இயற்கை முறையில் உதடுகளைப் பாதுகாப்பது எப்படி?

Natural Beauty tips
Protecting lips naturally...
Published on

ழகான முகத்திற்கு கண்களும், உதடுகளும் எப்பொழுதுமே முக்கியமானவை. முகத்தின் பிற பகுதிகளுக்கு முக்கியத்துவம் ­­கொடுக்கும் நாம் உதட்டு பராமரிப்பில் அவ்வளவாக கவனம் செலுத்துவதில்லை. இதனால் உதட்டில் வெடிப்பும், வறட்சியும், தோல் உரிதலும் ஏற்படும். உதடுகளை மென்மையாகவும் ஈரப்பதத்துடனும் வைத்திருக்க வீட்டிலேயே உதடுகளுக்குத் தேவையான மாஸ்க்குகளை செய்யலாம். இவை உதடுகளை ஈரப்பதமாகவும், மென்மையாகவும் வைத்துக்கொள்ளும்.

தேன் மற்றும் தேங்காய் எண்ணெய் லிப் மாஸ்க்:

எளிமையான ஆனால் அதே சமயம் சக்தி வாய்ந்த லிப் மாஸ்க் இது. தேன் மற்றும் தேங்காய் எண்ணெயை ஒரு சிறு கிண்ணத்தில் சம அளவு எடுத்து கிரீம் போன்ற கலவை உருவாகும் வரை நன்கு கலக்கி உதடுகளில் தடவி இரவு முழுவதும் அப்படியே விடவும். காலையில் வெதுவெதுப்பான நீரால் துடைத்து விட உதடுகளை மென்மையாகவும் நீரேற்றமாகவும் வைத்திருப்பதுடன் வறண்ட உதடுகளை போக்கவும் உதவும்.

ரோஜா இதழ்கள் மற்றும் பால்:

சில ரோஜா இதழ்களை காய்ச்சாத பாலில் ஊறவைத்து, பின்பு அதை பேஸ்டாக அரைத்து உதடுகளில் தடவவும். இந்த மாஸ்க்கை 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிட உதடுகளுக்கு இயற்கையான இளஞ்சிவப்பு நிறத்தை கொடுக்கும். பால், ரோஜா இதழ்கள் இரண்டுமே இயற்கையான ஈரப்பதமூட்டிகள். இவை உதடுகளை மென்மையாகவும், மிருதுவாகவும் வைத்துக்கொள்ள உதவும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் மஞ்சள் லிப் மாஸ்க்:

சில துளிகள் தேங்காய் எண்ணெயுடன் சிறிது மஞ்சள் தூளைக் கலந்து உதடுகளில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பின்பு மெதுவாக உதடுகளைக் கழுவிவிட்டு, உதடுகளை ஈரப்பதமாக வைத்திருக்க லிப் பாம் தடவலாம்.

இதையும் படியுங்கள்:
இடது பக்கம் மூக்கு குத்துவதன் அறிவியல் மற்றும் ஆரோக்கிய நன்மைகள்!
Natural Beauty tips

பீட்ரூட் லிப் மாஸ்க்:

இரண்டு பீட்ரூட் துண்டுகளை எடுத்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்து சாறு எடுக்கவும். அத்துடன் சிறிதளவு தேன் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து உதடுகளில் தடவ இயற்கையான இளஞ்சிவப்பு நிறத்தையும், ஈரப்பதத்தையும் தரும்.

ஹனி லிப் மாஸ்க்:

இரண்டு சொட்டு தேனை எடுத்து பசைபோல கையால் நன்கு கலந்து அத்துடன் பொடித்த பழுப்பு சர்க்கரையையும் சிறிது சேர்த்து குழைத்து உதடுகளில் தடவவும். இது உதடுகளை மிருதுவாக்கி, நிறத்தையும் மேம்படுத்தும்.

தேன் மற்றும் அவகோடா (வெண்ணெய் பழம்) லிப் மாஸ்க்:

மென்மையான அவகோடா பழத்தை நன்கு மசித்து அத்துடன் தேன் சிறிது கலந்து உதடுகளில் தடவி சிறிது நேரம் கழித்து(20 நிமிடங்கள்) கழுவிவிடவும். அவகோடாவின் ஈரப்பதமூட்டும் பண்புகளும், தேனின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் வறண்ட மற்றும் வெடிப்புள்ள உதடுகளுக்கு ஏற்றது.

இதையும் படியுங்கள்:
முகப் பொலிவு, கரும்புள்ளி நீங்க... ரோஜா இதழும், பாசிப்பயறும்!
Natural Beauty tips

பொதுவாக பேக் போன்று போட விரும்பினால் தினமும் காலை, மாலை இரண்டுவேளையும் போடலாம். ஆனால் ஸ்க்ரப் செய்வதாக இருந்தால் தினசரி செய்யக்கூடாது. வாரம் ஒருமுறை செய்யலாம். ஆனால் உதட்டில் அதிக வெடிப்புகள் இருந்தால் ஸ்க்ரப் செய்யாமல் இருப்பது நல்லது. முக்கியமாக உதட்டை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும். நீரிழப்பு காரணமாகத்தான் உதடுகள் வறண்டு போகின்றன. எனவே தேவையான அளவு தண்ணீர் பருகுவது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com