நெஞ்செரிச்சலைப் போக்கும் சத்துமிக்க சுக்கான் கீரை கூட்டு!

சுக்கான் கீரை கூட்டு
சுக்கான் கீரை கூட்டு

ருத்துவ குணம் நிறைந்த இந்த கீரையை அவ்வளவாக யாரும் அறிந்திருக்கவில்லை. அவ்வளவாக உபயோகிப்பதும் இல்லை. கீரைக்கார அம்மாவிடம் சொல்லி வைத்தால் கொண்டு வந்து தருவார்கள். அவ்வளவு சத்து நிறைந்த இந்த கீரை வெறும் இருபது ரூபாயில் கிடைக்கும். இதனை புளிச்ச கீரை போல் சமைத்து சாப்பிடலாம். இதிலேயே புளிப்பு சுவை உள்ளதால் புளி சேர்க்கத் தேவை இல்லை. நிமிடத்தில் வெந்துவிடும். இதனுடன் வெந்த பயத்தம் பருப்பு அல்லது துவரம் பருப்பு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மசிக்கவும். கடுகு, பச்சை மிளகாய் அல்லது காய்ந்த மிளகாய் இரண்டை தாளிக்க சத்தான கீரை ரெடி. இதனை சாதத்தில் பிசைந்து சாப்பிட ருசியாக இருக்கும்.

சுக்கான் கீரை கூட்டு:

கீரை ஒரு கட்டு

பயத்தம் பருப்பு 1/2 கப் 

உப்பு தேவையான அளவு 

மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன்

பெருங்காயத்தூள் 1/2 ஸ்பூன்

தாளிக்க: கடுகு 

பச்சை மிளகாய் (அ)காய்ந்த மிளகாய் 2

1/2 கப் பயத்தம் பருப்பை நன்கு குழைவாக வேக வைத்துக் கொள்ளவும். கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து ஒரு கப் தண்ணீர் விட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேகவிடவும். வெந்தயக் கீரையில் பருப்பை சேர்த்து, பெருங்காயத்தூள் போட்டு நன்கு மசிக்கவும். தேங்காய் எண்ணெயில் கடுகு, மிளகாய்  தாளித்துக் கொட்ட ருசியான கீரை கூட்டு தயார்.

இதையும் படியுங்கள்:
உங்கள் சருமத்திற்கு பீட்ருட் தரும் ‘அழகு’ நன்மைகள்!
சுக்கான் கீரை கூட்டு

இது குடல் புண்ணை குணமாக்கும். 

இதயம் பலப்படும். 

மலச்சிக்கலுக்கு சிறந்த தீர்வு இந்த கீரை. 

உணவில் சேர்க்க பசியை தூண்டும்.

இதை உணவில் சேர்க்க செரியாமை பிரச்னை நீங்கி நன்கு ஜீரணம் ஆகும் .

நெஞ்செரிச்சல் (acidity) ஏற்படுபவர்களுக்கு இந்த கீரை மிகவும் நல்லது. நெஞ்செரிச்சலை தடுக்கக்கூடிய இந்த கீரையை சட்னி கூட செய்து சாப்பிடலாம். சமைத்து பயன்பெறலாமே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com