நுரையீரல் பிரச்னைகளை தடுக்கும் பச்சைக் காய்கறி!

Green vegetable that prevents lung problems
Green vegetable that prevents lung problemshttps://www.herzindagi.com
Published on

லகெங்கிலும் நடந்த பல்வேறு ஆய்வுகளில் அன்றாடம் உண்ன வேண்டிய டாப் 10 காய்கறிகளில் ஒன்றாகக் குறிப்பிடப்படும் காய்கறி பீன்ஸ் என அறியப்பட்டுள்ளது. பச்சை பீன்ஸில் தேவையான அளவுக்கு வைட்டமின் C, A மற்றும் B6 ஆகிய அனைத்து சத்துக்களும் நிறைந்து உள்ளன. இதில் ஃபோலிக் அமிலமும் காணப்படுகிறது. இதைத் தவிர, பச்சை பீன்ஸில் தேவையான அளவு கால்சியம், இரும்பு சத்து, மக்னீசியம், மாங்கனீஸ், பீட்டா கரோட்டின், புரதச்சத்து, பொட்டாசியம் மற்றும் காப்பர் சத்துக்கள் உள்ளன.

100 கிராம் பீன்ஸில் நார்ச்சத்து 9 சதவீதம் உள்ளது. இந்த நார்ச்சத்தானது குடலின் உட்புறச் சுவர்களைப் பாதுகாத்து நச்சுத் தன்மைகளை வெளியேற்றும் தன்மை கொண்டது. பீன்ஸ் மெலிந்த புரதங்கள் நிறைந்த உணவு. ஒரு கப் சமைத்த பீன்ஸ் 15 கிராம் புரதங்கள் கொண்டது. பீன்ஸ் நார்ச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், போன்ற அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்தது. இவை தசை உருவாக்கம் மற்றும் தசை வலிமைக்குத் தேவையான புரதங்களை வழங்குகிறது.

பீன்ஸை தொடர்ந்து சாப்பிட விஞ்ஞானிகள் அறிவுறுத்துகின்றனர். இதில் நிறைய நார்ச்சத்து மற்றும் சிறப்பு ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. இந்த ஆக்ஸிஜனேற்றம் நாள்பட்ட வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இது புற்றுநோயின் அபாயத்தையும் குறைக்கிறது என்று ஆராய்ச்சி கூறுகிறது. பீன்ஸில் உள்ள நார்ச்சத்து உணவு செரிமானத்திற்கும், இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

பெருகி வரும் வாகனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டால், சுமார் 60 சதவீதம் பேர் அசுத்தமான காற்றை சுவாசித்து அதனால் நுரையீரல் பாதித்து நெஞ்சு சளி, மூச்சு திணறல் மற்றும் நுரையீரல் புற்றுநோய் அபாயத்தில் உள்ளனர் என்கிறது ஓர் ஆய்வு. இந்நிலையில் இந்த நோய் பாதிப்பு ஏற்படும் ஆபத்தை தவிர்க்க தினமும் 50 கிராம் பச்சை பீன்ஸ் சாப்பிட்டு வர வேண்டும் என்பதை ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர் ஜப்பான் நாட்டின் கார்ட்டின் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.

பச்சை பீன்சில் வைட்டமின் பி 6 , வைட்டமின் சி, கே மற்றும் மாங்கனீசு சத்துக்கள் அதிகமாக இருப்பதே இதற்குக் காரணம் என்கிறார்கள். இது தவிர புரோட்டீன் சத்தும் இதில் அதிகளவில் உள்ளது. தினமும் பச்சை பீன்ஸ் சாப்பிட 90 சதவீதம் நுரையீரல் பிரச்னையை தீர்க்கலாம் என்கிறார்கள்.

பீன்ஸ் உட்கொள்வது உடல் பருமன் அபாயத்தைக் குறைக்கும். இதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து தொப்பை மற்றும் கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது. பீன்சை கறி, கூட்டு என பல வகைகளில் தயார் செய்து சாப்பிடலாம். அல்லது பீன்ஸை சாலட் வடிவிலும் சாப்பிடலாம். பீன்ஸில் வைட்டமின் ஓ உள்ளது. இது புது செல்கள் உருவாவதில் ஏற்படும் சிக்கல்களைத் தடுக்கின்றது. ஆதலால் புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே பரவாமல் தடுக்குமாற்றலை பீன்ஸ் கொண்டுள்ளது.

பீன்ஸ் நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சூப்பர் புட் என்கிறார்கள் அமெரிக்க நீரிழிவு சங்கத்தினர். காரணம், பீன்ஸ் குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்டது. புரதச் சத்து நிறைந்துள்ளது. பீன்ஸ் டைப் 2 இரத்த குளுக்கோஸ் அளவுகளை கணிசமாகக் குறைக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். பீன்ஸ் மற்ற மாவுச்சத்து உணவுகளை விட புரதம் நிறைந்தது. குடல் பாக்டீரியாக்களுக்கு உணவளித்து செரிமானத்தை மேம்படுத்தும். இன்சுலின் எதிர்ப்பை கணிசமாக குறைக்கும். ஆரோக்கிய நலனுக்காக பீன்ஸுடன் இஞ்சி, பூண்டு சேர்த்து சமைத்து அரிசி உணவுடன் சாப்பிடலாம்.

இதையும் படியுங்கள்:
திருமணத்துக்கு முன்னாடி இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க ப்ளீஸ்!
Green vegetable that prevents lung problems

பீன்ஸில் உள்ள, ‘போலேட்’ இதயத்தின் ‘ஹோமோசைஸ்டீன்’ அளவை சரியான முறையில் பராமரித்து இதயத்தை பாதுகாக்கிறது. பச்சை பீன்ஸில் லூட்டீன், பீட்டா கரோட்டின் மற்றும், நியோசாந்தைன் இருப்பதை ஆய்வில் கண்டறிந்துள்ளனர். இந்த நுண் ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் நம் உடலின் வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்த மற்றும் அழற்சி எதிர்ப்பு முகவர்களாகவும் செயல்படுகின்றன.

பீன்ஸில் உள்ள சிலிக்கான் எலும்புகள் மற்றும் இணைப்பு திசுக்களின் வலிமைக்கு முக்கியமானது. பீன்ஸில் ஒமேகா 3யின் மூலக்கூறுகளும் உள்ளன. தற்போது பரவலாகப் பேசப்பட்டு வரும் ஃபேட்டி லீவர் பிரச்னை பீன்ஸ் சாப்பிட சரியாகும். பச்சை பீன்ஸில் கரோட்டினாயிட்ஸ் எனும் வேதி பொருள் உள்ளது. இது கண்களின் உட்பகுதியில் உண்டாகும் அழுத்தத்தை குறைக்கிறது. இவற்றை தவிர, இதில் பல விதமான சத்துக்கள் உள்ளன. இவை அனைத்தும் நம் கண் பார்வையை மேம்படுத்தும். பச்சை பீன்ஸில் உள்ள கரோட்டினாய்டுகளான லுடீன், பீட்டா கரோட்டீன் மற்றும் நியோசாந்தைன், சருமத்தின் தரத்தை அதிகரித்து, முதுமையை எதிர்த்துப் போராடும் குணம் கொண்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com