உங்க முகம் அடிக்கடி சிவந்து போகுதா? அச்சச்சோ!

Face Redness
Reasons for Face Redness and Natural Remedies

அடிக்கடி முகம் சிவந்து போவது என்பது எல்லா வயதினரையும் பாதிக்கும் ஒரு மோசமான சரும நிலையாகும். இதற்கான அடிப்படைக் காரணங்களைப் புரிந்துகொண்டு சில இயற்கை வைத்திய முறைகளைப் பின்பற்றுவது மூலமாக சருமம் சிவப்பாவதைத் தடுக்க முடியும். இந்தப் பதிவில் முகம் அதிகமாக சிவப்பதற்கான பொதுவான காரணங்கள் மற்றும் அதற்கானத் தீர்வுகளைப் பற்றி பார்க்கலாம். 

Rosacea: ரோசாசியா என்பது ஒரு நாள்பட்ட தோல் பிரச்சினையாகும். இதன் காரணமாகவும் முகம் சிவந்து போகலாம். இது பெரும்பாலும் ரத்த நாளங்கள் வீங்குவதால் ஏற்படுகிறது. இந்த பாதிப்பால் ஏற்படும் சருமம் சிவந்து போதல் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடலாம். காரமான உணவுகளை சாப்பிடுவது, சூடான பானங்கள், ஆல்கஹால் மற்றும் தீவிர வெப்பநிலை ஆகியவை இதற்கான காரணங்களாக சொல்லப்படுகிறது. இந்தப் பிரச்சனையில் இருந்து விடுபட சூரிய ஒளியில் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்கவும். மேலும் உங்கள் சருமத்திற்கு உகந்த மென்மையான எரிச்சலூட்டாத சருமப் பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்தவும்.‌ 

முகப்பரு: அதிகப்படியான முகப்பருக்களால் கூட முகம் சிவப்பது அல்லது வீக்கம் போன்றவை ஏற்படலாம். இதை சரி செய்ய லேசான கேன்சர் மூலமாக ஒரு நாளைக்கு இரண்டு முறை உங்களது முகத்தை சுத்தமாக கழுவி தூய்மையாக வைத்திருங்கள். முகத்தை அழுத்தித் தேய்ப்பதை தவிர்க்கவும். ஏனெனில் இது சிவப்பு பாதிப்பை மேலும் மோசமாக்கும். Tea Tree ஆயில் அல்லது கற்றாழை ஜெல் போன்ற இயற்கை பொருட்களைப் பயன்படுத்தி வீக்கத்தை குறைத்து விரைவில் குணப்படுத்தலாம். 

ஒவ்வாமை: சிலருக்கு அலர்ஜி காரணமாகவும் முகம் அடிக்கடி சிவந்து போகும். குறிப்பாக காற்றில் பரவும் மகரந்தம், செல்லப் பிராணிகள் மற்றும் குறிப்பிட்ட சருமப் பராமரிப்பு பொருட்கள் போன்றவற்றால் ஒவ்வாமை ஏற்பட்டு முகம் சிவந்து போகலாம். எனவே எதனால் உங்களது முகம் சிவந்து போகிறது என்பதைக் கண்டறிந்து அதிக இரசாயனங்கள் இல்லாத சருமப் பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்துங்கள். 

வறண்ட சருமம்: சருமத்தில் ஈரப்பதம் இல்லாத போது அது வறண்டு செதில்களாகவும், சிவப்பு நிறமாகவும் மாறும். தினசரி நிறைய தண்ணீர் குடிப்பது மூலமாகவும், மென்மையான மாய்ச்சரைசரைப் பயன்படுத்துவதன் மூலமாகவும் உங்கள் சருமத்தை ஹைட்ரேட் செய்து சருமம் சிவந்து போவதில் இருந்து விடுபடலாம். மாய்ச்சரைசர் இல்லாதவர்கள் தேங்காய் எண்ணெய் முகத்தில் தடவினாலே எல்லாம் சரியாகும். 

வெயில்: சூரியனின் தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதர்களில் அதிகமாக வெளிப்படுவதால், முகம் சிவத்தல் எரிச்சல் மற்றும் தோல் உரிந்து போதல் போன்றவை ஏற்படும். எனவே வெளியே செல்வதற்கு முன் குறைந்தபட்சம் SPF அளவு 30 கொண்ட சன் ஸ்கிரீனைப் பயன்படுத்தி உங்கள் சருமத்தைப் பாதுகாக்கவும். 

இதையும் படியுங்கள்:
கூட்டமாக இறந்து கிடந்த காகங்கள்… ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
Face Redness

மன அழுத்தம்: மன அழுத்தம் பதட்டம் மற்றும் தீவிர உடல் உழைப்பு காரணங்களால் தற்காலிகமாக முகம் சிவந்து போகலாம். எனவே மன அழுத்தத்தைத் தவிர்க்க யோகா, தியானம், சுவாசப் பயிற்சி போன்ற நுட்பங்களைப் பயிற்சி செய்யவும். இது மன அழுத்தத்தைக் குறைத்து ஒட்டுமொத்த நல் வாழ்வையும் மேம்படுத்த உதவுகிறது. 

மேலே, குறிப்பிட்டுள்ள காரணங்களால் ஒருவருக்கு அடிக்கடி முகம் சிவந்து போகலாம். எனவே உங்களுக்கு என்ன பாதிப்பு என்பதைக் கண்டறிந்து அதற்கான தீர்வுக்கு சிகிச்சை பெறுவது நல்லது. ஒருவேளை வீட்டு வைத்திய முறைகள் நல்ல பலனைக் கொடுக்கவில்லை என்றால் உடனடியாக தோல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com