பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தான் தினமும் தனது முடியை எப்படி பராமரிக்கிறார் என்பது குறித்து ஒருமுறை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். அதுகுறித்துப் பார்ப்போம்.
நடிகைகளின் கூந்தல் மிகவும் ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும், அழகாகவும் இருப்பதை காணமுடியும். அவர்கள் என்னத்தான் பார்லர் சென்று லட்சக்கணக்கில் செலவு செய்து முடியை அழகாக மாற்றினாலும், அதை நாம் வீட்டில் தினமும் பராமரிப்பது மிகவும் அவசியம். அந்தவகையில் பிரியங்கா சோப்ராவின் பராமரிப்பு குறிப்புகள் பற்றிப் பார்ப்போம்.
வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். முதல் நாள் இரவே தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய், ஆம்லா எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை நன்றாக தேய்க்கவும். குறிப்பாக உச்சந்தலையில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். பின் தூங்கிவிட்டு, காலை எழுந்ததும் தலைக்கு குளிக்கவும். இதனால், செதில்கள் மற்றும் பொடுகுகள் குறைந்து உச்சந்தையில் PH சமநிலை பராமரிக்கப்படும். ரத்த ஓட்டம் அதிகரித்து முடி உதிர்வு குறையும், முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
அதேபோல், உங்கள் கூந்தலுக்கு ஏற்ற ஷாம்பு பயன்படுத்த வேண்டும். சல்பேட் இல்லாத ஷேம்பு பயன்படுத்துவது நல்லது. இது சேதத்தை சரிசெய்யவும், வறட்சியைக் குறைக்கவும் உதவும். ஒருவேளை, உங்கள் தலைமுடி ட்ரை ஹேராக இருந்தால், நீரேற்றத்திற்காக கண்டிஷனரைப் பயன்படுத்துங்கள்.
வாரத்திற்கு இரண்டு முறையாவது ஹேர் மாஸ்க் போட வேண்டும். இது கூந்தலுக்கு ஊட்டமளித்து முடி உதிர்வைத் தடுக்கிறது. பிரியங்கா சோப்ரா பயன்படுத்தும் இரண்டு ஹேர் மாஸ்க் பற்றிப் பார்ப்போம்.
1. அரிசி தண்ணீர் அவகேடோ மாஸ்க்: 4 ஸ்பூன் அரிசியை 8 மணி நேரம் ஊறவைத்துவிட்டு வடிகட்டவும். அதில் 1 அவகேடோ பழத்தை பிசைந்து ஒரு பேஸ்ட் போல் தயாரிக்கவும். உச்சந்தலை மற்றும் முடியில் தடவி 45 நிமிடங்கள் கழித்து எப்பவும்போல ஷாம்பு வாஷ் செய்துக்கொள்ளவும்.
2. கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெயை நன்றாக கலந்து உச்சந்தலை மற்றும் முடியில் தடவி 30 நிமிடங்கள் ஊறவைத்து தலைக்கு குளிக்கலாம்.
அதேபோல், தலைக்கு வெந்நீர் பயன்படுத்த வேண்டாம். இது முடியை வறட்சியாக்கும். குளிர்ந்த நீரில் குளியுங்கள். முடியை காயவைக்கும்போதும் ஹேர் ட்ரையர் பயன்படுத்தாமல், இயற்கை காற்றில் காயவைப்பது நல்லது.
ஹீட் ஸ்டைலிங் கருவிகளை பயன்படுத்துவதற்கு முன்பு ஆர்கான் எண்ணெய் மற்றும் கெரட்டின் கொண்ட ஹேர் சீரத்தை அப்ளை செய்து அதன் பிறகு முடியை ஒழுங்கப்படுத்தலாம். இது வெப்பதிலிருந்து முடியை பாதுகாக்கும். இருப்பினும், வாரம் இரண்டு முறை மட்டும் ஹேர் ஸ்டைலிங் கருவிகளைப் பயன்படுத்துங்கள்.