முடி உதிர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் 'புரதச் சத்து' மிக்க பருப்புகள்! 

Beauty tips in tamil
'Protein-rich' legumes
Published on

டல் ஆரோக்கியத்தை அள்ளித்தரும் பருப்பு வகைகளில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. பெரும்பாலும் இவற்றை நாம் உணவுப்பொருளாக மட்டுமே நினைத்து வருகிறோம். ஆனால் பருப்புகளை முடி உதிர்வுப் பிரச்னையை சமாளிக்க பயன்படுத்தலாம் என்றால் நம்புவீர்களா? 

நீங்கள் இளைஞராக இருந்தாலும் அல்லது வயதானவராக இருந்தாலும் முடி உதிர்வு பிரச்சினை என்பது மரபியல், ஊட்டச்சத்து குறைபாடு, ஹார்மோன் மாற்றங்கள் போன்றவற்றால் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். முடி உதிர்வதால் மனஅழுத்தம் ஏற்படுகிறது. இதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். உங்களுக்கு முடி கொட்ட ஆரம்பித்த உடன் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது முக்கியம். 

முடி உதிர்வுக்கு என்ன காரணம்? முடி உதிர்வுக்கு மரபணு அல்லது மருத்துவ காரணங்கள் பல இருக்கலாம். ஆனால் ஒருவரது வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை காரணங்களால் முடி உதிர்தல் பிரச்னை அதிகம் உள்ளது. முடி உதிர்தல் பாதிப்புக்கு பொதுவான காரணமாக இருப்பது ஒருவரின் தவறான உணவுப் பழக்கம் என நிபுணர்கள் கூறுகின்றனர். நம் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் இருந்தால் மட்டுமே முடி உதிர்வு பிரச்னை சரி செய்யப்படும். குறிப்பாக இரும்புச்சத்து மற்றும் புரதம் நிறைந்த உணவை நாம் உட்கொள்ள வேண்டும். இதை யாருமே பின்பற்றுவதில்லை. 

உளுத்தம் பருப்பு: உளுத்தம் பருப்பில் புரதம், இரும்புச்சத்து, மற்றும் போலிக் அமிலம் நிறைந்து காணப்படுகிறது. இது முடி உதிர்வைத் தடுத்து ஒட்டுமொத்த தலையின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும். எனவே ஒவ்வொருவரும் கட்டாயம் உங்களது உணவில் உளுத்தம் பருப்பை சேர்த்துக்கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
பனிக்காலத்திலும் உங்கள் சருமம் பட்டுப்போல இருக்க...
Beauty tips in tamil

பாசிப்பருப்பு : உளுத்தம் பருப்பு போலவே பாசிப்பருப்பும் இரும்புச்சத்து, புரதம் என அனைத்து விதமான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் நமக்கு வழங்குகிறது. இதன் மூலமாக முடி வளர்ச்சி அதிகம் தூண்டப்பட்டு ஆரோக்கியத்துடன் இருக்கும். இதில் பயோட்டின் உள்ளதால் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

மசூர் பருப்பு: இதில் அதிகப்படியான பயோட்டின், புரதம் மற்றும் துத்தநாகம் உள்ளதால் முடியின் வேர்களை பலப்படுத்தும். மேலும் முடி உடைவதைத் தடுக்க உதவும். இதில் நிறைந்திருக்கும் இரும்புச்சத்து முடிகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் விநியோகத்தை பூர்த்தி செய்கிறது. 

இந்த பருப்பு வகைகளை நீங்கள் நேரடியாகவும் தலையில் அப்ளை செய்யலாம், அல்லது உணவாகவும் உட்கொள்ளலாம். நேரடியாக தலையில் தடவுவதை விட பருப்புகளை உணவாக உட்கொள்ளும்போது உள்ளிருந்து முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது. மேலும் அதிலிருந்து உடலுக்குத் தேவையான நன்மைகளும் கிடைக்கச் செய்கிறது. 

-கிரி கணபதி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com