பொதுவாக அழகு குறிப்புகளில் சோற்றுக் கற்றாழை, செம்பருத்தி பூ, கார்போக அரிசி, மருதாணி, போன்றவற்றை அதிகமாக பயன்படுத்துவதை பார்த்திருப்போம். இந்தப் பொருட்களால் என்னென்ன நன்மை கிடைக்கிறது என்பதை இபதிவில் காண்போம்.
வல்லாரை- வெப்பத்தைக் குறைத்து குளிர்ச்சியை தரும் தன்மையை கொண்டது.
சோற்றுக்கற்றாழை- வெப்பத்தை குறைத்துக் குளிர்ச்சியை தரும் தன்மை கொண்டது
பொன்னாங்கண்ணி - கூந்தலுக்கு கருமையான நிறத்தை கொடுக்கும்.
செம்பருத்தி பூ - கூந்தலுக்கு கருமையான நிறத்தை கொடுக்கும்.
கீழாநெல்லி __மருத்துவ குணம் கொண்டது.
குப்பைமேனி -பொடுகு மற்றும் கரப்பானை கட்டுப்படுத்தும்.
துளசி - பேன் மற்றும் பொடுகை கட்டுப்படுத்தும்.
அரைக்கீரை -கூந்தலுக்கு இரும்புச் சத்தை கொடுக்கும்.
கருவேப்பிலை -இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் ஏ நிறைந்தது.
மருதாணி -நிறத்தை குளிர்ச்சியை கொடுப்பதோடு கூந்தலை ஒரே சீராக வைக்கும்.
நில ஆவாரை - இது கூந்தலை கருமையாக்கும் தன்மை கொண்டது.
பொடுதலை - பொடுகு தலையை தூய்மையாக்கி கிருமிகளைக் கொல்லும் தன்மை கொண்ட மூலிகை.
அருகம்புல் - அருகம்புல் தலைக்கு நல்ல குளிர்ச்சியையும் ஆரோக்கியத்தையும் தரும்.
சம்பங்கி விதை - இது கூந்தலை கண்டிஷனிங் செய்வ
தோடு மட்டுமின்றி நன்றாகவும், கருமையாகவும், அடர்த்தியாகவும் கூந்தல் வளர உதவுகிறது. இதை கார்போக அரிசி என்றும் கூறுவர்.
வெந்தயம் - குளிர்ச்சி தரும் தன்மை கொண்டது பொடுகை நீக்கும்.
நெல்லிக்காய் - குளிர்ச்சி மற்றும் மிகச் சிறந்த கண்டிஷனிங் தன்மை கொண்டது. கூந்தலை பளபளப்பாகவும் வைத்துக் கொள்ள உதவும்.
மசாஜ் செய்ய இயற்கையான மூலிகை பொருட்களை கொண்டு வீட்டிலேயே மூலிகை எண்ணெய் தயாரிக்கும் முறை!
இந்த மூலிகைகளை ஒன்றாக நன்றாக இடித்து சாற்றை எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் நல்லெண்ணெய் அரை லிட்டர், தேங்காய் எண்ணெய் அரை லிட்டர், ஆமணக்கு எண்ணெய் காலிட்டர், பொடுகு இருந்தால் வேப்பெண்ணை கால் லிட்டர் இந்த நான்கு எண்ணெய்களுடன் மூலிகைகளின் சாற்றை சிறு தீயில் அடுப்பில் வைத்து நீர் வற்றி வரும் வரை விட்டு பின்னர் இறக்கி ஆறவைத்து பாட்டிலில் அடைத்து உபயோகிக்கலாம். நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். நீர் வற்றி பதம் வரும்போது எண்ணெய் படபடவென்று பொரியும். நுரையும் இருக்காது. இப்படி தயாரித்து வைத்துக் கொண்டால் அடிக்கடி தயாரிக்க வேண்டிய சிரமம் இருக்காது. எண்ணெயுடன் சேர்த்து மூலிகைகளையும் நன்றாக காய்ச்சி விடுவதால் எண்ணையும் கெடாமல் இருக்கும்.
இந்த ஆயில் எண்ணெயைக் கிண்ணத்தில் சிறிதளவு ஊற்றி கொண்டு சூடான தண்ணீரின் மேல் வைத்து சூடு செய்து மசாஜ் செய்தால் கூந்தலுக்கு கருமை மற்றும் பளபளப்பு கிடைக்கும்.