வீட்டிலேயே கால்களுக்கு பெடிக்யூர் செய்து காசை மிச்சப்படுத்தலாமே? 

 Pedicure
Save money by doing pedicures at home.

பளபளப்பான ஆரோக்கியமான கால்கள் என்பது அழகு மற்றும் தன்னம்பிக்கையின் அடையாளம். ஆனால், அழகு நிலையத்திற்கு சென்று பெடிக்யூர் செய்ய நேரமும் பணமும் எப்போதும் இருப்பதில்லை என கவலைப்படுகிறீர்களா? இனி அந்த கவலை வேண்டாம். வீட்டிலேயே எளிதான பொருட்களைப் பயன்படுத்தி நீங்கள் பெடிக்யூர் செய்து கொள்ளலாம். 

இந்தப் பதிவில் வீட்டிலேயே பெடிக்யூர் செய்வதற்கான படிப்படியான வழிமுறைகளைப் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்: 

  • ஒரு பெரிய அகலமான வாளி

  • வெந்நீர் 

  • உப்பு ½ கப்

  • ஷாம்பூ 

  • பாதத்தை தேய்க்கும் கல் 

  • நைல் கட்டர் மற்றும் ஃபைல் 

  • கைகளுக்கு பயன்படுத்தும் லோஷன் ¼ கப்

  • டவல்கள் 

  • மென்மையான துணி 

  • பஞ்சு 

பெடிக்யூர் செய்யும் முறை: 

முதலில் ஒரு சுத்தமான, உங்களுக்கு வசதியான இடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். பின்னர் மேலே குறிப்பிட்டுள்ள எல்லா பொருட்களையும் அந்த இடத்தில் வைத்து, சுத்தமான டவலை கீழே பரப்பி உங்கள் கால்களை அதன் மீது வைத்து அமரவும். 

ஒரு பெரிய வாளி அல்லது தொட்டியில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் உப்பு மற்றும் ஷாம்பு போட்டு நன்றாகக் கலக்கவும். பின்னர் உங்கள் கால்களை இந்த கலவையில் சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். இது அழுக்குகள் மற்றும் இறந்த சரும செல்களை நீக்க உதவும். 

உங்கள் கால்களை ஊற வைத்ததும் பாதத்தை தேய்க்கும் கல் பயன்படுத்தி பாதங்களை மெதுவாக தேய்க்கவும். குதிகால், கால் விரல்கள் மற்றும் நகங்களுக்கு இடையே உள்ள பகுதிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தி தேய்க்கவும். மிருதுவான பகுதிகளில் அழுத்தி தேய்க்க வேண்டாம். ஏனெனில் இது சருமத்தை எரிச்சலடையச் செய்யும். 

நெயில் கட்டர் கொண்டு உங்கள் கால் நகங்களை வெட்டவும். பின்னர் அதில் உள்ள கூர்மையான விளிம்புகளை ஃபைல் பயன்படுத்தித் தேய்த்து அழகாக வடிவமைக்கவும். பின்னர் உங்களுக்கு விருப்பம் இருந்தால் நெயில் பாலிஷ் பயன்படுத்தலாம் அல்லது ஏற்கனவே இருக்கும் நெயில் நெயில் பாலிஷை, நெயில் பாலிஷ் ரிமூவர் மற்றும் பருத்தி பஞ்சு பயன்படுத்தி அகற்றவும். 

இதையும் படியுங்கள்:
சாபம் என்றால் என்ன? தீயவர்கள் சாபம் விட்டால் பலிக்குமா? 
 Pedicure

அடுத்ததாக உங்களிடம் லோஷன் இருந்தால் கால்களில் தாராளமாகத் தடவி நன்கு மசாஜ் செய்யவும். இது உங்கள் கால்களை ஈரப்பதமாக வைத்திருக்க உதவும். 

இறுதியாக அனைத்தையும் செய்து முடித்ததும் கால்களை சுமார் 15 நிமிடம் அப்படியே உலர விடுங்கள். பின்னர் நன்கு ஓய்வெடுக்கவும். 

இவ்வாறு, உங்கள் வீட்டிலேயே பெடிக்யூர் செய்வது எளிதானது மற்றும் அதிகப்படியான செலவை மெச்சப்படுத்தக்கூடியது. மேலும் இது உங்கள் கால்களை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும். தேவையில்லாமல் பணத்தை பியூட்டி பார்லரில் செலவழிப்பதற்கு பதிலாக, இப்படி எளிதாக நீங்களே வீட்டிலேயே உங்கள் பாதங்களை அழகுப்படுத்திக் கொள்ளலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com