முகத்தை அழகாக்கும் ரோஸ் வாட்டர்!

முகத்தை அழகாக்கும் ரோஸ் வாட்டர்!
Published on

ரோஸ் வாட்டர் சரும அழகை அதிகரிக்க உதவும். 2 ஸ்பூன் ரோஸ் வாட்டருடன் 2 ஸ்பூன் காய்ச்சாத பால் சேர்த்து கலந்து சருமத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும்.  பத்து நிமிடங்கள் கழித்து கழுவிவிட நம் சரும செல்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பதுடன், பளபளப்பாகவும் அழகாகவும் காணப்படும்.

வெள்ளரிக்காய் இயற்கையாகவே ப்ளீச்சிங் தன்மை கொண்டது. வெள்ளரிச்சாறில் சிறிதளவு தயிர் கலந்து கழுத்துப் பகுதி மற்றும் முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யவும். பத்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி விட முகம் பளிச்சென்று ஆகிவிடும்.

ருளைக்கிழங்கும் பிளீச்சிங் தன்மை கொண்டது. இதனை அரைத்து பேஸ்ட்டாக செய்து சருமத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி வர கரும்புள்ளிகள், கருந்திட்டுகள், தேமல் ஆகியவை மறைந்துவிடும்.

நான்கு ஸ்பூன் தயிருடன் அரை ஸ்பூன் கடலை மாவு கலந்து முகம், கழுத்துப் பகுதி, கைகளில் (வெயில் படும் இடங்களில்) தடவி மசாஜ் செய்யவும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் தேய்த்து கழுவி விட மாசு மருவின்றி சருமம் மென்மையாகவும் பளபளப்பாகவும் காணப்படும்.

துளசி சிறந்த ஆன்ட்டி ஆக்சிடென்ட் மற்றும் நிறைய ஊட்டச் சத்துக்கள் நிறைந்தது. இதனை நம் சரும செல்களின் ஆரோக்கியத்திற்கு பயன்படுத்தலாம். முகப்பரு, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் துளசியை அரைத்து தடவி வர நல்ல பலன் கிடைக்கும். அப்படியே உள்ளுக்கும் ஓரிரு இலைகளை சாப்பிட நல்லது.

புதினா புத்துணர்ச்சியை ஊட்டக்கூடிய தன்மை உடையது. அதன் வாசமே நன்றாக இருக்கும் .அதனை விழுதாக அரைத்து உடலில் குறிப்பாக முகம் ,கைகள், கழுத்துப் பகுதிகளில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவி விட சருமத்தில் உள்ள அழுக்குகளை, மாசுகளை முற்றிலும் நீக்கும்.

ம் சருமத்தின் நிறத்தை கூட்ட  நன்கு கனிந்த வாழைப்பழத்தில் பாதியை எடுத்து நன்கு மசித்து அத்துடன் தேன் ஒரு ஸ்பூன் கலந்து முகத்தில் தடவி மாஸ்க் போடவும்.20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி விட நம் சருமத்தின் நிறம் கூடும்.

ண்ணெய் பசை சருமம் உடையவர்கள் சந்தனத்தை சிறிது பன்னீரில் குழைத்து முகத்தில் தடவி மாஸ்க் போட்டு 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி விட முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய், தழும்புகள், கரும்புள்ளிகள் ஆகியவை மறைந்து விடும்.

ரு ஸ்பூன் சக்கரையுடன் எலுமிச்சை சாறு 10 சொட்டுகள், ஆலிவ் ஆயில் 2 சொட்டுகள் சேர்த்து நன்கு கலந்து  முகம், கழுத்துப் பகுதிகளில் தடவி விடவும். 10 நிமிடங்கள் கழித்து  தண்ணீரால் கழுவி விட முகத்தில் உள்ள அழுக்குகள், இறந்த சரும செல்கள் நீங்கி முகம் பொலிவு பெறும்.

பொதுவாகவே நாம் அழகாக பொலிவுடன் இருக்க நம் உடல் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். மலச்சிக்கல் என்ற பிரச்சினை வராமல் இருக்க கடுக்காய் பொடியை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து ஒரு கப் நீரில் கரைத்து இரவு படுக்கச் செல்லும் போது பருகி விட காலையில் எந்த சிரமமும் இல்லாமல் மலம் கழிக்க முடியும். மலச்சிக்கல் என்ற பிரச்சினை இல்லை என்றாலே நம் உடல் ஆரோக்கியத்துடன் அழகும் சேர்ந்து விடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com