

தற்போது அழகுக்காக பெண்கள் செலவழிக்கத் தயாராக இருக்கிறார்கள். காரணம் வெளியே சென்று பணிசெய்ய வேண்டிய நிலை. வெயிலிலும் மழையிலும் அலைய வேண்டிய பெண்கள் தங்கள் அழகுக்கு முக்கியத்துவம் தருவது இயல்பானதே.
பழங்கள் உண்பதற்கு மட்டுமல்ல அழகு சிகிச்சை களுக்கும் பயன்படுத்தலாம் என்று தெரிந்தால் இனி பழத்தோல்களைகூட விடமாட்டோம். வாழைப்பழம் சத்து நிறைந்தது. வாழைப்பழம் மட்டுமல்ல ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளி, தர்பூசணி போன்ற பழங்களும் நமது சருமத்தை பாதுகாத்து பொலிவுடன் அழகை மேம்படுத்தும்.
சரி இவற்றையெல்லாம் இப்படி பயன்படுத்தினால் பாதிப்பின்றி அழகு பெறலாம். இதோ உங்களுக்காகவே இந்த டிப்ஸ்கள்…
வாழைப்பழத்தை நன்றாக குழைத்து அதனுடன் கொஞ்சம் தயிர் சேர்த்து நன்கு கலந்து மாஸ்க்போல முகத்தில் போட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகத்தில் உள்ள தேவையற்ற செல்கள் நீங்கும்.
நன்கு பழுக்காத வாழைப்பழத்தை பயன்படுத்தி முகத்தில் படித்துள்ள அழுக்குகளை அகற்றலாம். பழத்தை நன்கு கூழாக்கி அதனுடன் தேங்காய் எண்ணெய் அல்லது தேன் துளி கலந்து அப்படியே முகத்தில் பேக் போல போட்டு 5 முதல் 10 நிமிடங்கள் ஊறவிட்டு பின் முகம் கழுவினால் முகம் பளபளப்பாக மின்னும். முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும்.
ஆப்பிளை நன்கு அரைத்து கூழாக்கி அதை அப்படியே கழுத்துப் பகுதியில் பற்றாக போட்டு 15 நிமிடம் ஊறவிட்டு பின் கழுவ வேண்டும். இந்த கூழில் சிறிது பன்னீர் சேர்த்து கண்களை மூடிக்கொண்டு கண்கள் மீதும் போடலாம். புத்துணர்ச்சி கிடைக்கும். ஆப்பிளின் தோலை பாதங்கள் புறங்கைகள் மீது தேய்த்தால் அவை மென்மையாகவும் பொலிவுடனும் இருக்கும்.
வெள்ளரிக்கு சரும அழுக்குகளை நீக்கி மென்மையாக்கி அழகுப்படுத்தும் தன்மை உண்டு. இது தவிர இதில் ஓரளவு மென்மையான ஆஸ்ட்ரிஜென்ட் உண்டு என்பதால் துருவிய வெள்ளரியுடன் சிறிதளவு பால் கலந்து முகத்தில் தடவ சருமம் புத்துணர்வு பெறும். நறுக்கிய துண்டுகளை எண்ணெய் பசை மிகுந்த சருமத்தில் தேய்க்க அதிகப் படியான எண்ணெய் பசை நீங்கும்.
சருமத்தின் தன்மையை எந்த விதத்திலும் பாதிக்காமல் இயற்கையான முறையில் சுத்தம் செய்யும் தன்மை எலுமிச்சைக்கு உண்டு. சருமத்தில் தளர்வு இருந்தால் அதையும் மாற்றக் கூடியது இது. எலுமிச்சை தோல்களையும் கருமை படிந்திருக்கும் முழங்கைகள், கால் முட்டிகள் போன்றவற்றில் தேய்த்து பின் அதில் கடலை மாவு போட்டு கழுவினால் கருமை நீங்கும்.
ஆரஞ்சு பழங்கள் மிகுதியாக கிடைக்கும் காலங்களில் அதன் தோலை சேமித்து அழகுக்கு அதை பயன் படுத்தலாம். ஆரஞ்சு தோலை நன்கு உலர்த்தி அரைத்து பேசியல் மாஸ்க்காக பயன்படுத்தலாம். இது சருமத்திற்கு மிகவும் உகந்தது.
அதேபோல் ஆரஞ்சு பழத்தோல்களை நீரிலிட்டு கொதிக்கவைத்து மூடி போட்டு அணைத்துவிடவும். இரவு முழுவதும் அதை அப்படியே ஊறவைத்து அந்த நீரை வடிகட்டி காலையில் முகம் கழுவ பயன்படுத்தினால் முக அழுக்குகள் நீங்க பொலிவுடன் திகழும்.
பப்பாளியை நன்கு கூழாக்கி அதை முகத்தில் தடவி வட்டமாக நன்கு மசாஜ் செய்யவும். அதே பப்பாளி பழத்துடன் சிறிது தேன் கலந்து பேஸ் பேக் போட்டு 10 முதல் 15 நிமிடங்கள் ஊறிய பின்பு முகம் கழுவவேண்டும் இதனால் நிறம் கூடுதலாக மேம்படும். மிகச்சுருக்கங்கள் மறையும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும் முக்கியமாக கண்களை சுற்றி ஏற்படும் கருவளையம் மறையும்.
மாம்பழ சீசனில் மாம்பழச் சாறுடன் சிறிது பால் கொஞ்சம் தேன் கலந்து முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்ய சருமத்தின் அடி ஆழத்தில் ஊடுருவி அழுக்குகளை நீக்கி சுத்தப்படுத்தும் மாம்பழத் தோலையும் ஸ்கிரப்போல முகத்தில் தேய்க்கலாம். இதனால் தேவையற்ற இறந்த செல்கள் என்று முகம் மென்மையாகும்.
தர்பூசணி சருமத்தின் ஆரோக்கியத்தை காக்கும் திறன் கொண்டது முக்கியமாக ஈரப்பதம் காப்பதில் தனித்துவம் கொண்ட இந்த தர்பூசணியை பிள்ளைகளாக நறுக்கி முகம் கழுத்து பகுதிகளில் வைத்துக்கொண்டு 30 நிமிடங்கள் அப்படியே படுத்து ஓய்வெடுங்கள் முதல் வெப்பம் தணிவதுடன் சருமத்தின் தளர்வும் நீங்கி சருமம் புத்துணர்வு பெறும்.