உப்பு சமையலுக்கு மட்டும்தானா என்ன? குளியலுக்கும் தானாமே! கரிக்காதோ?

Skin Care
Skin Care

உப்பு என்றால் அனைவருக்கும் உடனே நினைவுக்கு வருவது சமையல் தான். ஆனால், உங்கள் சருமத்தையும் இந்த உப்பு பாதுகாக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா! ஆம் உண்மை தான். சருமத்தை உப்பு எப்படி பாதுகாக்கும் என்பதை விளக்குகிறது இந்தப் பதிவு.

சமையலில் சுவையைக் கூட்டுவதற்கு மிக முக்கியப் பொருளாகப் பயன்படுவது உப்பு. 'உப்பில்லாத பண்டம் குப்பையிலே' என்ற பழமொழி சமையலில் உப்பின் அவசியத்தை உணர்த்துகிறது. சமையலுக்கு மட்டுமே பயன்படும் உப்பு, சருமத்தைப் பாதுகாக்க உதவும் அழகு சாதனப் பொருள் என்பது பலரும் அறியாத உண்மை. உப்பில் கடல் உப்பு, பாறை உப்பு மற்றும் பல வகைகள் உள்ளன. இருப்பினும், கடலில் இருந்து பிரித்தெடுக்கப்படும் கடல் உப்பைத் தான் மனிதர்கள் பரவலாக பயன்படுத்தி வருகின்றனர். தற்காலப் பயன்பாட்டில் இருக்கும் சால்ட் உப்பை விட கல் உப்பு மிகச் சிறந்தது என பரிந்துரைக்கப்படுகிறது.

சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை கச்சிதமாக வெளியேற்றி, சருமத்தின் பொலிவைக் கூட்டுவதில் உப்பு சிறப்பாக செயல்படுகிறது. பலருக்கும் உப்பு எப்படி சருமத்தைப் பாதுகாக்கும் மற்றும் எப்படி இதனைப் பயன்படுத்த வேண்டும் என்ற குழப்பங்கள் இருக்கலாம். இந்த குழப்பத்திற்கு உப்பின் பயன்கள் பற்றி தெரியாமல் இருப்பது போன்ற நியாயமான சில காரணங்களும் உண்டு.

உப்பு ஸ்கரப்:

அரை கப் ஆலிவ் ஆயிலை எடுத்துக் கொண்டு அதனுடன் கால் கப் உப்பைச் சேர்த்து, குளிப்பதற்கு முன்னதாக கை, கால் மற்றும் முகத்தில் மிகவும் மென்மையான முறையில் தடவி விட்டு, சிறிது நேரம் கைகளால் ஸ்கரப் செய்து பின்னர் கழுவி விட வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால் உங்களின் சருமம் பளபளவென்று இருக்கும்.

உப்பு ஃபேஸ் மாஸ்க்:

சிலருக்கு முகத்தில் அடிக்கடி எண்ணெய் வழிவது போன்று இருக்கும். இம்மாதிரி எண்ணெய் பசையுள்ள சருமத்திற்கு சிறந்தத் தீர்வினை உப்பு அளிக்கிறது. 2 டீஸ்பூன் கல் உப்புடன், 4 டீஸ்பூன் தேனைக் கலந்து கொள்ள வேண்டும். இந்த உப்பு ஃபேஸ் மாஸ்க் கலவையை முகத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்களுக்கு அப்படியே ஊற விட்டு, அதன் பிறகு முகத்தைக் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் சருமத்தில் உருவாகும் எண்ணெய் உற்பத்தி குறைகிறது. இதன்மூலம் எண்ணெய் தன்மை நீங்கி, சருமம் புத்துணர்ச்சி அடையும்.

இதையும் படியுங்கள்:
கொரிய பெண்களின் அழகு ரகசியம் தெரியுமா?
Skin Care

உப்புத் தண்ணீர் குளியல்:

சருமம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருப்பவர்கள் அடிக்கடி உப்பு நீரில் குளித்து வந்தால், விரைவிலேயே சருமம் பழைய நிலைமைக்கு மீண்டு வரும். கடல் மற்றும் உப்பங்கழி அருகில் இருந்தால் உப்பு தண்ணீரில் எளிதாக குளிக்க முடியும். இல்லையெனில் குளிக்கும் நீரில் கல் உப்பைத் கரைத்து குளிக்கலாம். சருமப் பாதுகாப்பு மட்டுமின்றி சரும வியாதிகளுக்கும் உப்பு மிகச் சிறந்த தீர்வை அளிக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com