கள் கொண்ட பிளவுஸ்கள் ஆடைக்கு ஆடம்பரத்தை சேர்க்கின்றன. இவை பட்டு மற்றும் பனாரசி புடவையுடன் அணியும் போது மேலும் அழகு சேர்க்கும். இப்போது பெண்கள் அதிகம் இந்த பிளவுஸ் டிசைனை விரும்புவதில்லை.
ஸ்லீவ்லெஸ் பிளவுஸ்: இது புடவைக்கு நவீன மற்றும் தனித்துவமான தோற்றத்தை வழங்குகிறது. இளம் பெண்கள் அதிகம் விரும்பும் டிசைன் இது. இது கவர்ச்சியான மற்றும் தைரியமான தோற்றத்தை தரும். V கழுத்து, ரவுண்ட் கழுத்து, ஸ்கொயர் கழுத்து, ஹார்ட் கழுத்து போன்ற பலவிதமான கழுத்து டிசைன்களில் ஸ்லீவ்லெஸ் பிளவுஸ்கள் கிடைக்கின்றன.
வி நெக் பிளவுஸ்: காட்டன் மற்றும் பாரம்பரிய புடவையுடன் கட்டும் போது நேர்த்தியான தோற்றத்தை அளிக்கிறது. மேலும் ஒல்லியாக இருப்பவர்களுக்கு இந்த பிளவுஸ் எடுப்பாக இருக்கும். கல்லூரியில் படிக்கும், வேலைக்கு போகும் பெண்களுக்கு இது சூப்பர் சாய்ஸ்.
வட்ட கழுத்து ரவிக்கை: பொதுவாக வீட்டில் இருக்கும் பெண்கள் அணியும் பிளவுஸ் டிசைன் இது. அனைத்து வகையான சந்தர்ப்பங்களுக்கும் அணிவதற்கு ஏற்ற ஒரு உன்னதமான பிளவுஸ் டிசைன் இது. வீட்டில் இருக்கும் பெண்கள் இந்த பிளவுஸ் டிசைனை அதிகம் விரும்புவார்கள்.
பா நெக் பிளவுஸ்: இந்த பிளவுஸ் அனைத்து தரப்பினருக்கும் ஏற்றது, மேலும் இந்த டிசைன் உங்கள் முதுகை அழகாக காட்டும்.