

அதிக சூடான நீர் சருமத்தில் உள்ள இயற்கையான எண்ணெய்களை நீக்கிவிடும். எனவே வெதுவெதுப்பான நீரில் குளிப்பதுதான் சருமத்திற்கு நன்மை தரும்.
மாய்ஸ்சரைசரை தவறாமல் பயன்படுத்துவது:
குளித்தவுடன் சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும் பொழுதே தேங்காய் எண்ணெய் அல்லது மாய்ஸ்சரைசரை தடவவேண்டும். காலை, மாலை என இரு வேளைகளும் பயன்படுத்தலாம். இது ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ள உதவும்.
மென்மையான சோப்:
ரசாயனங்கள் மட்டும் அதிக நுரை கொண்ட சோப்புகள் சருமத்தை மேலும் வறட்சியாக்கும். மென்மையான, மூலிகை அல்லது மாயஸ்சரைசிங் சோப்பை பயன்படுத்துவது நல்லது.
தண்ணீர் குடிப்பது:
குளிர்கால காற்று வறண்டதாக இருக்கும். எனவே சருமத்தை உள்ளிருந்து ஈரப்பதமாக வைத்திருக்க நிறைய தண்ணீர் மற்றும் மூலிகை தேநீர் குடிக்கலாம். குளிர்காலத்தில் தாகம் குறைவாக இருக்கும். ஆனால் உடலில் நீர் சத்து குறைந்தால் சருமம் வறண்டு விடும்.
எனவே சருமம் ஆரோக்கியமாக இருக்க தாகம் எடுக்காவிட்டாலும் தினமும் போதுமான அளவு தண்ணீர்(2-3 லிட்டர் தண்ணீர்) குடிக்க வேண்டும். பழங்கள், காய்கறிகள் நிறைந்த உணவை உட்கொள்வது சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
கற்றாழை ஜெல்:
கற்றாழை ஜெல்லுடன் சிறிதளவு தேன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவி வர சரும வறட்சி நீங்கும். அதேபோல் சிறிது காய்ச்சாத பால் அல்லது தயிர் கொண்டு முகத்தை மசாஜ் செய்வது வறண்ட சருமத்திற்கு சிறந்த தீர்வாகும்.
எக்ஸ்ஃபோலியேட் செய்யவும்:
வாரத்துக்கு ஒருமுறை லேசான ஸ்க்ரப் அல்லது ஓட்ஸுடன் சிறிது தேன் கலந்த இயற்கை எக்ஸ்ஃபோலியேட்டைப் பயன்படுத்தி இறந்த சரும செல்களை அகற்றலாம்.
ஆரோக்கியமான உணவு:
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ நிறைந்த உணவுகளான கொட்டைகள், விதைகள், பழங்கள் மற்றும் இலைக் கீரைகளை உணவில் சேர்ப்பது சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
இரவு நேர சரும பராமரிப்பு:
இயற்கை எண்ணெய்களான தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் அல்லது வாஸலின் போன்றவற்றை தூங்கும் முன்பு தடவிக் கொள்ளலாம். இவை சருமத்தை மென்மையாக்குவதுடன், குளிர்கால சரும வறட்சியையும் தடுக்க உதவும்.
குளிர்காலத்திலும் மென்மையான, ஈரப்பதமான சருமத்தை பராமரிக்க கிளிசரின் மற்றும் செராமைடுகள் உள்ள தயாரிப்புகளைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம். ஹைலூரோனிக் அமிலம் கொண்ட சீரம்கள் சரும நீரற்றத்தை அதிகரிக்கும்.