
ஆரம்ப காலங்களிலிருந்து ஃபேஷன் இருந்து கொண்டு வந்தாலும் இன்றைய காலத்திற்கேற்றவாறு ஃபேஷனும் மாறிக்கொண்டே வருகிறது. அழகான ஆடைகளை மட்டுமே விரும்பி அணிந்த நாட்கள் சென்று அழகுடன் சேர்ந்து வசதியாகவும் எதிர்பார்க்கின்றனர் இன்றைய இளைஞர்கள். ஃபேஷன் என்றால் ஆடைகளிலும் அணிகலன்களிலும் அடங்கி விடும் விஷயமல்ல. அது ஒரு “எக்ஸ்பிரஷனும்” கூட பலர் ஒருவர் அணியும் ஆடைகளை வைத்தே அவரைப்பற்றி எடை போடுகிறார்கள்.
உதாரணத்திற்கு Comedy quote டி-ஷர்ட் உடுத்தினால் அவர் வேடிக்கை விரும்பி என்று தீர்மானித்து விடுகின்றனர். அதேபோல் ஷால் அணியும்போது அணிகலன்கள் அணியும் போது அவர் யார் என்பதை அவரின் அவுட்பிட் வைத்தே கண்டுபிடிக்கின்றனர். அதேபோல் புதுவித ஆடை அணிபவர்களும் ஆடைகளின் மூலம் தன்னை வெளி காட்டிக் கொள்கிறார்கள் என்றே கூறலாம். அந்த வகையில் இன்று வசதியாகவும் அழகாகவும் காண்பிக்கும் புறக்கணிக்க முடியாத சில ஃ பேஷன் ட்ரண்டுகளை பார்ப்போம்: 1. ஸ்கின்னி ஜீன்ஸ்:
ஸ்கின்னி ஜீன்ஸ் 2000 ம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட ஒன்று.ஆண்கள் பெண்கள் என இருவருக்கும் வடிவமைக்கப்பட்ட இந்த ஜீன்ஸ் காலோடு ஒட்டி இருக்கமாக இருக்கும் 2023 ட்ரெண்டிங்கில் அதிகமாக பயன்படுத்தும் ஜீன்ஸாக உள்ளது.
Merch clothing
மெர்ச் கிளாத்திங் என்ற ஆடை இப்போது பெரும்பாலான இளைஞர்களால் கவரப்படும் ஆடையாக உள்ளது. இந்த தளதளப்பான டி-ஷர்ட்டில் சில காமெடி சொற்கள் காமெடி இமேஜ் போன்றவையுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கும். வேலைக்கோ கல்லூரிக்கோ சீக்கிரமாக கிளம்பி செல்வோருக்கு இந்த ஆடை மிகவும் உபயோகமாகயுள்ளது.
அக்ஸசெரிஸ்கள்
நமக்கு பிடித்தமான புதுவகையான ஆடைகள் மட்டும் ஃபேஷன் டிரண்டாகி விடாது. இப்போதைய ஃபேஷன் போக்கில் அக்சஸரீஸ் களும் ஒரு முக்கிய பங்கு வகுக்கிறது.மாடர்ன் டிரண்டிற்கு ஏற்ப ஸ்க்ரன்சிஸ்கள், தொப்பிகள், வளையல்கள், பிரின்ட் பேக்ஸ் போன்றவை நம்மை இன்னும் கம்பீரமாக காண்பிக்க உதவுகின்றன. ஒரு முழு அவுட்பிட் என்பது ஆக்ஸஸெரீஸ்கள் இல்லாமல் முழுமை அடைவதே இல்லை. 4.யோகா பேன்ட்ஸ்
இந்த வகையான பேன்ட்ஸ்கள் வயது வரம்புின்றி அனைவரும் உடுத்திக் கொள்வது போல் தான் இருக்கும். பட்டியாலா போன்ற வடிவில் இருக்கும் இந்த பேண்ட் கொரோனா காலகட்டத்தில் நிறைய Work from home இருந்த நேரத்தில்தான் இந்த யோகா பேன்ட்ஸ் அதிகமாக டிரண்டில் இருந்தது.
வீட்டில் வசதியாக போட்டுக்கொள்ளவும் வேலைகள் செய்வதற்கும் ஏதுவாக இருந்தது. இன்றைய மக்கள் Comfortable ஆக இருப்பதையே விரும்புவதால் இந்த யோகா பேன்ட்ஸ் பிரபலமாகி கொண்டே வருகிறது.