உங்கள் உடலை தொட்டுப் பார்த்தால் கடினமாக இருக்கிறதா? அது பட்டு போல மென்மையாக மாற வேண்டும் என ஆசையா? அப்படியானால் இந்தப் பதிவில் நான் சொல்லப்போவதை தினசரி பயன்படுத்துங்கள். உங்களுடைய உடல் அப்படியே பஞ்சு போல மென்மையாக மாறிவிடும்.
உங்கள் உடலை மென்மையாக்கும் ஆற்றல் ரோஜாப் பூவுக்கு உண்டு. இதைப் பயன்படுத்தி வீட்டிலேயே சோப் தயாரித்து உடலில் தேய்த்து குளித்து வந்தால், மேனி மிருதுவாக மாறிவிடும். ரோஜா சோபை எளிதாகவே நம் வீட்டிலேயே தயாரிக்கலாம். அது எப்படி எனப் பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
பன்னீர் ரோஜா இதழ்கள் - 20 கிராம்
தேங்காய் எண்ணெய் - 5 ஸ்பூன்
Soap Base - 1 கப்
சோப் மோல்ட் - 1
செய்முறை:
முதலில் பன்னீர் ரோஜா இதழ்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதை வடிகட்டி சாரை மட்டும் தனியாக பிரித்து வைத்துக் கொள்ளவும்.
அதன் பிறகு அடுப்பில் ஒரு சிறிய பாத்திரம் வைத்து, அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, அதன் மேலே மற்றொரு பாத்திரம் வைக்கவும். இதை டபுள் பாய்லிங் முறை என்பார்கள்.
பின்னர் மேலே வைத்துள்ள பாத்திரத்தில் சோப் பேஸ் சேர்த்து கொதிக்க விடவும். சோப் பேஸ் கடைகளிலேயே கிடைக்கும். அப்படி இல்லையெனில், அமேசானில் கிடைக்கிறது வாங்கிக் கொள்ளுங்கள்.
சோப் பேஸ் நன்கு கொதித்ததும் அடுப்பை அணைத்துவிட்டு அதில் ரோஜா சாறை சேர்த்து கலந்து விடவும். பின்னர் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
இந்த கலவையை ஒரு சோப் மோல்டில் ஊற்றி, சுமார் 8 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்தால், ஹோம் மேட் ரோஸ் சோப் தயார். இந்த சோப்பை குளிப்பதற்கு பயன்படுத்தி வந்தால், உங்களுடைய மேனி பளபளப்பாகவும், மிருதுவாகவும் மாறிவிடும்.