ஜொலிக்கும் சருமம் வேண்டுமா? இதோ உங்களுக்கான 5 எளிய ரகசியங்கள்!

Beauty tips in tamil
Want glowing skin?
Published on

கிளின்ஸர்:

ருமப் பராமரிப்பில் முதலில் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைதான் கிளின்ஸர். முகத்தில் படிந்திருக்கும் அழுக்குகளையும் எண்ணெய் பிசுக்கையும், மேக்கப்பையும் சுத்தம் செய்து முகத்தை ஜொலிக்கச் செய்யும். இது கிரீமாகவும், ஜெல் வடிவிலுமாகக் கிடைக்கிறது.

எக்ஸ்ஃபாலியேட்:

து சருமத்தின் மேல் இருக்கும் இறந்த செல்களைச் சுத்தம்செய்து முகத்தைப் பொலிவாக்கும். இதனால், கரும்புள்ளி, பிக்மென்டேஷன் போன்ற பிரச்னைகள் தீரும். இதை வீட்டிலேயேகூட இயற்கையாக செய்து பயன்படுத்தலாம்.

ஜீனி ஒரு டீஸ்பூன் எடுத்துக்கொண்டு சுத்தமான தேங்காய் எண்ணெய்யை நன்றாக கலந்து முகத்தில் தடவி, மிருதுவாக ஸ்க்ரப் செய்யவும். இதனால் தேவையில்லாத இறந்த செல்கள் நீங்கி முகம் பளபளப்பாகும்.

ஹைடிரேஷன்:

தைச் செய்வதால் சருமம் ஈரப்பதத்துடன் காணப்படும். இதற்காக நிறைய மாய்டரைஸர்கள் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இதனுடைய வேலை சருமத்தின் வறட்சியை போக்கி ஈரப்பதத்தை உண்டாக்குவதேயாகும். இயற்கையாகவே சருமம் ஈரப்பதத்துடன் இருப்பதற்கு நிறையத் தண்ணீரை குடிப்பது நல்லது.

பேஸ் சீரம்:

ருமத்திற்கான நான்காவது பராமரிப்புதான் பேஸ் சீரம். இது சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துகளைக் கொடுக்கும். பேஸ் சீரத்தை சருமம் எளிதாக உறுஞ்சிக்கொள்ளும்.  பேஸ் சீரத்தில் வைட்டமின் சி, வைட்டமின் ஈ, கெராட்டின் போன்ற ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் அது சருமப் பொலிவை மேம்படுத்த உதவுகிறது.

பேஸ் சீரம் தினமும் பயன்படுத்துவதால் சருமத்தில் உள்ள கரும்புள்ளி, சரும வறட்சி, பிக்மென்டேஷன், சுறுக்கம் போன்றவை நீங்கி முகம் பளபளப்பாகும்.

இதையும் படியுங்கள்:
இனி பார்லர் போகத் தேவையில்லை: வீட்டிலேயே 'நேச்சுரல் க்ளோ' (Natural Glow) பெறலாம்!
Beauty tips in tamil

சன் ஸ்கிரீன்:

ரும பராமரிப்பில் உள்ள கடைசி கட்டம். ஆனால், அத்தியாவசிய கட்டம்தான் சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது. சன் ஸ்கிரீனை பயன்படுத்துவது சருமத்தை சூரிய ஒளியில் இருந்தும் புற ஊதா கதிரிலிருந்தும் பாதுகாக்கும். நிறைய சன் ஸ்கிரீன்கள் கடைகளில் கிடைத்தாலும் எஸ்.பி.எப் 30க்கு மேல் இருப்பதை பயன்படுத்துவதே  சருமத்திற்கு நல்ல பாதுகாப்பைத் தரும். எஸ். பி.எப் என்பது சூரிய கதிரில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கக்கூடிய பேக்டராகும். அது எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக உள்ளதோ அவ்வளவுக்கு அவ்வளவு சூரிய ஒளியில் இருந்து பாதுகாப்பு சருமத்திற்குக் கிடைக்கும்.

எனவே, இந்த ஐந்து முறைகளான கிளின்ஸர், எக்ஸ்பாலியேட், ஹைடரேட்,சீரம், சன் ஸ்கிரீன் ஆகியவற்றைப் பயன்படுத்தி முகத்தை பராமரிப்பது சிறந்த முறையாகும். இதனால், முகச் சருமம் மிருதுவாகவும், பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

-நான்சி மலர்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com