Beauty secrets
Beauty secrets for you!

வாட்டும் குளிரிலும் மின்னும் மேனி: இதோ உங்களுக்கான அழகு ரகசியங்கள்!

Published on

குளிர்காலம் வந்தாலே நம் சருமம் வறண்டு பொலிவிழந்து போகும் பல்வேறு சரும பிரச்னைகளும் எட்டிப் பார்க்கும் குளிரிலிலிருந்து நம் சருமத்தை பாதுகாக்க சில பயன்பாடுகளை செய்யவேண்டும்.

குளிர்காலத்தில் தாகம் குறைவதால் நாம் நிறைய தண்ணீர் குடிக்க மாட்டோம் நீர்ச்சத்து உடலில் குறையும்போது சருமம் வறண்டு சுருங்கும்.

புரதம் ஸ்டார்ச் வைட்டமின் மினரல் கலந்த உணவு சாப்பிட வேண்டும் சரும வறட்சியை தடுக்க ஆலிவ் எண்ணெய் அல்லது ஆல்மண்ட் எண்ணை தடவிக் கொண்டு சூரிய ஒளி படுமாறு இருக்க வேண்டும். பிறகு வெதுவெதுப்பான நீரில் குளிக்கவேண்டும் இதனால் சோர்வு நீங்கி இரத்த ஓட்டம் சீராகும் வறட்சி நீங்கி புத்துணர்வு பெறலாம்.

தோல் சீவிய வெள்ளரிக்காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி அத்துடன் நான்கு ஸ்பூன் ஆல் மண்ட் எண்ணெய்  ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து அரைக்க வேண்டும். இதை பேஸ் பேக்காக முகத்தில் போட்டு அரைமணிநேரம் கழித்து கழுவவேண்டும் உங்கள் முகத்தில் புதுப்பொலிவுஉண்டாகும் இந்த ஃபேஸ் பேக்கை வாரம் ஒருமுறை உபயோகிக்கலாம்.

உருளைக்கிழங்கு மற்றும் பாதாம் பருப்பை ஒன்றாக அரைத்துக் கொண்டு தினமும் படுக்கப் போகும் முன் கண்களுக்கு கீழே தடவி வந்தால் கருவளையம் மறைந்துவிடும்.

அரை கிலோ வெந்தயத்துடன் உருளைக்கிழங்கு ஸ்டார்ச் பவுடர் பூலான் கிழங்கு சீயக்காய் மூன்றையும் தலை நூறு கிராம் சேர்த்து அத்துடன் வெட்டிவேர் பத்து கிராம் கலந்து சீயக்காய் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பவுடரை வாரம் இருமுறை தலைக்கு தேய்த்து குளித்தால் வறண்ட கூந்தல் குளிர்காலத்தில் மிருதுவாக மாறும்.

இதையும் படியுங்கள்:
ஜொலிக்கும் சருமம் வேண்டுமா? இதோ உங்களுக்கான 5 எளிய ரகசியங்கள்!
Beauty secrets

குளிர்காலத்தில் பாதங்களில் நகங்களில் வெடிப்பு ஏற்படும். ஒரு டீஸ்பூன் உருளைக்கிழங்கு ஸ்டார்ச் பவுடர் அரை டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் இரண்டையும் கலந்து அது பேஸ்ட் ஆகும் அளவுக்கு எலுமிச்சை சாறு சேர்த்து பாத வெடிப்பு நகங்களில் ஏற்படும் வெடிப்பு இவைகளில் தடவினால் வெடிப்புகள் சரியாகும்.

குளிர்காலத்தில்  வெளியில் அலைபவர்கள் கட்டாயம் சன் ஸ்கிரீன் லோஷன் உபயோகிப்பது அவசியம் மற்ற நாட்களை விட குளிர் காலத்தில் சூரியனின் அல்ட்ரா வைலட் கதிர்கள் அதிகப்படியாக பூமி மீது விழுவதாலேயே  குளிர்கலத்தில் சட்டென கருத்து போகிறோம் இதை தடுக்க சன் ஸ்கிரீன் லோஷன் மிகவும் அவசியம்.

குளிர்காலத்தில் சருமம் வறண்டு போகாமல் இருக்க பிரஷ் கிரீமுடன் தேன் கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி வந்தால் சருமம் வறண்டு போவதை தடுக்கலாம். 

புதிய ரோஜா இதழுடன் சிறிது பால் அல்லது பிரஷ் கிரீன் சேர்த்து அரைக்க வேண்டும். அதனுடன் சிறிது கடலை மாவு மற்றும் பன்னீர் சேர்த்து கலந்து முகம் மற்றும்கழுத்து பகுதிகளில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் முகம் புத்துணர்வுடன் காணப்படும்.

குளிர்காலத்தில் நம் பாதங்களில் பித்த வெடிப்பு எட்டிப் பார்க்கும் பாதம் அதிக குளிர்ச்சியாக உணர்ந்தால் இரவில் ஆலிவ் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்துவிட்டு தூங்கவேண்டும்.

வேப்பிலை மருதாணி, மஞ்சள் மூன்றையும் அரைத்து பூசினால் பித்த வெடிப்பு குணமாகும் தினமும் படுக்கப் போகும் முன் தேங்காய் எண்ணெயை அல்லது வேப்ப எண்ணெயை பாதங்களில் தடவி வந்தால் வெடிப்பு வராமல் காத்துக்கொள்ள முடியும். 

இதையும் படியுங்கள்:
குளிர்காலச் சோம்பலை விடுங்கள்... சரும ஆரோக்கியத்தைப் பெறுங்கள்!
Beauty secrets

கசகசாவை எருமை தயிரில் அரைத்து தினம்தோறும் இரவு படுக்க போகும் முன் முகத்தில் தடவி வந்தால் முகம் பளபளப்படைந்து  குளிர் காலத்தினால் ஏற்படும் சுருக்கங்கள் நீங்கி பொலிவு பெறும்.

பன்னீரை உடலுக்கு எண்ணெய் தேய்த்துவிடுவது போன்று உடல் முழுக்க தேய்த்துக்கொண்டு சில நிமிடங்களுக்கு பின்னர் உடலை துண்டால் துடைத்துவிட்டு குளிக்கவேண்டும் இதுபோன்று தினசரி செய்து வந்தால் விரைவில் தோலின் வறட்சி அகன்று புதுப்பொலிவுடன் இருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com