மஞ்சள், புனுகு இருக்க பருக்கள் மீது பயமேன்!

beauty care...
beauty care...

னைவருக்கும் முகம் அழகாக இருக்க வேண்டும் என்பது ஆசைதான். சிலருக்கு சில நேரங்களில் முகப்பருக்கள் தோன்றி முகத்தின் அழகை கெடுத்துவிடும். அதற்கு எளிய அழகு குறிப்புகளை பயன்படுத்தி முக அழகை எப்படி பெறலாம் என்பதை இப்பதிவில் காண்போம். 

*புனுகு என்பது மனம் மிக்க களிம்பு போன்ற மருந்து பொருள் ஆகும். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இந்த புனுகை வாங்கி பருக்களின் மீது தடவ வேண்டும். அவ்வாறு செய்து வந்தால் பருக்கள் சரியாகிவிடும். பருக்கள் இருந்த இடமே தெரியாமல் போய்விடும்.

*திருநீற்றுப்பச்சிலையை நன்றாக அரைத்து முகத்தில் பூசி ஒரு மணி நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் மிக விரைவில் முகப் பருக்கள் சரியாகும். 

*தொட்டா சுருங்கி இலைகளை பால் விட்டு நன்றாக அரைத்து முகத்தில் பூசி இரண்டு மணி நேரம் கழித்து கழுவ வேண்டும். அப்படி செய்து வந்தாலும், பருக்கள் இருந்த தடம் தெரியாமல் போய்விடும். 

இதையும் படியுங்கள்:
நெஞ்செரிச்சலைப் போக்கும் சத்துமிக்க சுக்கான் கீரை கூட்டு!
beauty care...

*துளசி இலை, வேப்பிலை, எலுமிச்சை இலை, பப்பாளி இலை ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து முகத்தில் பூசி குளித்தால் முகப்பரு விரைவில் மறையும். 

*சிறிதளவு திருநீற்றுப்பச்சிலை இலைகளுடன் வசம்பு சேர்த்து அரைத்து பருக்களின் மீது போட்டால் பருக்கள் குணமாகும். 

*சிறிதளவு மஞ்சள் தூள் சம அளவு சந்தனத்தூள் ஆகியவற்றுடன் இளநீர் சேர்த்து குழைத்து பருக்களின் மீது பூசி வந்தால் பருக்கள் நாளடைவில் மறையும். 

இவையாவும் நாம் வீட்டிலேயே இருக்கும் பொருட்களை வைத்தே சுலபமாக தயார் செய்யலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com