Sobhita Beauty Tips: சோபிதா துலிபாலாவின் அழகின் ரகசியம் இதுதான்!

Sobhita Dhulipala
Sobhita Dhulipala
Published on

நாக சைதன்யாவின் வருங்கால மனைவி சோபிதா துலிபாலா ஒரு பேட்டியில் தனது அழகின் ரகசியம் குறித்து பேசியுள்ளார்.

இந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வரும் சோபிதா 2013 ஆம் ஆண்டில் நடந்த "ஃபெமினா மிஸ் இந்தியா எர்த் 2013" பட்டத்தை வென்றார். பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்த சோபிதா, அந்த கதாபாத்திரத்தின்மூலமே தமிழக மக்கள் மனதில் பதிந்தார். சமீபத்தில் நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம் நடந்தது பேசுபொருளாக மாறியது.

நாக சைதன்யா தனது முதல் மனைவியான சமந்தாவைவிட்டுப் பிரிந்த சில காலங்கள் கழித்து சோபிதாவுடன் காதல் கொண்டார். இருவரும் இணைந்திருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளிவந்தன. இதனையடுத்து நிச்சயதார்த்தம் போட்டோ வெளியாகி வைரலாகி வந்தது. இந்தநிலையில் சோபிதா ஒரு பேட்டியில் தனது அழகின் ரகசியம் குறித்துப் பேசியிருக்கிறார்.

அதாவது, “நான் எனது சருமத்திற்கு இயற்கை பொருட்களையே அதிகம் பயன்படுத்துவேன். குறிப்பாக சரும பராமரிப்பிற்கு பாலை அதிகமாகவே பயன்படுத்துவேன். தினமும் தூங்குவதற்கு முன்னர் ஒருசில விஷயத்தை தவறாமல் செய்வேன். தினமும் இரவு தூங்கும் முன், முதலில் முகத்தில் உள்ள மேக்கப்பை நீக்கிவிட்டு, ஒரு நல்ல குளியலை மேற்கொள்வேன் முகத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளை வெளியேற்ற கடலை மாவைக் கொண்டு முதலில் மென்மையாகத் தேய்த்து கழுவுவேன்.

அதன்பின் பப்பாளி போன்ற பழங்களைக் கொண்டு முகத்தை சுத்தம் செய்வேன் சருமத்துளைகளில் ஆழமாக தேங்கியிருக்கும் அழுக்குகளை நீக்க பச்சை பாலைப் பயன்படுத்துவேன். உதடுகள் நன்கு பட்டுப் போன்று மென்மையாக இருக்கத் தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவேன். புருவங்கள் நன்கு வளர விளக்கெண்ணெயும், முடி அழகாக வளர தேங்காய் எண்ணெயும் பயன்படுத்துவேன்.

இதையும் படியுங்கள்:
ராஷ்மிகா பயன்படுத்தும் ஃபேஸ் பேக் இதுதான்… அவரே சொன்ன டிப்ஸ்!
Sobhita Dhulipala

இவையனைத்தையும்விட தினமும் போதுமான அளவு நீர் அருந்துவேன். தினமும் தவறாமல் மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்துவதோடு, வாரம் ஒருமுறை ஹைட்ரேட்டிங் ஷீட் மாஸ்க்கையும் பயன்படுத்துவேன். சன்ஸ்கிரீனை தினமும் போடுவேன்.

அதை குளிர்காலங்களில்கூட தவறாமல் பயன்படுத்திவிடுவேன். அதேபோல், டயட்டிலும் உடற்பயிற்சியிலும் கவனமாக இருப்பேன். டயட்டில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்களை அதிகமாக எடுத்துக்கொள்வேன். மன அழுத்தத்தை முற்றிலும் தவிர்த்து, நேரத்திற்கு சரியாக தூங்கிவிடுவேன்.” என்று தனது பழக்கம் மற்றும் வழக்கங்களைப் பகிர்ந்துக்கொண்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com