
பெண்கள் தங்கள் முகமும், சருமமும் எந்த வயதிலும் அழகாக, பளபளப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அதற்காக நிறைய டெக்னிக்குகள் மற்றும் அழகுக்குறிப்புகளை பயன்படுத்துவார்கள். ஜப்பானிய பெண்களின் சருமம் எப்போதும் பளபளப்பாகவும் பொலிவுடன் இருக்கும். அவர்கள் கையாளும் 9 டெக்னிக்குகளை பெண்கள் கடைபிடித்தால் ஜப்பானியப் பெண்கள்போல எப்போதும் அழகாகத் திகழலாம். 9 டெக்னிக்குகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. ஃபிரஷ் காய்கறிகள், பழங்கள், உணவுகள்;
ஜப்பானிய கலாச்சாரத்தின் மிகவும் பாராட்டத்தக்க அம்சங்களில் ஒன்று பருவகால பழங்கள், காய்களை வாங்குவது. அவர்கள் சந்தை அல்லது பண்ணைகளில் இருந்து நேரடியாக பெறப்படும் ஃபிரஷ்ஷான உணவுப் பொருட்களை விரும்புகிறார்கள். இந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதால் அவர்களின் சருமம் ஈரப்பதமாகவும் பொலிவுடன் பளபளப்பாகவும் இருக்கிறது.
2. நீரேற்றம்;
சருமம் பளபளப்பாக இருக்க அவர்கள் வெறும் தண்ணீர் மட்டும் குடிப்பதில்லை. தேநீர் வகைகளில் கிரீன் டீ. மட்ஸா போன்ற பானங்கள் அவர்களின் சருமத்தை நீரேற்றத்துடன் வைக்கிறது. உடலில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறி உடல் பளபளப்பாகத் திகழ்கிறது.
3. எப்போதும் சுறுசுறுப்பு;
நம்ம ஊர் ஆட்களைப்போல எதற்கெடுத்தாலும் டூ வீலரை ஓட்டிக்கொண்டு செல்லும் வழக்கம் அவர்களுக்கு இல்லை. கடைக்கு நடந்த செல்வது, சைக்கிள் ஓட்டுவது, பாரம்பரிய தற்காப்புக் கலைகளில் ஈடுபடுவது என அவர்களின் வாழ்க்கை முறை முழு நாளுமே சுறுசுறுப்பாக இருக்கிறது. இதனால் இருதய ஆரோக்கியம், ரத்த ஓட்ட மேம்பாடு சருமத்தின் இயற்கையான பளபளப்பு போன்றவை ஏற்படுகின்றன.
4. சருமம் பராமரிப்பு;
சரும பராமரிப்பு என்பது ஜப்பானியர்களுக்கு ஒரு ஆடம்பரம் அல்ல. அது ஒரு அடிப்படை தேவை. அவர்கள் கடையில் விற்கும் காஸ்மெட்டிக் பொருட்களை அதிகம் உபயோகிக்காமல் வீட்டிலேயே தங்களை இயற்கை பொருட்களை வைத்து அழகுபடுத்திக் கொள்கிறார்கள்.
5. தூக்கம்;
தினமும் 7 மணி நேரம் நன்றாக தூங்கி ஓய்வெடுக் கிறார்கள். இது உடல் சரும செல்களை மீளுருவாக்கம் செய்ய உதவுகிறது. நாள் முழுக்க புத்துணர்ச்சியுடன் திகழ வைக்கிறது.
6. புளித்த உணவுகள்;
ப்ரோபயாட்டிக்குகள் நிறைந்த புளித்த உணவு, தயிர், ஊறுகாய்கள் காய்கறிகள் போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்வதால் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கிறது. அதனால் சருமமும் தெளிவாக இருக்கிறது.
7. சமச்சீரான உணவு;
ஜப்பானிய பெண்கள் எப்போதும் உணவை ஃபுல் கட்டுக் கட்டாமல் சிறிய அளவில் அதே சமயம் சமச்சீரான உணவை எடுத்துக் கொள்கிறார்கள். செரிமானம் சீராக நடந்து ஊட்டச்சத்துக்கள் கிடைக்கப்பெற்று சருமம் தெளிவாக பளபளப்பாக விளங்குகிறது.
8. குளியல்;
தினமும் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது அவர்கள் வழக்கம். இது சுகாதாரத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் மனஅழுத்த நிவாரணம் அளித்து, மனதிற்கு தேவையான தளர்வை தந்து சருமத்தை அழகாக பளபளப்பாக வைக்கிறது.
9. மினிமலிஸ்ட் வாழ்க்கை முறை;
அவர்கள் தேவைக்கு மேல் பொருள்களை வீடு நிறைய சேர்த்து வைப்பதில்லை. மிக அவசியமான பொருட்களை வீட்டில் வைத்துக்கொள்கிறார்கள். அவற்றை சுத்தமாகவும் மெயின்டெயின் செய்கிறார்கள். அதுபோலவே தங்களது சருமத்திற்கும் தேவையில்லாத கெமிக்கல் கிரீம்கள் போன்றவற்றை உபயோகிக்காமல் இயற்கையான முறையில் அழகை பராமரிக்கிறார்கள். அழகு சாதன பொருட்களை குறைவாகவே உபயோகப்படுத்துகிறார்கள்.