Samantha Beauty Tips: சமந்தாவின் அழகின் ரகசியம் இதுதான்!

Samantha
Samantha
Published on

பொதுவாக நடிகைகளின் அழகின் ரகசியம் தெரிந்துக்கொள்வதில் நமக்கு மிகுந்த ஆர்வம் ஏற்படும். அந்தவகையில் சமந்தாவின் பியூட்டி ரகசியம் குறித்து இந்தத் தொகுப்பில் பார்ப்போம்.

இந்திய சினிமா ரசிகர்களின் மனதில் பெரிய இடத்தைப் பிடித்திருக்கும் சமந்தா, சில காலமாக மயோசிடிஸ் என்ற அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு இந்த அரிய வகை தசை நோயிலிருந்து ஓரளவு குணமானார். சிறிது காலம் சினிமாவிலிருந்து விலகியிருந்த சமந்தா, தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக விஜய் தேவரகொண்டாவுடன் குஷி என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார். பின்னர் அவர் படங்களின் அப்டேட்டுகள் மட்டுமே அவ்வப்போது வெளிவந்தன.

இவர் தனது உடைகளை மறு வடிவமைப்பு செய்து அதனை வேறு நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்துவார். இதன்மூலம் சுற்றுசூழலை பாதுகாப்பதுடன் உழைப்பாளர்களின் கடின உழைப்பு வீணாகாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்வார். இப்படி தனது உடை முதல் இயற்கை பொருட்கள் வைத்து சருமத்தைப் பராமரிப்பது வரை சமந்த ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து கவனிப்பார்.

அந்தவகையில் சமந்தா தனது சருமத்திற்கு பயன்படுத்தும் பியூட்டி டிப்ஸ் பற்றி பார்ப்போம்.

சமந்தா தனது சருமத்திற்கு அதிகம் சந்தனம் பயன்படுத்துவார். எந்த பேஸ் பேக்குகள் எடுத்தாலும் அதில் சந்தனம் இருக்கும். சந்தனத்தில் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கிறது. சந்தனம் சரும வறட்சியைக் குறைக்கிறது மற்றும் சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. இதனால், சமந்தா சந்தன ஃபேஸ் பேக்குகளையே அதிகம் பயன்படுத்துகிறார்.

சந்தன ஃபேஸ் பேக்:

ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் சந்தன பவுடரை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் 2 ஸ்பூன் பால் மற்றும் 1 துளி ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கிக்கொள்ள வேண்டும். பின் அதை முகம் மற்றும் கழுத்து வரை தடவி 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஊறவைக்கவும். பின் வெதுவெதுப்பான நீரினால் முகத்தைக் கழுவுங்கள். காய்ந்ததும் மாய்ஸ்ட்ரைஸர் தடவுங்கள். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முதல் 3 முறை பயன்படுத்தி வந்தால், நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
Sobhita Beauty Tips: சோபிதா துலிபாலாவின் அழகின் ரகசியம் இதுதான்!
Samantha

சந்தன ஃபேஸ் பேக் 2:

அதேபோல் பௌலில் 1 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு தோல் பொடி, அதில் 1 டேபிள் ஸ்பூன் சந்தனப் பவுடர் மற்றும் சிறிது பால் சேர்த்து பேஸ்ட் செய்து அதனை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவிவிட வேண்டும்.

சந்தனத்தை முகத்திற்கு வழக்கமாக பயன்படுத்தி வந்தால், சருமம் ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்கும். சமந்தாவின் அழகின் ரகசியம் சந்தனமே.


Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com