Removing Sun Tan
Removing Sun Tan

Removing Sun Tan: முகக்கருமையை நீக்குவதற்கான சில எளிய முறைகள்! 

காலை நேர சூரியனின் வெதுவெதுப்பான கதிர்கள் நம் ஆரோக்கியத்திற்கு நல்லதுதான் என்றாலும், நீண்ட நேரம் சூரிய ஒளியில் இருப்பது சரும தோல் நிறம் மாறுவதற்கு வழிவகுக்கும். இதை ஆங்கிலத்தில் Sun Tan எனக் கூறுவார்கள். சூரிய ஒளியால் முகத்தில் ஏற்பட்ட மாற்றமானது நீண்ட நாட்கள் அப்படியே இருக்கும். இருப்பினும் சில இயற்கையான வழிமுறைகளைப் பின்பற்றி, கருமை நிறத்தை அகற்றி, பளிச்சென்ற அழகிய தோற்றத்தை மீட்டெடுக்க முடியும். 

எலுமிச்சை சாறு: எலுமிச்சை சாறு ஒரு இயற்கையான ப்ளீச்சிங் பொருளாகும். இதை சருமத்தில் பயன்படுத்துவதால் இயற்கை நிறத்தை மீட்டெடுக்க உதவும். இதன் அமிலப் பண்புகள் முகத்தில் உள்ள பழுப்பு மற்றும் கரும்புள்ளிகளைப் போக்க உதவுகின்றன. எலுமிச்சை சாறை பிழிந்தெடுத்து, காட்டன் பஞ்சு பயன்படுத்தி பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடியாகத் தடவுங்கள். பின்னர் 10 முதல் 15 நிமிடங்கள் அப்படியே விட்டு பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். வாரத்தில் சிலமுறை இப்படி செய்தால், விரைவிலேயே சருமம் பளிச்சென்று மாறிவிடும். 

தயிர் மற்றும் மஞ்சள் மாஸ்க்: தயிரில் லாக்டிக் அமிலம் உள்ளது. இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி, பழுப்பு நிறத்தை குறைக்க உதவும். மறுபுறம், மஞ்சள் சருமத்திற்கு இயற்கையான பிரகாசமளிக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. இந்த ஃபேஸ் மாஸ்க் தயாரிக்க கொஞ்சமாக தயிரை எடுத்து அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் போல உருவாக்கிக் கொள்ளுங்கள். அதை முகத்தில் தடவி சுமார் அரை மணி நேரம் கழித்து வெந்நீரில் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் மாஸ்க்கை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால் பழுப்பு நிறம் குறைந்து தோல் நிறம் மேம்படும். 

அலோ வேரா ஜெல்: அலோவேரா அதன் குணப்படுத்தும் பண்புகளுக்கு அறியப்பட்டது. இது முகத்தில் ஏற்படும் கருமையைக் குறைத்து சருமம் எப்போதும் புத்துணர்ச்சியாக இருக்க உதவுகிறது. கற்றாழையை எடுத்து அதன் ஜெல்லை பிரித்தெடுத்து, சரும பாதிப்பு உள்ள பகுதிகளில் தாராளமாகத் தடவும். பின்னர் அரை மணி நேரம் அப்படியே விட்டு முகத்தைக் கழுவினால், முகத்தின் கருமை நீங்க உதவியாக இருக்கும். இதை வாரம் 3 முறை செய்து வந்தாலே முகம் பளிச்சென்று மாறிவிடும். 

இதையும் படியுங்கள்:
ரசாயனத்தால் பழுக்க வைக்கப்படும் வாழைப்பழங்கள்... சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?
Removing Sun Tan

சன் ஸ்கிரீன்: சருமத்தில் உள்ள கருமையை நீக்க சிகிச்சை மேற்கொள்வதற்கு பதிலாக மேலும் சருமம் பாதிக்காமல் இருக்க ஏற்ற சன் ஸ்கிரீனைப் பயன்படுத்துவது நல்லது. இதன் மூலமாக தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களிலிலிருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்கலாம். வெயிலில் செல்லும்போது எப்போதும் SPF அதிகம் கொண்ட சன் ஸ்கிரீனைப் பயன்படுத்தவும். இது உங்களுக்கு சூரிய ஒளியின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பை அளிக்கிறது. 

மேலே குறிப்பிட்டுள்ள முறைகளை நீங்கள் முறையாகப் பின்பற்றுவது மூலமாக, சூரியனால் ஏற்பட்ட கருமையை நீங்கள் எளிதாக சரி செய்ய முடியும். குறிப்பாக இந்த கோடைகாலத்தில் அதிகமாக வெயிலில் செல்லாதீர்கள். அப்படியே சென்றாலும் குடை, சன் ஸ்கிரீன் போன்றவற்றைப் பயன்படுத்துவது நல்லது. 

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com