புதிய ஓடிடி தளத்தை அறிமுகப்படுத்திய பிரசார் பாரதி; கட்டணம் எவ்வளவு தெரியுமா?

Waves OTT Platform
Waves OTT PlatformSocial Samosa
Published on

சமீபத்தில், இந்தியாவின் பொது ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி உலக தொலைகாட்சி தினத்தையொட்டி, தனது சொந்த OTT தளமான Waves-ஐ இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் அறிமுகப்படுத்தியது.

அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்கள் ஒரு குறிப்பிட்ட  தவணை முறையில் கட்டணங்கள் வசூலித்து அனைத்து சேவைகளையும் வழங்குகின்றன. 

இந்நிலையில், இந்திய பொது ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் அத்தியாத்தில் கால் பதித்து உள்ளது. உலக தொலைகாட்சி தினத்தையொட்டி, பிரசார் பாரதி நிறுவனம் தனது சொந்த ஓடிடி தளமான  Waves-ஐ அறிமுகப்படுத்தியது. இந்த தளம் 'குடும்ப பொழுதுபோக்கு கி நயி லெஹர்' (Family Entertainment Ki Nayi Lehar) என விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. இது முற்றிலும் பொழுதுபோக்கை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்தத் தளம் 65-கும் மேற்பட்ட நேரடி ஒளிபரப்பு தொலைக்காட்சி மற்றும் ரேடியோ சேனல்கள், திரைப்படங்கள், தொடர்கள், செய்திகள், விளையாட்டு, மத மற்றும் அரசாங்கம் சார்ந்த நேரலை நிகழ்ச்சிகள், ஆவணப்படங்கள், மின்புத்தகங்கள் போன்ற கல்வி மற்றும் தகவல் உள்ளடக்கங்கள், இலவச கேம்கள், ஆன்லைன் ஷாப்பிங் வசதிகள் போன்றவற்றை உள்ளடக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி மற்றும் அஸ்ஸாமி உள்ளிட்ட 12 மொழிகளில் இதன் சேவைகள் கிடைக்கின்றன. பன்மொழி உள்ளடக்கம், பல தரப்பட்ட சலுகைகள் கொண்டு, பரந்த அளவிலான பார்வையாளர்களை பூர்த்தி செய்யும் வகையில் இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

Waves தளம் பார்வையாளர்களின் விருப்பத்தேர்வுகள் மற்றும் அவர்களின் பட்ஜெட்டை அடிப்படையாகக் கொண்டு பிளாட்டினம், டைமண்ட் மற்றும் கோல்டு என மூன்று வகையான சாந்தாத் திட்டங்களை வழங்குகிறது.  

இதையும் படியுங்கள்:
மனிதனை சுத்தம் செய்யும் வாஷிங் மெஷின்! சோம்பேறிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்?
Waves OTT Platform

பிளாட்டினம் திட்டம், திரைப்படங்கள், நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்புகள், ரேடியோ ஒளிபரப்புகள், பிரத்யேகமான நிகழ்ச்சிகள் என அனைத்து உள்ளடங்களுக்கான அணுகலை ஆண்டுக்கு ரூ.999-ல் வழங்குகிறது.  அல்ட்ரா HD (1080P) ஸ்ட்ரீமிங் தரம், ஒரே நேரத்தில் நான்கு சாதனங்களில் ஸ்ட்ரீமிங், ஆஃப்லைன் பதிவிறக்கங்கள், பரிவர்த்தனை வீடியோ-ஆன்-டிமாண்ட் (TVOD) சேவைகளில் 10% தள்ளுபடி போன்றவற்றை பிளாட்டினம் திட்டம் உள்ளடக்கியது. 

டயமண்ட் திட்டத்தில், ஆண்டுக்கு ரூ 350 அல்லது மூன்று மாதங்களுக்கு ரூ 85 அல்லது மாதம் ரூ.30 செலுத்தி இணைந்து கொள்ளலாம். இந்த திட்டம் திரைப்படங்கள், நேரடி சேனல்கள், ரேடியோ மற்றும் தேவைக்கேற்ப உள்ளடக்கத்திற்கான அணுகலை உயர் வரையறை (720P) ஸ்ட்ரீமிங் தரத்தில் வழங்குகிறது. ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களில் ஸ்ட்ரீமிங் மற்றும் பதிவிறக்கங்கள் போன்ற அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது.

அடுத்ததாக கோல்டு திட்டம். இதில், ஆண்டுக்கு ரூ 350 அல்லது மூன்று மாதங்களுக்கு ரூ 85 அல்லது மாதம் ரூ 30 செலுத்தி, நிலையான வரையறை (480P) ஸ்ட்ரீமிங் தரத்தில் நேரடி தொலைக்காட்சி மற்றும் வானொலி நிழச்சிகள், ஒளிபரப்புகளைக் கண்டு பயன்பெற முடியும். ஒற்றை சாதன அணுகலை வழங்குகிறது. 

Waves  செயலியை ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இருப்பினும், பயனர்கள் சந்தாவிற்கான பணம் செலுத்த Waves.pb என்ற இணையதளத்தைப் பார்வையிட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. 

பிரசார் பாரதி பாரத்நெட் உள்கட்டமைப்பைப் பயன்படுத்துவதன் வழியாக கிராமப்புற மற்றும் தொலைதூர இடங்களிலும் உயர்தர பொழுதுபோக்கிற்கான அணுகலைப் பெறுவதை உறுதி செய்கிறது. பிரசார் பாரதியின் இந்த Waves தளம், ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா (FTII) போன்ற நிறுவனங்களுடனான ஒத்துழைப்புடன்,  வளர்ந்து வரும் படைப்பாளிகள் மற்றும் இளம் தலைமுறைகள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com