Rice Keratin: இனி வீட்டிலேயே முடியை ஸ்ட்ரைட் செய்யலாம்!

Rice Keratin
Rice Keratin

முடி சுருள் சுருளாக இருப்பதால், பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளதா? பார்லருக்கு போக விரும்பாதவர்கள் வீட்டிலேயே முடியை ஸ்ட்ரைட் செய்ய இந்த அரிசி கெரட்டின் முறையைப் பயன்படுத்துங்கள்.

பார்லர் செல்ல நேரம் இல்லாதவர்கள், பார்லர் சென்று பணத்தை வீணாக்க விரும்பாதவர்கள், வீட்டிலேயே இந்த கெரட்டின் செய்தால், ஆரோக்கியமாகவும், எளிதாகவும் முடியை ஸ்ட்ரைட் செய்யலாம். மேலும், இயற்கை முறையில் முடியை பராமரிக்க விரும்புவர்கள் இதனை செய்து பார்க்கலாம்.

அரிசியை முதலில் சமைத்து எடுத்துவைத்துக்கொள்ளவும். அல்லது முதல் நாள் இரவு மீதமிருந்த சாதத்தையும் இதற்குப் பயன்படுத்தலாம். பொதுவாக அரிசியில் புரதங்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இவை முடியை வலுபடுத்தப் பயன்படுகிறது. அதேபோல், இதற்கு ஆலிவ் விதைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆலிவ் விதைகளில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு மற்றும் வைட்டமின் இ ஆகியவை முடி வளர்ச்சிக்குப் பயன்படுகிறது. முடியை ஸ்ட்ரைட் செய்வதற்கு இவை இரண்டும் இருந்தாலே போதும். முடியை அழகாக நேராக்கி விடலாம்.

சாதம் சூடாக இருந்தாலோ, அல்லது பழைய சாதத்தை ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்துப் பயன்படுத்தினாலோ, நன்றாக ஆர வைப்பது மிகவும் அவசியம். அதேபோல் மற்றொரு பக்கம் ஆலிவ் விதைகளை ஊற வைத்துக்கொள்ளவும்.

 சாதத்தை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்க வேண்டும். அதன்பின்னர், அதனுடன் சேர்த்து ஊறவைத்த ஆலிவ் விதைகளையும் அரைக்க வேண்டும். பேஸ்ட் போல் அரைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அந்தக் கலவையை எடுத்துத் தலை முடியில் நன்றாக தடவவும். அதன்பின்னர் ஒரு காட்டன் துண்டை தலையில் கட்டி, அந்த பேஸ்ட் உலரும் வரை காத்திருக்கவும்.

ஏறத்தாழ இது உலருவதற்கு ஒரு மணி நேரமாகும். அதன்பின்னர், தலைக்குக் குளித்தால், முடி அழகாகவும் ஸ்ட்ரைட்டாகவும் மாறிவிடும்.

இதையும் படியுங்கள்:
30 வயதிற்கு மேற்பட்ட பெண்ணா நீங்கள்? இதோ உங்களுக்கான சருமப் பராமரிப்பு குறிப்புகள்! 
Rice Keratin

குறிப்புகள்:

  • பேஸ்ட்டைப் பயன்படுத்துவதற்கு முன்னர், கூந்தலை ஈரமாக்குவது நல்லது. ஆகையால், பேஸ்ட் தடவுவதற்கு முன்னர் ஒருமுறை தலைக்குக் குளிப்பது நல்லது.

  • தலையில் வேர்க்குரு அல்லது பொடுகு பிரச்சனைகள் இருந்தால், இந்தப் பேஸ்ட்டைப் பயன்படுத்த வேண்டாம்.

  • உங்கள் தலைமுடியின் அமைப்பைப் பற்றி தெரிந்து, ஒருமுறை நிபுணரிடம் ஆலோசித்து இந்தப் பேஸ்ட்டைப் பயன்படுத்தினால், பெஸ்ட் ரிசல்ட் கிடைக்கும்.

இந்த விஷயங்களை தெரிந்துக்கொண்டு பேஸ்ட்டை தடவுங்கள். ஆனால், இது இயற்கையான பேஸ்ட் என்பதால், எந்த பாதிப்பும் ஏற்படாது. உங்கள் முடி அமைப்பிற்கு இந்தப் பேஸ்ட் நல்ல ரிசல்ட் கொடுக்குமா? என்பதை அறிந்துக்கொண்டு பயன்படுத்தலாம் என்பதற்குதான் இந்த குறிப்பு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com