ரசாயனத்தால் பழுக்க வைக்கப்படும் வாழைப்பழங்கள்... சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?

Banana.
Banana.

வாழைப்பழம் உலகளவில் மிகவும் பிரபலமான பழங்களில் ஒன்றாகும், இதில் உடலுக்குத் தேவையான அதிக ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. இதன் அதிகரித்த தேவையை பூர்த்தி செய்ய, வாழைப்பழங்கள் முழுமையாக பக்குவம் அடைவதற்கு முன்பே அறுவடை செய்யப்பட்டு, இரசாயனங்களைப் பயன்படுத்தி செயற்கையாக பழுக்க வைக்கப்படுகின்றன. இந்த நடைமுறையால் வாழைப்பழங்கள் மனித ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 

ரசாயன பழுக்க வைக்கும் செயல்முறை: வாழைப்பழங்கள் இயற்கையாக பழுக்கும் நிகழ்வில் மாவுச்சத்துக்கள் சர்க்கரையாக மாறுகிறது. இதன் விளைவாக இனிப்பான அதிக சுவையுடைய பழம் கிடைக்கும். ஆனால் மக்கள் மத்தியில் வாழைப்பழத்தின் தேவை அதிகரித்துள்ளதால், எத்திலின் வாயு, கால்சியம் கார்பைடு அல்லது சில ரசாயனங்களைப் பயன்படுத்தி செயற்கையாக வாழைப்பழங்களை பழுக்க வைக்கின்றனர். 

எதிலீன் வாயு என்பது வாழைப்பழம் உள்ளிட்ட பழங்கள் இயற்கையாக பழுப்பதற்கு தானாக உற்பத்தியாகும் ஒரு ஹார்மோனாகும். ஆனால் இந்த வாயுவை செயற்கையாக பழம் பழுப்பதைத் தூண்டுவதற்கு பயன்படுத்துகின்றனர். கால்சியம் கார்பைடு ஈரப்பதத்துடன் தொடர்பு கொள்ளும்போது அசிட்டிலீன் வாயுவை வெளியிடும். இந்த வாயுவும் எத்திலீனைப் பிரதிபலிப்பதால், வாழைப்பழங்கள் பழுக்கின்றன. 

உடல்நல அபாயங்கள்: வாழைப்பழங்களை செயற்கையாகப் பழுக்க வைக்க அசிட்டிலீன் வாயு பயன்படுத்தும்போது, அதன் சில மிச்சங்கள் வாழைப்பழத்தின் மேற்புறத்தில் தங்கிவிடுகிறது. இது மனிதர்களுக்கு அபாயகரமான பொருளாகும். இதனால் ஏற்படும் உடல் அபாயங்களால் பல நாடுகளில் அசிட்டிலீன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வாயு தலைவலி, குமட்டல், தலைச் சுற்றல் மற்றும் நரம்பு மண்டலத்தில் நீண்டகால பாதிப்புகள் போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். 

வாழைப்பழங்களை செயற்கையாக பழுக்க வைக்கும்போது பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் அதன் தோலில் அப்படியே தங்கிவிடுகின்றன. இந்த ரசாயனங்களை நீண்ட காலம் எடுத்துக்கொள்வதால் பல்வேறு விதமான ஒவ்வாமைப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். 

ரசாயன முறையில் பழுத்த வாழைப்பழங்கள் இயற்கையாக பழுத்த வாழைப்பழங்களை விட வித்தியாசமான ஊட்டச்சத்து தன்மையைக் கொண்டிருக்கலாம். வேகமாக பழுக்க வைக்கும் செயல்முறையானது பழத்தின் ஊட்டச்சத்து உள்ளடக்கத்தை பாதிக்கிறது. அதாவது வாழைப்பழத்தில் உள்ள விட்டமின் சி அளவு குறைந்து, பிற நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக் கலவைகளை முற்றிலுமாக மாற்றி விடுகிறது. 

இதையும் படியுங்கள்:
ஆரோக்கியத்தை அள்ளித் தரும் Jungle Jalebi (கொடுக்காய்ப் புளி)! 
Banana.

முன்னெச்சரிக்கைகள்: 

மேலே குறிப்பிட்டுள்ள பாதிப்புகளில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள, இயற்கையாக பழுத்த வாழைப்பழங்களைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள். 

வெளியே இருந்து வாழைப்பழங்கள் வாங்கினால் நன்றாகக் கழுவிவிட்டு உட்கொள்வது நல்லது. இப்படி செய்யும்போது அதன் மேற்பரப்பில் உள்ள ரசாயன எச்சங்கள் நீக்கப்படும். 

வாழைப்பழங்களை அதிகமாக உட்கொள்ளாமல், மற்ற உணவுகளைப்போல மிதமாக உட்கொள்வது என்றும் பாதுகாப்பானது. மேலும் உணவில் பல்வேறு வகையான பழங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இதன் மூலமாக வாழைப்பழத்திற்கு பயன்படுத்தப்படும் ரசாயனங்களின் தாக்கத்திலிருந்து நாம் தப்பிக்கலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com