நடிகை ராஷ்மிகா மந்தனா அழகு மற்றும் ஃபிட்னஸ் ரகசியங்கள் குறித்துப் பார்ப்போம்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து இந்திய மொழிகளிலும் நடித்து அசத்திவரும் ராஷ்மிகா மந்தனா, ரசிகர்களின் நேஷ்னல் க்ரஷாக இருந்து வருகிறார். அவர் வீட்டில் பயன்படுத்தும் பேஸ்பேக் குறித்து ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.
கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்களின்மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மனதைக் கவர்ந்தவர் ராஷ்மிகா. குறைந்தக் காலத்திலேயே நேஷ்னல் க்ரஷாக மாறிய அவர், தனது ஃபிட்னஸையும் தனது அழகையும் பராமரித்து, பாலிவுட் படங்கள் வரை கம்மிட்டாகி வருகிறார். அவர் நடிப்பில் வெளியான புஷ்பா 2 ஹிட்டாகி வருகிறது.
அந்தவகையில் அவரின் ஃபிட்னஸ் மற்றும் அழகு குறிப்புகள் பற்றிப் பார்ப்போம்.
உடற்பயிற்சி:
ராஷ்மிகா தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்து வருகிறார். யோகா 45 நிமிடங்களும், கார்டியோ 30 நிமிடங்களும், பிலாட்டஸ் வாரத்திற்கு 3 முறை மற்றும் வலிமைக்கான பயிற்சி வாரத்திற்கு 2 முறை செய்து வருகிறார். அதேபோல் தியானம் மற்றும் மன அமைதிக்கான பயிற்சிக்கு தினமும் 20 நிமிடங்கள் ஒதுக்குகிறார். ஏனெனில், மன ஆரோக்கியம் நன்றாக இருந்தாலே, முகமும் அழகாக மாறும்.
தூக்கம்:
ராஷ்மிகா இரவு தினமும் 10:30 மணிக்கு செல்கிறார். மேலும் 5:30 மணியளவில் எழுந்திருக்கிறார். தூக்கம் ஒரு நாளைக்கு 7 முதல் 8 மணி வரை அவசியம் என்கிறார்.
அழகு பராமரிப்பு:
தினமும் ராஷ்மிகா தனது முகத்தை கழுவி சுத்தமாக வைத்துக்கொள்கிறார். அதேபோல் அலோவெரா ஜெல் மற்றும் சன்ஸ்க்ரீன் ஆகியவற்றையும் பயன்படுத்துகிறார். அதேபோல் முடிக்கு எண்ணெய் தேய்த்தும், வாரம் இரண்டு முறை மாஸ்க் பயன்படுத்தியும், இயற்கையான ஷாம்புவையும் பயன்படுத்தி வருகிறார்.
உணவுமுறை:
காலையில் எழுந்தவுடன் க்ரீன் டீ, தானிய வகை ப்ரெட், முட்டையின் வெள்ளைக் கரு மற்றும் பழங்கள் எடுத்துக்கொள்கிறார்.
அதேபோல் மதிய உணவிற்கு சிறு தானியங்கள், கீரை வகைகள், கோழி மார்புக் கறி மற்றும் பருப்பு வகைகள் எடுத்துக்கொள்கிறார்.
தன்னுடை அன்றாட நாட்களை இப்படித்தான் ராஷ்மிகா கழித்து வருகிறார். ஷூட்டிங் நேரங்களில் மட்டும் அந்த நேரத்திற்கு ஏற்றவாரு தனது உடற்பயிற்சி நேரங்களை மாற்றிக்கொள்கிறார்.