
1. காடு போல் முடி வளர ரோஸ் வாட்டர் சூப்பர்!
ரோஸ் வாட்டர் ஒரு இயற்கை டானிக். கூந்தலுக்கு பளபளப்பைத் தருவதோடு கூந்தல் நுனியில் ஏற்படும் சேதத்தைத் தடுக்கிறது.
ரோஸ் வாட்டரை உங்கள் தலையில் ஊற்றி வேர்க்கால்களில் மசாஜ் செய்ய வேண்டும். இது வேர்க்காலை வலுவாக்கி உங்கள் தலைமுடி வளர்ச்சியைத் தூண்டுகிறது. இதன் ஆன்டி ஆக்சிடண்ட்ஸ் பொடுகு மற்றும் எரிச்சலைப் போக்குகிறது.
ரோஸ் வாட்டரை தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெயுடன் கலந்து தலைக்குத் தேய்க்கும் போது உங்கள் முடி வளர்ச்சி அதிகரிக்கிறது. ஆரோக்கியமான முறையில் வேர்க்கால்களைத் தூண்டுகிறது.
ஒரு கப் ரோஸ் வாட்டரில் 10 சொட்டுக்கள் லாவண்டர் அல்லது மிளகு எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலக்கி உங்கள் கூந்தல் வேர்க்கால்களில் ஸ்ப்ரே செய்து கொள்ளலாம். இது உங்கள் முடிக்கு தேவையான நீர்ச்சத்துக்களைக் கொடுத்து பாதுகாக்கும். தலைமுடிக்கு புத்துணர்ச்சியைத் தரும்.
ரோஸ் வாட்டரை தேன், தயிர் அல்லது அவகேடோவுடன் கலந்து தலையில் பூசி அரைமணி நேரம் கழித்து தலையை அலசலாம். இது உங்கள் கூந்தலை வலுவாக்கி அழகிய நீண்ட கூந்தலை அளிக்கும்.
ரோஸ் வாட்டரை நீங்கள் ஷாம்பூ தேய்த்துக் குளித்த பிறகு கடைசியாக அலசுவதற்குப் பயன்படுத்தலாம். உங்கள் முடிக்கு மலரின் மணம் கொடுப்பதுடன் நீர்ச்சத்தையும் தக்கவைக்க உதவும். இது தலைமுடியில் சிக்குகள் ஏற்படாமல் தடுத்து, உங்கள் மிருதுவான பட்டு போன்ற கூந்தல் இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் மூலம் ஊக்குவிக்கப்படும்.
2 . வழுக்கையைப் போக்க தக்காளி ஜூஸ் பெஸ்ட்!
இதன் 'சி' சத்து முடி வளர்ச்சிக்குத் தேவையான கொலாஜனை அதிகரிக்கிறது.
இதன் லைகோபீன் ஃப்ரீ ராடிகல்களால் ஏற்படும் சேதத்தை தடுத்து முடியின் வேர்க்காலை பாதுகாக்கிறது.
இதன் 'ஏ' சத்து முடியை நீரேற்றமாக வைக்கிறது.
இதில் உள்ள துத்தநாகம் மற்றும் பயோட்டின் முடி மெலிதலைத் தடுக்கிறது.
இதன் இயற்கை அமிலங்கள் முடியின் பிஹெச்சை சீராக வைத்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
தக்காளியை அரைத்து வடிகட்டி, வழுக்கை உள்ள இடங்களில் தடவ வேண்டும். பிறகு மசாஜ் செய்ய வேண்டும். 30 நிமிடங்கள் கழித்து ஷாம்பூ போட்டு அலச வேண்டும். வாரத்தில் இரண்டு நாட்கள் இதைச் செய்யலாம்.
தக்காளியும் அலோ வேராவும்
தேவையானவை:
2 டேபிள் ஸ்பூன் தக்காளி ஜுஸ்
1 டேபிள் ஸ்பூன் அலோ வேரா ஜெல்
இரண்டையும் நன்றாகக் கலந்து பேஸ்ட் ஆக்கி தலையில் தடவவும். 45 நிமிடங்கள் கழித்து தலையை அலசவும். அலோ வேரா அழற்சியைப் போக்கி முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது.
தக்காளி ஜூசும் தேங்காய் எண்ணெய்யும்:
தேவையானவை:
2 டேபிள் ஸ்பூன் தக்காளி ஜூஸ்
1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்.
தேங்காய் எண்ணெயை லேசாக சூடுபடுத்தவும். பிறகு தக்காளி ஜூஸ் உடன் கலந்து இந்தக் கலவையை தலையில் முக்கியமாக வழுக்கை உள்ள இடங்களில் தடவவும். இதை இரவு முழுவதும் வைத்து மறுநாள் அலசலாம். வாரத்தில் இரண்டு நாட்கள் இப்படிச் செய்யலாம்.
தக்காளி ஜூஸ் மற்றும் வெங்காய ஜூஸ்:
வெங்காயத்தில் சல்பர் சத்து உள்ளது. இது முடி வளர்ச்சியைத் தூண்டும்.
தேவையானவை:
1 டேபிள்ஸ்பூன் தக்காளி ஜூஸ்
1 டேபிள் ஸ்பூன் வெங்காய ஜூஸ்
இரண்டையும் கலந்து தலையில் தடவவும். 30 நிமிடங்கள் கழித்து ஷாம்பூ போட்டு அலச வேண்டும்.
இந்த கலவையினால் தலையில் ரத்த ஓட்டம் அதிகரிக்கப்பட்டு முடி வளர்ச்சி ஊக்குவிக்கப் படுகிறது.