சமூக ஊடகங்களைப் பார்த்து இந்தப் பொருட்களை முகத்தில் பயன்படுத்தினால் அவ்வளவுதான்! 

Products should not use on your face
Products should not use on your face!
Published on

சமூக ஊடகங்கள் தற்போது அழகுக் குறிப்புகளால் நிறைந்துள்ளன.‌ இயற்கை பொருட்களைப் பயன்படுத்தி முகத்தை பளபளப்பாக மாற்றலாம், பருக்களை நீக்கலாம், என பல வீடியோக்கள், பதிவுகள் நம்மை கவர்ந்திழுக்கும். ஆனால், அனைத்து குறிப்புகளையும் பின்பற்றி விட முடியாது. ஏனெனில், அனைத்து சருமங்களும் ஒரே மாதிரியாக இருக்காது. ஒவ்வொருவருக்கும் சரும வகை வேறுபடும். எனவே, தவறான பொருட்களை முகத்தில் பயன்படுத்துவதால் பல பிரச்சினைகள் ஏற்படலாம்.‌ 

முகத்தில் பயன்படுத்தக்கூடாத பொருட்கள்: 

  • சமையல் எண்ணெய்: தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்ற சமையல் எண்ணெய்களை நேரடியாக முகத்தில் தடவக்கூடாது. இது ஒரு சில சரும வகைகளுக்கு பொருந்தாது. இவை சருமத் துளைகளை அடைத்து முகப்பருவுக்கு வழி புகழுக்கும். இந்த எண்ணெய்களில் ஹைட்ரஜனேற்றப்பட்ட கொழுப்புகள் அதிகம் இருப்பதால், முகப்பரு மற்றும் பிற தோல் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படலாம். 

  • பேஸ்ட்: பற்பசைகளில் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் உள்ளன. இவை சருமத் துளைகளை அடைத்துவிடும். இது பருக்கள், கரும்புள்ளிகளை உண்டாக்கும். மேலும் உங்கள் சருமம் எரிச்சலடைந்து வீக்கம் மற்றும் தடிப்புகள் ஏற்படலாம்.‌

  • முடிக்கு பயன்படுத்தும் பொருட்கள்: முடிக்கு பயன்படுத்தும் பொருட்களை சருமத்திற்கு பயன்படுத்தக் கூடாது. அதில் உள்ள ரசாயனங்கள், வாசனை திரவியங்கள் சருமத்திற்கு எரிச்சலை உண்டாக்கும். இதனால் சொறி, சிவந்து போதல், அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.‌ 

  • வெந்நீர்: வெந்நீரை ஒருபோதும் நேரடியாக சருமத்தில் பயன்படுத்தக்கூடாது. இதனால், முகத்தில் உள்ள இயற்கை எண்ணெய்கள் முற்றிலுமாக நீக்கப்படும். இது சருமம் வறண்டு போக வழிவகுத்து பல்வேறு விதமான சரும நோய்களை உண்டாக்கும். மேலும், வெந்நீர் சருமத்தின் நிறத்தையும் மாற்றக்கூடும்.‌

  • வாசனை திரவியங்கள்: வாசனை திரவியங்களை முகத்திற்கு பயன்படுத்தும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா? அப்படியானால் உடனடியாக அதை நிறுத்துங்கள். குறிப்பாக, வாசனை அதிகம் வரும் பாடி லோஷங்களை நீங்கள் முகத்திற்குப் பயன்படுத்தும் நபராக இருந்தால் அதை முற்றிலுமாகத் தவிர்க்கவும். இதை கைகள், கால்கள், தொடைகள் மற்றும் முதுகு போன்ற உடலின் அடர்த்தியான தோல் உள்ள இடங்களில்தான் அப்ளை செய்ய வேண்டும். முகத்திற்கு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட மாஸ்சரைசர், சன் ஸ்கிரீன்கள் மட்டுமே பயன்படுத்துங்கள். 

இதையும் படியுங்கள்:
கர்ப்பிணிகள்… அழகு சாதனப் பொருட்கள்… அச்சச்சோ! 
Products should not use on your face

சமூக ஊடகங்களில் காணும் எல்லா அழகு குறிப்புகளையும் பின்பற்றாமல் இருப்பது நல்லது.‌ உங்கள் தோல் வகைக்கு ஏற்ற சரியான பொருட்களைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள். சருமம் தொடர்பாக பிரச்சனைகள் இருந்தால் உடனடியாக தோல் மருத்துவரை அணுகுங்கள். மேலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கலாம்.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com