முள்ளங்கி செரிமானத்திற்கு மட்டுமல்ல நல்ல முடி வளர்ச்சிக்கும் மிக நல்லது. முடிக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் ஊட்டச் சத்துக்கள் இதில் உள்ளன. இதன் வைட்டமின் சி முடியின் வேர்க்கால்களை பாதுகாக்கிறது. கொலாஜனையும் அதிகரித்து முடியை வலுவாக்குகிறது.
வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ்
இது முடி வளர்ச்சிக்கு முக்கியமானது. குறிப்பாக வைட்டமின் பி6 சத்து சிவப்பு ரத்த அணுக்களை தூண்டி தலை முடியில் நல்ல ஆக்சிஜனேற்றத்தைத் தருகிறது.
துத்தநாகம்
முடியில் இருக்கும் எண்ணெய் சுரப்பிகளை நல்ல முறையில் செயல்பட வைக்கிறது இதன் துத்தநாகச் சத்து.
ஃபோலேட்
இது இரத்த சிவப்பு அணுக்களை அதிகரிக்கச் செய்து தலை முடிக்கு ஊட்டச்சத்துக்கள் போய்ச் சேர உதவுகிறது.
நார்சத்து
உடல் நச்சுக்களை நீக்கி நல்ல ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவுகிறது
தண்ணீர் சத்து
இது தலைமுடியை வறண்டு போகாமல் நீரேற்றத்துடன் வைக்கிறது.
முள்ளங்கி ஜுஸ் தயாரிப்பது எப்படி?
தேவையானவை:
முள்ளங்கி - 2
இஞ்சி - 1துண்டு
தேன் - ஒரு டீஸ்பூன்
தண்ணீர் - ஒரு கப்
முள்ளங்கியை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும். காரட் துருவியில் முள்ளங்கியை துருவவும். பிறகு ஒரு நல்ல மஸ்லின் துணி எடுத்து துருவிய முள்ளங்கியில் இருந்து சாறு வடி கட்டி எடுக்கவும். இந்த சாறு நன்றாக உங்கள் முடிக்கு வேலை செய்ய அழற்சி எதிர்ப்பு உள்ள இஞ்சியை துருவி சேர்க்கலாம். அல்லது தேன் சேர்க்கலாம். இதை தலையில் நன்றாகத் தேய்க்கவும். இதை நீங்கள் உள்ளுக்கும் குடிக்கலாம்.
முள்ளங்கி ஜுஸ் பயன்
இதை உட்கொள்வதால் நல்ல முடி வளர்ச்சி தூண்டப்படும். தினமும் காலை வெறும் வயிற்றில் அரை கப் முள்ளங்கி ஜுஸ் குடிக்கலாம். முடி வளர்ச்சி அபாரமாக இருக்கும்.
சிலருக்கு இதன் வாசனை பிடிக்காமல் இருந்தால் இதை காரட், வெள்ளரிக்காய் மற்றும் ஆப்பிள் ஜுசுடன் கலந்தும் குடிக்கலாம்.
இன்னும் ஊட்டச் சத்து கிடைக்க இந்த முள்ளங்கி ஜுசில் எலுமிச்சையைப் பிழிய லாம். எலுமிச்சையின் சி சத்தும் மற்றும் முள்ளங்கியில் பண்புகளும் இணைந்து முடி வளர்ச்சிக்கு உதவி புரியும்.
முள்ளங்கி ஜுசை தலைக்குத் தடவும் போது நன்கு மசாஜ் செய்யவும். இதை 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு வெது வெதுப்பான நீரில் அலசவும்.
நீங்கள் முள்ளங்கி ஜுசுடன் நெல்லிக்காய் ஜுஸ் அல்லது தேங்காய் எண்ணை போன்றவற்றைச் சேர்க்க பலன் இன்னும் அதிகமாகும்.
முள்ளங்கி ஜுஸ் தடவிக் குளிக்கும் போது அளவிற்கதிகமாக வாஷ் செய்ய வேண்டாம். இது அதிலுள்ள ஊட்டச்சத்தை போக்கிவிடும்.
இயற்கையான முறையில் முடி வளர்ச்சிக்காக முள்ளங்கி ஜுஸ் பயன்படுத்துவது நல்ல பலனைத்தரும்.