
பெண்களுக்கு எப்படி தலையில் முடி அதிகமாக வளர்கிறதோ, அப்படித்தான் ஆண்களுக்கு உடலில் முடி அதிகமாக வளரும். இது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், சிலசமயம் இது சிலர் விஷயத்தில் நேர்மாறாக இருக்கும். ஆண்களுக்கு தலையில் அதிகமாக முடி வளரும். பெண்களுக்கு உடலில் முடி அதிகமாக வளரும். இதுவும் இயல்பே. இப்படி இருப்பவர்கள் அடிக்கடி ஷேவ் செய்து கொள்வார்கள்.
அதுவும் பெண்கள் தற்போது வலியை அனுபவித்துக் கொண்டு வேக்ஸ் செய்கிறார்கள். குறிப்பாக, முகத்தில் உள்ள முடியையும் நீக்க வேக்ஸ் செய்கிறார்கள். உடலில் உள்ள சதையை விட முகத்தில் உள்ள சதை சற்று மெல்லியதாகும். ஏனென்றால், துவாரங்கள் அதிகமுள்ள பகுதி முகம். இதனால் வேக்ஸ் செய்யும்போது உச்சக்கட்ட வலியைக் கொடுக்கும்.
முந்தைய காலங்களில் உள்ள பெண்களும் இந்தப் பிரச்னையை எதிர்கொண்டுள்ளனர். ஆனால், அவர்களுக்கு இயற்கை மருந்தாக மஞ்சள் இருந்தது. தற்போது உள்ள பெண்கள் மஞ்சள் பூசிக்கொள்வதில் அதிக நாட்டம் காட்டுவதில்லை. க்ரீம், டோனர் என விதவிதமாக முகத்தில் பூசுவதால் பெரும்பாலான பெண்களுக்கு மஞ்சள் பூசுவதில் விருப்பமேயில்லை. இதனால் இதற்கு மாறான வழிகளை தற்போது பார்க்கலாம். (Say goodbye to unwanted hair.)
மக்காசோள மாவு: ஒரு முட்டையின் வெள்ளைப் பகுதி, ஒரு ஸ்பூன் சர்க்கரை, அரை ஸ்பூன் மக்காச்சோள மாவு ஆகியவற்றை ஒன்றாகப் பேஸ்ட் போல் கலந்து முகத்தில் தடவி அரை மணி நேரம் காத்திருக்கவும். இப்படி வாரம் 2 - 3 முறை செய்தால் தேவையற்ற ரோமங்கள் அகன்றுவிடும்.
கடலை மாவு: கால் கப் கடலை மாவு, கால் கப் தேன், ஒரு கப் தண்ணீர் மற்றும் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு நான்கையும் ஒன்றாக பேஸ்ட் போல் கலந்து முகத்தில் சீராகத் தடவுங்கள். அது காய்ந்து உதிரும் வரை காத்திருந்து வெது வெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும். இப்படி மாதம் இரண்டு முறை செய்தாலே போதும். நல்ல பலன் கிடைக்கும்.
சர்க்கரை: எலுமிச்சை மற்றும் சர்க்கரை இரண்டையும் சம அளவில் எடுத்துக்கொண்டு நன்கு கலக்குங்கள். பின் அதை முகத்தில் தேய்த்துக் காய்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவினால் முடிகள் உதிரத் துவங்கும்.
கொண்டைக் கடலை மாவு: கொண்டைக் கடலை மாவுடன் மஞ்சள் ஒரு ஸ்பூன் சேர்த்து பேஸ்டாகக் கலந்து முகத்தில் தடவி வர, நாட்கள் செல்லச் செல்ல தேவையற்ற ரோமங்கள் உதிர்வதைக் கண்கூடாகக் காணலாம். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்து பலன் பெறலாம்.