
சருமத்தை பொலிவாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அனைவருமே விரும்புவார்கள். அவ்வாறு சருமத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள விலை மலிவாக கிடைக்கும் ரோஸ் வாட்டரை பயன்படுத்தலாம். இதனால் சருமத்திற்கு என்ன பயன்கள் என்பதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
1. இயற்கையான பொருட்களில் செய்யப்படும் ரோஸ் வாட்டரை சருமத்தில் இரவு முழுவதும் பயன்படுத்துவதன் மூலமாக சருமத்தை பளபளப்பாக பிரகாசிக்க உதவும். செயற்கையாக செய்யப்படும் சீரத்தை பயன்படுத்துவதைக் காட்டிலும் இது மிகவும் நல்லது.
2. விஷேச நாட்களுக்கு முன்பாக சருமத்தில் ரோஸ் வாட்டர் பயன்படுத்துவது, முகத்தில் உள்ள பருக்களும், வடுக்களும் நீங்க உதவுகிறது. இதற்கு முக்கிய காரணம் இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளேயாகும். முகப்பருக்களை தூண்டும் பாக்டீரியா மற்றும் அழுக்குகளை நீக்கும்.
3. ரோஸ் வாட்டரை டோனர், கிளின்சர், மாய்ஸ்டரைசராக பயன்படுத்தலாம். இதை இரவில் சருமத்தில் பயன்படுத்துவதால் சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்க உதவும். முகத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய்யை குறைக்க உதவும்.
4. முகவறட்சி, சிவந்துப் போதல் போன்ற பிரச்னைகளை சரிசெய்து முகத்தை பளபளப்பாக மின்னச் செய்யும்.
5. முதலில் முகத்தை நன்றாக கழுவி சுத்தம் செய்த பிறகு ரோஸ் வாட்டரை பஞ்சில் தொட்டு முகத்திலும், கழுத்திலும் தடவ வேண்டும். ரோஸ் வாட்டரை தேன், கற்றாழை, பால், மஞ்சள் ஆகிய பொருட்களுடன் சேர்த்து முகத்தில் தடவுவது நல்ல பலனைத் தரும்.
6. தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன்பு இதை பின்பற்றுவது சிறந்தது. முகத்தில் உள்ள சுறுக்கங்களை போக்க ரோஸ் வாட்டர் பயன்படுத்துவது நல்லது. இதை சருமத்தில் பயன்படுத்துவதன் மூலமாக வேகமாக வயதாவதை தடுக்க உதவும். சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கும்.
இனி, இரவு உங்கள் Skin care routine ல் ரோஸ் வாட்டரையும் கட்டாயம் சேர்த்துக் கொள்ளுங்கள்.