

இப்போது பருவமழை ஆரம்பிக்கும் நேரம். வெயில் காலத்தில் போலவே மழைக்காலத்திலும் சரும பராமரிப்பு சரியான உடைகளை தேர்ந்தெடுப்பது போன்றவற்றிலும் கவனம் செலுத்துவது முக்கியம். குறிப்பாக மழை காலத்திற்கு ஏற்ற காலணிகளை அணிவதில் கவனம் செலுத்தவேண்டும்.
மழைக்காலத்தில் ஹீல்ஸ் வகை காலணிகளைத் தவிர்க்க வேண்டும். மழை நீரில் மாட்டிக்கொண்டால் நடக்கும் போது கால்கள் மிகவும் சிரமத்தை ஏற்படுத்தும்.
ஷூ உபயோகிப்பவர்கள் மழை நீர் புகாத ஷீக்களை வாங்கி பயன்படுத்தலாம். பிளாஸ்டிக் கவர்களை வாங்கி அணிந்து கொள்ளலாம். ரப்பர் அல்லது பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பிளிப் பிளாப் வகை காலணிகள் மழைக்காலத்தில் அணிவதற்கு ஏற்றவை. இவை தண்ணீரை உறிஞ்சாமல் கால்களை உலர்வாக வைக்கும்.
ரப்பர் சோல் செருப்புகள் மழைக்கால சாலைகளில் நடக்கும்போது நல்ல பிடிமானத்தை கொடுக்கும். பாசி, சகதி போன்றவற்றை வழுக்கி விடாமல் தடுக்கும்.
பட்டையுடன் கூடிய காலணிகள் மழைக்காலத்தில் அணிவதற்கு பொருத்தமானது. ஈரம் படும்போது கால்களின் பிடியில் இருந்து வழுக்காமல் இருப்பதற்கு இவை உதவும்.
மழைக்காலத்தில் காலணிகளை உலர்வாக வைத்திருப்பது முக்கியம். ஈரமான காலணிகளை அப்படியே அணியக்கூடாது. வெளியில் போய் வந்த பின் காலணிகளுக்குள் இருக்கும் நீரை வடிய வைத்து உலரவைத்து போடவேண்டும். காலணிகளை உலர வைக்க நேரமில்லை என்றால் ஹேர் டிரையரால் காயவைக்கலாம்.
ஈரப்பதத்தை உலரவைக்க தவறினால் பாதத்திலும் விரல்களின் இடுக்குகளிலும் பூஞ்சைத்தொற்றுகள் சேற்றுப்புண் பாதிப்புகள் வரும்.
மழைக்காலத்தில் பாதங்களுக்கு சரியான அளவில் பொருந்தும் வகையில் காலணிகளை வாங்கவேண்டும்.
ஏனெனில் சாக்கடை நீர் மழை நீர் போன்றவை பாதங்களில் படிந்து, கிருமித் தொற்றை உண்டாக்கும் வாய்ப்புகள் அதிகம். இதை தவிர்க்க தண்ணீர் புகாத வாட்டர் ப்ரூப் வகை காலணிகளை தேர்ந்தெடுத்து அணியவேண்டும். இதன் மூலம் நோய் தொற்று கால்களில் வெடிப்பு போன்றவை வராமல் தடுக்கலாம்.
ஃப்ளோட்டர்ஸ் ஸ்டைல் ஃபுட்வேர் காலணிகள் கால்களை இறுக பற்றிக் கொள்ளும் இந்த வகை செருப்புகள் மழைக்காலத்திற்கு ஏற்றவையாகவும், பாத உறுதித்தன்மையுடன் வழுக்காமல் இருக்கும்.
மழைக்காலத்தில் கிராக்ஸ் காலணிகள் இலகுத் தன்மையுடன், கால்களிலிருந்து கழன்றுவிடாமல் தடுக்கும். இதன் எளிமையான வடிவமைப்பு மழைத் தண்ணீரால் கால்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு வழுக்காமலும், உறுதி தன்மையுடனும் இருக்கும்.
மழைக்காலத்தில் இரண்டு ஜோடி காலனிகளை வைத்திருந்தால் ஈரமான காலணியை மாற்றி உலர்ந்த காலணிகளை அணியலாம். தண்ணீரில் கழுவி காயவைத்து, தண்ணீர் இல்லாமல் உலர வைத்தும் சாக்ஸையும் உலரவைத்து போட்டால் கால்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
இது மாதிரி மழைக்காலத்தில் காலணிகளை பாதுகாத்தால், கால்களுக்கும், நீண்ட நாட்கள் உபயோகிக்கலாம்.